Friday, October 5, 2012

வாய்விட்டு அழுவதும், சத்தமிடுவதும் (Screaming and Grunting) உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது - எப்படி?


ஆரோக்கியமாக வாழ நம் குரலையும், அழுகையையும் பயன்படுத்தலாம். அதைப் பற்றியதே இக்கட்டுரை. அழுகையும், சத்தம் போட்டு கத்துவதும் உங்களது வேலைத் திறனை பன்மடங்கு அதிரிக்கிறது. போராட்டக் குணத்தை அதிகப்படுத்துகிறது. வெற்றியைப் பெற்றுத் தருகிறது. உதாரணமாக கோல்ப் மற்றும் டென்னிஸ் விளையாடுபவர்களைப் பாருங்கள்! ‘ஆ’ ‘ஊ’ (‘Yah’ ‘Yey’) ஏகத்துக்கு கத்துவார்கள். காரணம் தங்களது திறனை மேம்படுத்துவதற்காகவே.


நம்முடைய சுவாசம் (Breathing) நம்முடைய வேலை திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுவாசத்தை ஒழுங்குபடுத்தும்போது அதிக வேலைத்திறன் நம்மிடமிருந்து வெளிப்படும். சுவாசத்தை ஒழுங்குபடுத்த சிறந்த வழி கத்துவதும் சத்தமிடுவதும்தான். பளுதூக்குகிற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கவனித்துப் பார்த்திருப்பீர்கள். தொய்ந்து போகிற நேரங்களில் மிகுந்த சத்தமிடுவார்கள். காரணம் சத்தமிடுதல் சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறது. சுவாசமானது வேலைத்திறனை அதிகப்படுத்துகிறது. வெற்றியையும் பெற்றுத் தருகிறது. சத்தமிடுகிற வீரர்கள் சத்தமிடாமல் அமைதியாக விளையாடுகிற வீரர்களைவிட அதிக திறனை வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.


ஒன்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சத்தமாக கத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களுடைய வேலைத்திறனும் வெளிப்படும்.

கத்துதல் அல்லது அழுகையின் பயன்கள் கீழே:

1. டென்சனை குறைக்கிறது
2. மூச்சுத்திறனை அல்லது சுவாசத்திறனை ஒழுங்குபடுத்துகிறது.
3. மனதை ஒருமுகப்படுத்துகிறது
4. கூடுதல் பலத்தை தருகிறது



கராத்தே, குங்பூ போன்ற கலைகளை பழகுபவர்களை கவனித்துப் பாருங்கள் எப்படி கூச்சலிடுகிறார்கள் என்று. காரணம் தங்களது சக்தியை அதிகப்படுத்தவே அப்படி செய்கிறார்கள். மேலும் தங்களது தொழில்நுட்பத்திறன் துல்லியமாகவும், வேகமாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இது எப்படி விஞ்ஞானரீதியாக சாத்தியமாகிறது?

வாய்விட்டு கத்துவதும் அழுவதும் நமது உடல் இரசாயனத்தில் (Body Chemistry) பெரும் பங்கு வகிக்கிறது. அது நமது மூளையிலிருக்கும் அட்ரினலைனை(Adrenaline) ரிலீஸ் செய்து இதயத்தை நன்கு துடிப்புடன் செயல்பட வைத்து, இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி, உற்சாகத்தையும் அளிக்கிறது. இதனால்தான் நமக்குப் பிடித்த இசையை சத்தமாக கேட்கும்போது மிகுந்த உற்சாக உணர்வைப் பெறுகிறோம். சக்தியும் பெறுகிறோம்.

சத்தமிடுதல் உங்களது முதுகுப்பகுதி மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளையும் விரைவாக செயல்பட ஊக்குவிக்கிறது. இதன் மூலம் வேகமாக செயல்பட முடிகிறது. நுரையீரல் சுறுசுறுப்பாக இயங்கவும் இது தூண்டுகிறது.

கடைசியாக, வாய்விட்டு சத்தமிடுதலும், அழுவதும் உங்களது மூளையினை சுறுசுறுப்பாக்கி தன்னம்பிக்கையை அதிரிக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும் சத்தமாக உங்ககளை நீங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு செய்யுங்கள். நிச்சயம் முன்பைவிட வேகமாகவும், வித்தியாசமாகவும் வேலை செய்வீர்கள். வேலை செய்யும்போது சத்தமிடுபவர்களை தவறாக புரிந்துகொள்ளாமல் உற்சாகப்படுத்துங்கள்...!


வாழ்க நலமுடன்!





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

17 comments:

  1. பயனுள்ள கட்டுரையை பகிர்ந்துள்ளீர்..சிரிப்பு யோகா செல்லலாமென இருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செல்லுங்கள் சார். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  2. அறிவியல் கருத்துகள் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க!

      Delete
  3. இவ்வளவு விஷயம் இருக்கா?!நன்று

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய எழுதலாம். நேரமின்மை காரணமாக சுருக்கமாக எழுத வேண்டியுள்ளது சகோ. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      Delete
  4. பயனுள்ள பகிர்வு. அலுவலகத்தில் தான் இப்படிச் செய்ய முடியாது.... :(

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். மெல்லிய குரலில் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

      Delete
  5. உண்மை... எதையும் அடக்கினால் விபரீதம் தான்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

      Delete
  6. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?
    பயனுள்ள பகிர்வு பாஸ்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜ்! நல்லாருக்கீங்களா? நான் நலமே. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. வேலை செய்யும்போது சத்தமிட்டால் உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறது சார்! ப்ராக்டிகலா செய்து பார்த்தேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  8. மிகவும் பயனுள்ள பதிவு,, நன்றி

    ReplyDelete
  9. பயனுள்ள கட்டுரைப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.