Saturday, October 6, 2012

உணவு எப்படி இருக்க வேண்டும்? - மகாத்மா காந்திஹரிஜன் இதழில் 25.01.1942 அன்று காந்திஜி எழுதியிருக்கிற ஒரு சிறிய கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எதையெல்லாம் நாம் சாப்பிடலாம் என்று நிறைய பேர் நிறைய ஐடியா சொன்னாலும் நம்ம காந்திஜி என்ன சொல்றார்னு பார்த்து விடலாம். இனி நேரடியாக கட்டுரைக்குப் போய்விடலாம்.


குறைந்த அளவு ஆகாரம்

"ஒரு சமயத்தில் ஒரே ஒரு தானியத்தை மட்டும் உபயோகியுங்கள். கறிகாய், பழங்கள் ஆகியவற்றுடன் சப்பாத்தி, சாதம், பருப்புகள், பால், நெய், வெல்லம், எண்ணெய் முதலியவற்றைச் சாதாரணமாகச் சேர்த்து குடும்பங்களில் உபயோகிக்கிறார்கள். இந்தச் சேர்க்கை தேக ஆரோக்கியத்துக்கு ஒவ்வாதது என்று நான் கருதுகிறேன்.

பால், பாலாடைக்கட்டி, முட்டைகள் அல்லது மாமிசம் இவற்றைச் சாப்பிட்டு மிருகப் புரதத்தைப் பெறுகிறவர்கள், தாவரப் புரதம் மாத்திரமே ஏழைகளுக்கு கிடைக்கிறது. பணக்காரர்கள் பருப்பையும், எண்ணெயையும் சாப்பிடுவதை விட்டுவிட்டால் மிருகப் புரதமோ, மிருகக் கொழுப்போ கிடைக்காத ஏழைகளுக்கு அத்தியாவசியமான இவை இரண்டும் தாராளமாகக் கிடைக்கும்.

மேலும், சாப்பிடும் தானியம் நீர் கலந்ததாக இருக்கக் கூடாது. உலர்ந்ததாக, குழம்பு ஊற்றிக் கொள்ளாமல் சாப்பிட்டால் பாதியளவு தானியமே போதுமானது. வெங்காயம், காரட், ராடிஷ் (சிவப்பு முள்ளங்கி), பச்சையாக தின்னக் கூடிய கீரைகள், தக்காளி ஆகியவற்றைப் பச்சையாகக் கலந்து வைத்துக்கொண்டு சாப்பிடுவது நல்லது.

சமைத்த காய்கறிகள் எட்டு அவுன்ஸ் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு அவுன்ஸ் பச்சைக் காய்கறி கலப்பே போதுமானது. சப்பாத்தியையோ ரொட்டியையோ பாலில் நனைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. இப்படிச் சாப்பிட்டு பழகுவதற்கு, முதற்படியாக ஒரு வேளை பச்சைக் காய்கறியுடன் சப்பாத்தி அல்லது ரொட்டியும், மற்றொரு வேளை சமைத்த கறிகாயுடன் பாலோ தயிரோ சாப்பிடலாம்.

தித்திப்பு பலகாரங்களை அடியோடு விட்டுவிட வேண்டும். அதற்குப் பதிலாக சிறிய அளவில் வெல்லத்தையோ, சர்க்கரையையோ பாலுடனோ, ரொட்டியுடனோ, தனியாகவோ சாப்பிடலாம்.

பழங்களை சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கப் பழங்கள் கொஞ்ச அளவில்தான் தேவை. அதிகப் பணச் செலவாகும் பொருள் இது. பணக்காரர்களை விட பழங்கள் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்குமே அதிகமாகத் தேவைப்படுபவை. பணக்காரர்கள் அளவுக்கு மீறிப் பழங்களை தின்றுவிடுவதால், அவை ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் கிடைக்காது போய்விடுகின்றன.

ஊட்டச்சத்து சாத்திரத்தை ஆராய்ந்த எந்த மருத்துவரும் நான் யோசனை கூறியிருக்கும் ஆகாரம் உடலுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது: அதற்கு மாறாக நல்ல தேக ஆரோக்கியம் பெற உதவும் என்பதற்கு அத்தாட்சி கூறுவர்."

- மகாத்மா காந்தி
25.01.1942.

.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

11 comments:

 1. சிறப்பான கட்டுரை... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உடனடியாக வந்து கருத்துக்களை பதிவு செய்யும் தங்களின் வேகத்துக்கு ஒரு சல்யூட். அன்பிற்கு நன்றி சார்.

   Delete
 2. அருமையான பதிவு. மிக்க நன்றி.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 3. பயனுள்ள பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
 5. அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

  ReplyDelete
 6. //பணக்காரர்கள் அளவுக்கு மீறிப் பழங்களை தின்றுவிடுவதால், அவை ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் கிடைக்காது போய்விடுகின்றன.//

  காந்திக்கு ஒரு கவலை!முன்னாள் ஜார்ஜ் புஷ்க்கு இந்தியர்கள் சாப்பாட்டு ராமன்/ராமிகள் என்று இன்னொரு கவலை.

  ReplyDelete
 7. நல்லதொரு பகிர்வு நண்பரே

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.