பல்லைக் காட்டாதே
என்ற
அம்மாவின் குரலுக்கு
பல்லைக் காட்டினாள்
வலதுகையால் எதையும் கொடு
என்ற
அப்பாவின் கேட்டலுக்கு
இடதுகையால் பதில்
தரையைப் பார்த்துத்தான் நடக்கணும்
அக்காவின்
அறிவுறுத்தலுக்குப் பின்
நடக்கவேயில்லை தரையைப் பார்த்து
கழித்தலும்
கூட்டலும்
வகுத்தலும்
அறிந்த அவள் குடும்பத்திற்கு
புரியாமலே போனது
இந்த
எதிர்விகிதக் கணக்கு.
.
Tweet | |||||
வீட்டுல சுட்டியா இருந்தா புரியாத கணக்குத்தான் போடப்படும்....
ReplyDeleteரசித்தேன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.
Deleteஇதில் தவறு யாருடையது!
ReplyDeleteநிச்சயம் தவறு அந்தப் பெண்ணிடம்தான். ஆனால் எதிர்விகிதத்தை புரிந்துகொண்டு பக்குவமாய் சொல்லித் திருத்தாதது பெற்றோர் தவறு. வருகைக்கும் அருமையான கேள்விக்கும் நன்றி சென்னைப்பித்தன் சார்!
Deleteபெற்றோர் சொல்லி்த்தரும் கணக்கு
ReplyDeleteஆசிரியர் சொல்லித்தரும் கணக்கு
இவற்றையெல்லாம் விட வாழ்க்கை நமக்குச் சொல்லித்தரும் கணக்கு புரிந்துகொள்ளக் கடினமானது.
அருமையான கவிதை நண்பரே
நிச்சயம் நீங்கள் சொன்னது அருமையான தத்துவமொழி முனைவரே! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
Deletepinnoottam padiththa pinnethaan
ReplyDeletepurinthathu....
pakirvukku nantri!
அப்படியா சகோ. ஓ.கே. வருகைக்கு நன்றி!
Deleteகிழக்கே போ என்றால் மேற்கே போகும் குணம் சிலருக்கு!
இப்படி சிலரை நானும் கண்டிருக்கிறேன்
அப்படியா ஐயா! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Deleteதானாக வரும் சில கணக்குகள் அவர்களை மாற்றி விடும்...
ReplyDeleteஅப்படியா? ஓ.கே. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சார்!
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி.