Monday, October 15, 2012

வியப்பூட்டும் உண்மைகள் - பகுதி 3
சில விஷயங்களை கேள்விப்படும்போது அட அப்படியா என கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட சில வியப்பூட்டும் உண்மைகள் உங்கள் பார்வைக்காக:

1. ஆப்பிள், உருளைக் கிழங்கு, வெங்காயம் இவை மூன்றையும் உங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டால் மூன்றும் ஒரே சுவையுடையதாகவே இருக்கும். அதாவது இனிப்புச் சுவை.

2. ஒரு மனிதன் புகைபிடிப்பதை விட்டு விட்ட பின் 3 வருடங்கள் கழிந்துவிட்டதென்றால் அவனுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு, இதற்கு முன் புகைபிடிக்கும் பழக்கமே இல்லாத மனிதனுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புக்கு சமமாகவே இருக்கும்.

3. ஐஸ்லாந்து, அண்டார்டிகா, கிரீன்லாந்து இந்த மூன்று பகுதிகளிலும் எறும்புகளே கிடையாது.

4. தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள், தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிட இயல்பாகவே 7 புள்ளிகள் அதிகமாக ஐ.க்யூ-வைப் பெற்றுள்ளன.

5. மூங்கில்கள் ஒரு நாளைக்கு 36 இன்ச் உயரம் வளர்கின்றன.

6. ஷாங்காய் நகரத்திலுள்ள சில மருத்துவமனைகள் வேலை பார்க்கும் நேரத்தில் நர்ஸ்கள் கண்டிப்பாக லிப்ஸ்டிக் போட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.

7. வாழைப்பழத்தில் ஒரு மனிதனை சந்தோஷ உணர்வுடையவனாக மாற்றும் சில இரசாயனங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன.

8. இன்றைக்கு உலகத்தில் இருக்கிற அத்தனை அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் அழிவை விட, 10 நிமிடத்தில் ஒரு சூறாவளிக் காற்று அதிக அழிவை உண்டாக்க முடியும்.

9. தாமஸ் ஆல்வா எடிசன் இருட்டைக் கண்டு மிகவும் பயப்படுவாராம்.

10. பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட அதிக வேகமாக துடிக்குமாம்..

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

18 comments:

 1. பல புதிய தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

   Delete
 2. சில தகவல்கள் வியப்பை தந்தன...

  நன்றி சார்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்!

   Delete
 3. இருட்டுக்கு பயந்தவரா ?

  அறிய பல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.!

   Delete
 4. எல்லாமுமே புதியதும் வியப்புக்குறியதுமான தகவல்கள்தான் சார்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

   Delete
 5. அவசியம் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய தகவல்கள்....பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

   Delete
 6. அருமையான தகவல்கள்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எப்படி இருக்கீங்க நடராஜன் சார்? வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 7. //8. இன்றைக்கு உலகத்தில் இருக்கிற அத்தனை அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் அழிவை விட, 10 நிமிடத்தில் ஒரு சூறாவளிக் காற்று அதிக அழிவை உண்டாக்க முடியும்.// இதை மட்டும் நம்ப முடியவில்லை.

  ReplyDelete
 8. //தாமஸ் ஆல்வா எடிசன் இருட்டைக் கண்டு மிகவும் பயப்படுவாராம்.//
  அதனால்தான் பல்பை கண்டுபிடித்தாரோ! (பல்பை கண்டுபிடிச்சது அவர்தானே சார்!?)

  ReplyDelete
 9. வியப்புக்குறியத தகவல்கள் தான்...நன்றி...

  ReplyDelete
 10. 1. \\ஆப்பிள், உருளைக் கிழங்கு, வெங்காயம் \\ உண்மையிலேயே அதிசயம் தான்!!


  7. \\வாழைப்பழத்தில் ஒரு மனிதனை சந்தோஷ உணர்வுடையவனாக \\இனி நிறைய வாழைப்பழம் சாப்பிடுகிறேன்!!

  8. \\இன்றைக்கு உலகத்தில் இருக்கிற அத்தனை அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் அழிவை விட, 10 நிமிடத்தில் ஒரு சூறாவளிக் காற்று அதிக அழிவை உண்டாக்க முடியும்.\\ இந்த ஒப்பீடு தவறு. அணு ஆயுதம் போட்ட இடத்தில் புல் பூண்டு கூட சில நூறு வருடங்களுக்கு முளைக்காது, அங்குள்ளவர்கள் கதி வீச்சின் பாத்திப்பால் பல தலைமுறைகளுக்கு கஷ்டப் படுவார்கள். சூறாவளிக் காற்றில் இவை இல்லை.

  9. \\தாமஸ் ஆல்வா எடிசன் இருட்டைக் கண்டு மிகவும் பயப்படுவாராம்.\\ அதான் பல்பை கண்டுபுடிசாரோ!!


  ReplyDelete
 11. nice...super sir

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.