Saturday, October 13, 2012

முகமூடி




என் அப்பாவின் முகமூடியை
நான் அணிந்த
அதே நாளில்
என் முகமூடியை
அவர் அணிந்துகொண்டார்

இலேசாக இருக்கிறதாம்
சந்தோஷப்பட்டுக் கொண்டார்

அவர் முகமூடி
கனம்தான்
மகா கனம்

அணிந்த சில நாட்களாக
நாள்தோறும் காயங்கள்
கிழித்து கிழித்து
சிரித்த முகமூடியை
கழற்றி எறிந்தேன்
காணவில்லை
என்
முகத்தில் பாதி.






.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

27 comments:

  1. /// அணிந்த சில நாட்களாக
    நாள்தோறும் காயங்கள்
    கிழித்து கிழித்து
    சிரித்த முகமூடியை
    கழற்றி எறிந்தேன் ///

    இந்த வரிகள் பலவற்றை சிந்திக்க வைக்கிறது சார் ...

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்! தங்களுக்கு கவிதை பிடித்திருக்கிறது கண்டு மிகுந்த மகிழ்ச்சி.

      Delete
  2. அடடே...சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  3. ஒவ்வொரு சக மனிதனையும் நாம் பார்ப்பது அவனுடைய முகமூடி வழிதான். உண்மை முகம் தெரிந்தால் தனிமனிதன், நட்பு, குடும்பம், சமூகம் அழிந்துவிடும். நிறைவான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விரிவான அழகான கருத்துரைக்கும் நன்றி விஜயகுமார் சார்!

      Delete
  4. முகமூடி மனிதவாழ்க்கையை அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.

    ReplyDelete
    Replies
    1. மனிதர்கள் முகமூடிகளை மாற்றுவது போல் முகமூடிகளும் முகங்களை மாற்றிக் கொள்கின்றன. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி முனைவரே!

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ.

      Delete
  6. முக மூடியாய் சிலரின் வாழ்க்கை....
    அழகான கவிதை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ.

      Delete
  7. சனிக்கிழமை இரவுன்னா இப்படியெல்லாம் கவிதை வருவது சகசம் தான்...

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது நண்பரே! இதையெல்லாம் சகிச்சுக்கறது உங்களைப் போன்றவர்களின் பெருந்தன்மைதான்.

      Delete
  8. ஆழமான சிந்தனை
    என்னுடைய முகமூடியையும் ஒரு முறை
    எடுத்து முகத்திற்கு நேராக வைத்துப் பார்க்கச் செய்து போனது
    தங்கள் அருமையான கவிதை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி ரமணி சார்!

      Delete

  9. சிறப்பான கவிதை சீரிய சிந்தனையின் வெளிப்பாடு!உள்ளுரை உருவகம் மிகவும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மனமுவந்த பாராட்டு என் பாக்கியம் அய்யா! நன்றி!

      Delete
  10. சிறப்பான கவிதை சார்
    மனித வாழ்கையின் யதார்த்தம் அது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  11. நம் முகமூடிதான் நமக்குச் சரி!

    ReplyDelete
  12. முகமூடி... நிறைய உணர்த்துகிறது ஐயா.

    யாரைப்போல் நாம் முகமூடி அணிவது்...?
    யோசிக்கத் துாண்டுகிறது உங்கள் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.