Saturday, September 15, 2012

சண்டக்கோழிகள்

அமைதியான அந்த ஊரை அதிர வைத்தன அந்த இரண்டு சண்டக்கோழிகளும். ஒரு கோழி தன் எஜமானனிடம் சென்று “போட்டி ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள்! தெரியட்டும் யார் பெரியவன் என்று” என கர்ஜித்தது. மற்றொரு கோழி தன் எஜமானனிடம் சென்று “அவனா நானா என்று பார்க்கணும். வையுங்கள் போட்டியை” என்று சீறியது. ஊர் கூடி முடிவு செய்தது வைத்தே விடுவது போட்டியல்ல தேர்தலென்று.

பிரச்சாரம் அனல் பறந்தது. இரண்டு பிரிவாய் பிரிந்த கோழிகள் ஒன்றையொன்று தாக்கி போஸ்டர் அடித்தன. நாகரீகமாய் தொடங்கிய வார்த்தை யுத்தம் போகப் போக நாறியது. எல்லை மீறியது. அசிங்க வார்த்தைகள் அச்சில் ஏறின. கோஷங்கள் மாறின. கோஷ்டிகளும் மாறின. கட்சித் தாவலும், ஆட்கடத்தலும் சகஜமாயின.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருந்தபோது இடியாக வந்திறங்கியது ஓர் செய்தி. பறவைக்காய்ச்சல் நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து வந்தது அந்த ஊருக்குள். கிராம சபை கூடியது. அரசாங்க மருத்துவர் எழுந்து “கோழிகள், பறவைகளை முழுவதுமாக அழிக்காவிட்டால் ஊர் இருந்த இடத்தில் சுடுகாடுதான் இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.

அவ்வளவுதான். மறுநாள்....

குப்பையோடு குப்பையாய் தலை நசுங்கிக் கிடந்தன அந்த


ச...ண்...ட...க்...கோ...ழி...க...ள்...!
.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

32 comments:

 1. ஸலாம் சகோ.துரைடேனியல்.
  இவ்வுலக வாழ்க்கை அற்பமானது.
  பறவைக்காய்ச்சல் மாதிரி மரணம் என்ற ஒன்று நிச்சயமாக வர இருக்கிறது தெரியாமல்...................
  அதற்குள்தான் என்ன ஒரு ஆட்டம்..! விழிப்புணர்வை தூண்டும் நல்லதொரு கதை சகோ.டேனியல். மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ. ஆஷிக்!

   புரிதலுக்கு நன்றி. புகை வளையம்தான் வாழ்க்கை. அற்புதமான இந்த மனிதப் பிறப்பை பயனுள்ளவாறு செலவழிக்க வேண்டும். அதுவே வாழ்க்கையின் உன்னத தாத்பர்யம்; இலட்சியம். மனம் நொந்து எழுதியதே இக்கதை. ஒன்றுபட்டால் வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு. தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 2. கதை சொல்லும் நீதி அருமை!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தங்கள் வருகைக்கும கருத்துரைக்கும்.

   Delete
 3. நடக்கும்-நிகழ்வு-மாற வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் சார்! வணக்கம். உண்மை. கசப்புகள், வெறுப்புகள் மாற வேண்டும். அன்பும் மன்னிப்பும் பெருக வேண்டும். அதுவே எனது ஆசையும் கூட. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

   Delete
 4. Replies
  1. வாங்க வெங்கட் சார்! தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 5. மறைபொருளாய் நீதி சொன்ன கதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கணேஷ் சார்! தங்களின் ஆழமான புரிதலுக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் 20 நாட்களில் வழக்கம் போல பிளாக் உலகத்துக்கு வந்து விடுவேன். உங்களது பல பதிவுகளை தவற விட்டிருக்கிறேன். மொத்தமாக படிக்க வேண்டும். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சார்.

   Delete
 6. சிறிய கதையில் பெரிய கருத்துக்கள்...அருமை சார் ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் புரிதலுக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹாஜா சார்.

   Delete
 7. இதுல ஏதும் உள்குத்து வச்சியிருக்கீங்களா...

  ReplyDelete
  Replies
  1. ஹி...ஹி...அப்படில்லாம் ஒண்ணுமில்லே சார். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 8. எம்மாம் பெரிய கருத்து - சொன்ன விதம் அழகு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

   Delete
 9. அருமையான கதை
  மிகச் சுருக்கமாக என்றாலும்
  மிகத் தெளிவான கதை
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 10. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 11. பெரிய விசயத்தைச் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.குட்டன்.

   Delete
 12. கோழிகள் எல்லாம் ரொம்ப நல்லவை சார்! ஏதாச்சும் மருந்து கொடுத்து காப்பாற்றியிருக்கலாம்!

  ReplyDelete
 13. இருக்கும்வரை நான் நீ என சண்டையிட்டுக் கொள்ளவேண்டியதுதான்...
  சிறுகதையில் அருமையாக கருத்தை வெளிக்கொண்ர்ந்தமை மிக அழகு நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகேந்திரன் சார்! வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 14. Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. மாதேவி.

   Delete
 15. உள்ளுறையாக சொன்ன கருத்து அருமை நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி முனைவரே!

   Delete
 16. குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது போல் என்பார்கள். சின்னச் சின்ன வாக்குவாதங்கள் கூட பெரும்பூதாகரமான பிரச்சனைகளைக் கிளப்பிவிடும். எங்கும் எப்போதும் மனித நேயத்துடன் நடந்துகொண்டால் பல விபரீதங்களைத் தடுக்க இயலும். அழகான கருத்துள்ள கதைக்குப் பாராட்டுகள் துரை டேனியல்.

  ReplyDelete
 17. நம் அரசியலைக்கூடச் சொல்லலாம் இதுமாதிரியென்று !

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.