Sunday, October 14, 2012

புரியாத கணக்கு




பல்லைக் காட்டாதே
என்ற
அம்மாவின் குரலுக்கு
பல்லைக் காட்டினாள்

வலதுகையால் எதையும் கொடு
என்ற
அப்பாவின் கேட்டலுக்கு
இடதுகையால் பதில்

தரையைப் பார்த்துத்தான் நடக்கணும்
அக்காவின்
அறிவுறுத்தலுக்குப் பின்
நடக்கவேயில்லை தரையைப் பார்த்து

கழித்தலும்
கூட்டலும்
வகுத்தலும்
அறிந்த அவள் குடும்பத்திற்கு
புரியாமலே போனது
இந்த
எதிர்விகிதக் கணக்கு.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

13 comments:

  1. வீட்டுல சுட்டியா இருந்தா புரியாத கணக்குத்தான் போடப்படும்....
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  2. இதில் தவறு யாருடையது!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தவறு அந்தப் பெண்ணிடம்தான். ஆனால் எதிர்விகிதத்தை புரிந்துகொண்டு பக்குவமாய் சொல்லித் திருத்தாதது பெற்றோர் தவறு. வருகைக்கும் அருமையான கேள்விக்கும் நன்றி சென்னைப்பித்தன் சார்!

      Delete
  3. பெற்றோர் சொல்லி்த்தரும் கணக்கு
    ஆசிரியர் சொல்லித்தரும் கணக்கு

    இவற்றையெல்லாம் விட வாழ்க்கை நமக்குச் சொல்லித்தரும் கணக்கு புரிந்துகொள்ளக் கடினமானது.

    அருமையான கவிதை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நீங்கள் சொன்னது அருமையான தத்துவமொழி முனைவரே! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

      Delete
  4. pinnoottam padiththa pinnethaan
    purinthathu....


    pakirvukku nantri!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சகோ. ஓ.கே. வருகைக்கு நன்றி!

      Delete


  5. கிழக்கே போ என்றால் மேற்கே போகும் குணம் சிலருக்கு!
    இப்படி சிலரை நானும் கண்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஐயா! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. தானாக வரும் சில கணக்குகள் அவர்களை மாற்றி விடும்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? ஓ.கே. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சார்!

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.