Sunday, October 28, 2012

குடும்ப பாதுகாப்புக்கு சில டிப்ஸ்
ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர் திடீரென மரணமடைய நேரிட்டால் அந்த குடும்பம் படும் பாடு பெரும்பாடுதான். குடும்பத் தலைவராக இருப்பவர்களும் குடும்பத்தினரும் இவ்வாறு நேரிட்டால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவே மறுக்கிறார்கள். அதை ஒரு அபசகுனமாக கருதுகிறார்கள். இதன் பின்விளைவுகளைப் பற்றி கவலைப் படுவதில்லை. மாறாக கணவனும், மனைவியும் ஒன்றாக அமர்ந்து இதைப் பற்றி பேசி துணிச்சலாக சில முடிவுகளை வரையறை செய்துகொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒரு நபர் அரசு வேலையில் இருந்தார். நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்பிள்ளைகளும் உள்ளடக்கம். திடீரென நாற்பத்தைந்து வயதில் அவர் மரணமடைந்து விட்டார். சரியாக வாரிசுதாரர் நியமனத்தை குறிப்பிடாததால் ஏகப்பட்ட குழப்பங்களாகி ஓய்வூதியப் பலன்களை பெறுவதற்கு சில வருடங்களாகி விட்டது.

எனவே உஷாராக உயிரோடிருக்கும்போதே சில நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரின் பேரிலும் ஜாயிண்ட் அக்கவுண்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாரிசுதாரர் நியமனம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மனைவி, பிள்ளைகள் என்று தெளிவாக பதியவேண்டும். பிராவிடன்பண்ட், கிராஜூவிட்டி, இன்ஸ்யூரன்ஸ், இதர கணக்குகளிலும் வாரிசுதாரர் நியமனம் உட்பட மற்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மறைவிற்குப் பின் எளிதில் பணப்பலன்கள் வாரிசுதாரருக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

இதேபோல் உயிலும் தெளிவாக எழுதி வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் வில்லங்கம் செய்யும் உறவினர்களால் வாரிசுகள் அவஸ்தைப்பட நேரிடும்.

கணவன் தொழில் செய்பவராக இருந்தால் தொழில் பற்றிய தேவையான விபரங்கள் அனைத்தையும் மனைவிக்கு தெரிவிக்க வேண்டும். தனது மறைவிற்குப் பின் தொழிலை நடத்த தேவையான பயிற்சி மனைவிக்கோ அல்லது வாரிசுதாரருக்கோ கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தனது மறைவிற்குப் பின் என்னென்ன வரவுகள், செலவுகள், இலாபங்கள் உண்டாகும் என்பதை தெளிவாக ஒரு நோட்புக்கில் குறித்து பத்திரமாக வைக்க வேண்டும். என்னென்ன ஆவணங்கள் எங்கெங்கு உள்ளன. எப்படி பெறுவது? என்பதையும் அதில் தெளிவாக குறிப்பிட வேண்டும். இது குடும்பத்தினர் பணப்பலன்களை உடனடியாகப் பெற வசதியாக இருக்கும்.

மனைவி வேலை பார்த்தால் மனைவியும் இவ்வாறே செய்தல் வேண்டும். கண்டிப்பாக இன்சூரன்ஸ் பாலிசி குடும்பத்தினர் அனைவரும் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். விபத்துப் பாலிசியும், மெடிகிளெய்ம் பாலிசியும் அவசியம்.

கடன் வாங்கி வீடு கட்டினாலும், தவணை முடியும் முன் குடும்பத் தலைவர் மரணமடைய நேரிட்டால் கடனை அடைக்க காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. விசாரித்து இத்தகையை வீட்டுக் கடன் வசதித் திட்டங்களில் கடன் வாங்க வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானது.

நமது வீடு, வாகனங்கள், நுகர்வோர் சாதனங்கள் ஆகிவற்றைப் பாதுகாக்க பொதுக்காப்பீடு (General Insurance) செய்துகொள்ளுங்கள்.

இவ்வாறெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் செத்த பிறகும் நல்ல பேர் வாங்கலாம். இல்லேன்னா செத்தும் கெடுத்தான் அப்படின்னு கெட்ட பேர்தான் வாங்கணும். ரைட்டுதானே?


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

14 comments:

 1. நெருப்பென்றால் சுடாது/ அதனால, குடும்பத் தலைவர்கள் இதுப்போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் நலமே.., அது அவர் குடும்பத்தை பணக்கஷ்டம், மனக்கஷ்டத்திலிருந்து காப்பாற்றும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மை ராஜி. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

   Delete
 2. சார் குடும்ப கட்டுபாட்டுக்கு டிப்ஸ் தரமுடியுமா

  ReplyDelete
  Replies
  1. இயற்கையான முறையில் ஒரு டிப்ஸ் தரேன். மாதவிலக்கு வந்த 14-ம் நாள் முதல் 24-ம் நாள் வரைக்கும் பத்து நாட்கள் தாம்பத்யத்தை தவிர்த்துவிட்டாலே போதும். குடும்பம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 3. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 4. அனைவரும் செய்யவேண்டிய
  செய்யத் தவறுகிற விஷயத்தை அருமையாக
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார். தொடர முயற்சிக்கிறேன்.

   Delete
 5. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

  நன்றி சார்...
  tm6

  ReplyDelete
 6. மிகத் தேவையான , பயனுள்ள ஒரு
  பதிவு. பாராட்டுக்களும், நன்றியும் !

  ReplyDelete
 7. உபயோகமான தகவல்கள் சார்....அனைவரும் இதுபோல முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.....

  ReplyDelete
 8. General Insurance (Plain risk policy) is a must for every one. Thanks for the good post

  ReplyDelete
 9. சிறப்பான டிப்ஸ்!

  ReplyDelete
 10. மிகச் சிறப்பான டிப்ஸ்! எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு பதிவு.

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள். நீண்ட நாட்களாக எழுதுவதில்லையா?
  தொடர்ந்து எழுதுங்கள் ப்ளீஸ்!

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.