பேருந்தில்
அந்த பெண்
எவ்வளவு ஏசியும்
எழவில்லை அந்த சிறுவன்
இடமும் வலமுமான
இடப்பெயர்ச்சி
மேலும் கீழுமாக மாறவில்லை
காரமும் உப்புமாக
பொரிந்த
மசாலாப் பேச்சுகளுக்கு
கவிழ்ந்த பார்வையே பதில்
பொறுத்து பொறுத்துப் பார்த்தவள்
குண்டுக்கட்டாய் தூக்கியபோது
பிருஷ்டத்தில் சிரித்தது
வறுமை.
.
Tweet | |||||
vethanai...
ReplyDeleteவேதனைதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
Deleteஅழகாகவும் நயமாகவும் சொன்னீர்கள் நண்பரே..
ReplyDeleteநன்று.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவரே!
Deleteஅருமை அருமை
ReplyDeleteமிகச் சுருக்கமாக
வடிவம் சிறியது ஆயினும்
உட்கருத்து பூதாகாரமாய்...
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி ரமணி சார்.
Deleteஉண்மை... ஆனால் வறுமை மிக கொடுமை...
ReplyDeleteஆம். கொடுமைதான். நன்றி தனபாலன் அவர்களே!
Deleteவறுமையின் வழியை அழகாக சொல்லியுல்லிர்கள்
ReplyDeleteஇன்று
ReplyDeleteரொமான்ஸ் ரகசியங்கள் - ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 2
நலமா நண்பரே!நீண்ட நாள் காணவில்லை! வேலை அதிகமோ! சுருங்கச் சொன்னாலும் சுவைபடச் சொன்னீர்!
வணக்கம் புலவரய்யா! கொஞ்சநாள் அலுவலக வேலை காரணமாக தொடர்ந்து வர இயலவில்லை. இப்போது கொஞ்சம் ப்ரீயாக இருக்கிறது. அதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!
Deleteஒருவனின் வறுமையும்
ReplyDeleteபிறரின் சிரிப்பு குணமும்
மனிதனின் யாதார்த்தை தோலிருத்துக் காட்டுகிறது சார்
வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்!
Deleteபடத்தைப் பார்க்கும் போதே கனத்து கண்ணீர் வருகிறது .
ReplyDeleteஅப்படியா சகோ? எனக்கும்தான். மெல்லிய இதயம் கொண்டவர் நீங்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
Deleteமிகவும் கொடுமை.
ReplyDeleteஅதை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.
தங்களது முதல் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. ராஜி!
Deleteகச்சிதம்!அருமை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ. குட்டன்!
Deleteபடத்துக்கு கவிதையா? கவிதைக்கு படமா? பார்த்தும், படித்தும் உணர்வையிழந்தேன் அண்ணா.
Deleteஅப்படியா ராஜி! அழகான கருத்துரைக்கும் ஆழமான வாசிப்பிற்கும் மிக்க நன்றி சகோ.
Delete