Tuesday, October 16, 2012

உங்கள் வாழ்க்கையின் Dead Line எது?




சின்ன சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி.

எல்லாவற்றுக்கும் இறுதிக்கெடு (Dead Line) என்று ஒன்று இருக்கிறது. டெலிபோன் பில் கட்ட ஒரு இறுதிக் கெடு; கரண்ட் பில் கட்ட ஒரு இறுதிக் கெடு; வருமான வரி தாக்கல் செய்ய ஒரு இறுதிக் கெடு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நம் வாழ்க்கையில் நிறைய இறுதிக் கெடுக்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

சரி எல்லாவற்றுக்கும் இறுதிக்கெடு எது? Dead Line of Dead Lines எது? புத்திசாலியாய் இருந்தால் விடை கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம். அது மரணம்தான். மரணமே எல்லாவற்றுக்கும் Dead Line ஆக இருக்கிறது. மனிதன் இதனை உணர்வதே இல்லை. இருக்கும் வரை ஆட்டம். இறுதியில் உலகை விட்டே ஓட்டம் என்பதே மனிதர்களின் சிந்தனையாக இருக்கிறது.

நிறைய சம்பாதிக்கிறோம். வீடு கட்டுகிறோம். பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருகிறோம். சொத்து சேர்க்கிறோம். ஜாலியாக வாழ்கிறோம். கடைசியில் மரணம் அடைகிறோம். இதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டோமா? மனிதப் பிறவியின் உன்னத நோக்கத்தை நாம் என்று உணர்ந்துகொள்வோம்?

சுயநல வாழ்க்கை துறந்து பொதுநல நோக்கம் கொள்வோம். இல்லாதவர்கள், வறியவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு உதவி செய்யலாம். ஏதாவது சமூக சேவை இயக்கத்தில் பங்கெடுக்கலாம். ஏதோ நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்வோம். நாம் மட்டும் வாழாமல் மற்றவர்களையும் வாழ வைப்போம். அதுவே உண்மையான சந்தோஷம்.

மரணத்தின் கௌரவம் எது? பாடையின் பின்னே கிளம்பும் புகழ்மொழிதான். அதுதான் வாழ்ந்தற்கு அடையாளம்.

எனவே,

வாழ்க்கை நிலையில்லாதது. மரணம் நிச்சயமானது. மற்றவர்களுக்கு உதவுவோம். 11 மணிக்கல்ல 10 மணிக்கே உதவுவோம். ஏனெனில் 10.30-க்கே மரணத்தை சந்திக்க நேரிடலாம்.

மீண்டும் அடுத்த சிந்தனைத் துளியில்....!



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

7 comments:

  1. /// பாடையின் பின்னே கிளம்பும் புகழ்மொழிதான். அதுதான் வாழ்ந்தற்கு அடையாளம். ///

    குறள் எண் : 236

    சிறப்பான சிந்தனை... நன்றி...

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு
    உண்மையில் எம் பிறப்பின் அர்த்தமே மரணத்தின் பின் உள்ள வாழ்க்கையில் நாம் நலமாக வாழவேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும். இவ்வுலக வாழ்க்கை இன்னும் சொற்பகாலத்தில் அழிந்துவிடும்

    ReplyDelete
  3. அருமையான சிந்தனைத் துளி
    இறுதிக் கெடுவுக்கள் கட்ட வேண்டிய பில்களை எல்லாம்
    கட்டி முடித்தவன் இறுதிக் கெடுவு நாளில் பதட்டம் இன்றி
    இருப்பதைப் போல நாமும் செய்ய வேண்டிய பணிகளை
    ஒத்திப்போடாமல் செய்வோமாக என உணர்த்திப் போகும்
    பதிவு அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சிறந்த சிந்தனை. ஆம் பிறப்பின் பயனே அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்ததைச் செய்வதுதானே. நன்றி

    ReplyDelete
  5. unmaithaan sako...


    muyarchippom...

    ReplyDelete
  6. I have shared/ written about you in todays post

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.