Wednesday, October 3, 2012

உங்கள் உடல் கடிகாரமும் (Body Clock) பராமரிக்கும் விதமும்


நாம் அன்றாடம் காலையில் எழுந்திருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்துக்கு பல் துலக்குகிறோம். குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கிறது. சாப்பிடுகிறோம். இரவு நேரமானதும் குறிப்பிட்ட நேரத்தில் உறக்கம் வருகிறது. தூங்குகிறோம். இப்படி அன்றாடம் நாம் செய்யும் செயல்களை அனிச்சையாக செய்கிறோம் அல்லவா? இதைச் செய்யும்படி நம் உடலுக்குள்ளே உள்ள அமைக்கப்பட்டிருக்கிற அமைப்புதான் இந்த உடல் கடிகாரம் (Body Clock) ஆகும். மருத்துவர்களை இதனை Circadian Rhythm என்கிறார்கள். இதுவே Biological Clock எனப்படுகிற இந்த Body Clock ஆகும்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள், பூச்சிகள், மரங்கள், பூக்கள், ஏன் சிறு பாக்டீரியாக்கள், வைரஸ்களுக்குக் கூட இந்த Body Clock உடலுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் இது மூளையில் ஒரு சிறுபகுதியில் அமைந்திருப்பதாக நம்புகிறார்கள். நமது உறக்கம் மற்றும் விழிப்பு போன்ற முக்கியமான விஷயங்களை இந்த உடல் கடிகாரமே தீர்மானிக்கிறது.

உடல் கடிகாரம் எப்படி வேலை செய்கிறது?



நமது உடல் சூரிய வெளிச்சத்தையும் நிலவு வெளிச்சத்தையும் வைத்து இது பகல், இது இரவு என்று உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வு எப்படி வருகிறது என்றால் நமது மூளையில் Optic Nerves எனப்படுகிற நரம்பு முடிச்சுகளுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள Supra Chiasmatic Nucleus (SCN) எனப்படுகிற ஒரு பகுதிதான் இதற்கு காரணமாகிறது. இதுவே இவ்விதமான ஒரு கடிகாரம் போன்ற அமைப்புடன் நம் உடலை இயக்குகிறது. உறக்க விழிப்புக்கு காரணமான Melotonin உற்பத்தி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றிலும் இந்த SCN தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

25 மணி நேர உடல் கடிகாரம்

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. ஆனால் நமது உடல் கடிகாரமோ 24 மணி நேரத்துக்குப் பதிலாக 25 மணி நேரத்துக்கு ஒருமுறை செயல்படும் விதமாக படைக்கப்பட்டிருக்கிறது. பூமி கடிகாரத்திற்கும், உடல் கடிகாரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒரு மணி நேரம் ஆகும். அதாவது தெளிவாகப் புரியும்படி சொன்னால் வெளிச்சம் இல்லாத இருட்டறைக்குள் ஒரு மனிதனை அடைத்து வைத்தால் அவன் இந்த 25 மணி நேர உடல் கடிகார அமைப்பின்படியே செயல்படுவான் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுதான் பார்வையற்றவர்களின் தூக்கப் பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு பிரயாணம் செய்யும்போது இந்த 25 மணி நேர அமைப்பினால்தான் நாம் ரிலாக்ஸ் செய்துகொள்ள முடிகிறது. Time Zone மாற்றத்திற்கும் மாறிக்கொள்ள முடிகிறது.

எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள்

நமது உடலில் இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இரத்தம் உறைதல் மற்றும் அனைத்து இயக்கங்களும் இந்த உடல் கடிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதனால்தான் அறுவை சிகிச்சைகளும், மருந்து கொடுக்கும் நேரங்களும் மருத்துவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும்படியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.




உதாரணமாக புற்றுநோயாளிகளுக்கு ஹீமோதெரபி (Chemotherapy) சிகிச்சை கொடுக்கும்போது இரவு 7 மணிக்கு சிகிச்சையளித்தால் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இந்த இரவு 7 மணிக்கு மருந்து எடுத்துக்கொண்டால் முழுப்பயன் கிடைப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சையிலும் இந்த உடல் கடிகாரமே பெரும் பங்கு வகிக்கிறது. அதிக எடையுள்ளவர்கள் இந்த உடல் கடிகாரத்துக்கு ஏற்ப தங்களது உணவுமுறையை மாற்றிக் கொண்ட போது அவர்களது எடை குறைப்பு மிகுந்த பயனளித்தது.

ஒரு மருத்துவர் தனது உணவுப் பழக்கத்தைப் பற்றி இப்படி சொல்கிறார். தான் தினமும் காலை 6 மணிக்கு காலை உணவும், மதியம் சரியாக 12 மணிக்கு மதிய உணவும், இரவு சரியாக 7 மணிக்கு இரவு உணவும் எடுத்துக்கொள்வதாகவும் இடையில் வேறு எவ்வித உணவும் எடுத்துக்கொள்வதில்லை எனவும். இது நிறைவாகவும், நோயின்றியும், மகிழ்ச்சியுடனும் வாழ வழி செய்வதாகவும் கூறுகிறார்.

Circadian Rhythm of Sleep

நமது பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு காரணமே இந்த உடல் கடிகாரத்திற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளாதுதான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சரியான நேரத்துக்கு தூங்குவது, சரியான நேரத்துக்கு எழுந்திருப்பது, சரியான நேரத்துக்கு சாப்பிடுவது ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்தாலே பெரும்பாலான நோய்களுக்கு நாம் தப்பிவிடலாம்.

இனி இந்த உடல் கடிகாரத்துக்கு ஏற்பவே வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்வேன். இதனைச் சீர்குலைக்க வரும் என் வேலை, தொழில், பொழுதுபோக்குகள் எதுவாக இருந்தாலும் அனுமதிக்க மாட்டேன் என்று வைராக்கியத்துடன் ஒரு முடிவெடுத்து வாழ்ந்தால் இனி உங்களது உடல்நலத்துக்கு வானமே எல்லை...!

வாழ்க நலமுடன்!




.


பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

21 comments:

  1. அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய
    அரிய தகவலை எளிமையாக அருமையாக
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களின் உடனடி வருகைக்கும் (அன்பிற்கும்) அழகான விரிவான அருமையான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்!

    ReplyDelete
  3. தேவையான பகிர்வு நண்பரே..

    விளக்கங்கள் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி முனைவரே!

      Delete
  4. மிக அருமை. அவசியம் பெரிய இடைவெளி விடாமல் அவ்வப்போது தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் அன்புக்கும் நன்றி. தொடர்ந்து எழுது விழைகிறேன் சார்.

      Delete
  5. இது வரை அறிந்திராத புதுமையான தகவல்...தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாலா சார்.

      Delete
  6. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்....பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  7. திட்டமிட்ட நேரம் எவ்வளவு முக்கியம் என்பதை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்... மிக்க நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  8. நல்ல பதிவு பிரயோசனமான தகவல்கள்
    ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பதிவொன்றை படிக்கக் சந்தர்ப்பம் கிட்டியதை எண்ணி சந்தோஷப்படுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  9. பயனுள்ள தகவல்களைப் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

      Delete
  10. ஆரோக்கிய பதிவு..தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..ஆமாம் வலைப்பெயரை எப்போது மாற்றினீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில்தான் அதாவது ஒரு மாதம் இருக்கும் மாற்றி. அன்பிற்கு நன்றி சார்.

      Delete
  11. நல்ல பதிவு.
    நன்றி.

    (ஆமாம்... இந்த உடல் கடிகாரத்திற்கு சாவி கொடுக்கனுமா...? செல் போடனுமா...?...இது சும்மா..ஹி ஹி ஹி )

    ReplyDelete
    Replies
    1. சாவில்லாம் கொடுக்க வேண்டாம். ஆட்டோமேடிக் கடிகாரம் இது. வருகைக்கும் நகைச்சுவையான கருத்துரைக்கும் நன்றி!

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.