Saturday, December 10, 2011

தீர்ப்புகள் திருத்தப்படும்

(முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையினால் மனம் நொந்து நான் எழுதிய கவிதை இது)

சிலந்திவலைகளாய்
ஆயிரம் பிரச்சினைகள் இருக்க

அணைப் பிரச்சினையை
ஏனய்யா எடுத்தீர்கள்
எங்கள் தேசத்து அரசியல்வாதிகளே

பூமித்தாயின் தலையில்
ஏன் ஆணி அடிக்கிறீர்கள்

நீங்கள் அடிக்கும்
ஒவ்வோர் ஆணியும்

திரும்பவில்லையா
பூகம்பங்களாய்....

நாய்களோடு விளையாடலாம்
நதிகளோடு விளையாடலாமா

இயற்கையை
கூறுபோட்டு
கூறுபோட்டு
விற்பனை செய்ததினால்தான்

இன்று
நம் வாழ்க்கையும்
கடைவீதியில்…

சோறு போடாவிட்டாலும்
பரவாயில்லை
எங்களை
கூறுபோடாதீர்கள்

அணை கட்டுவது தவறல்ல
அதற்கு
எங்கள் வாழ்க்கையை
ஏன் அஸ்திபாரமாக்குகிறீர்கள்

எங்கள் கேள்விகளை
நீங்கள்
அலட்சியப்படுத்தலாம்

எங்கள் வேள்விகளை
நீங்கள்
அலட்சியப்படுத்த முடியாது

அவ்வேள்வியில்
உங்கள் தாறுமாறுகள்
தகடுபொடிகளாகும்

தீர்ப்புகள் திருத்தப்படும்போது
ராஜ்ஜியங்களும் நகர்ந்துவிடும்
என்பதை நினைவில் வையுங்கள்

இப்படியே போனால்
இந்திய வரலாறு
திரும்பவும் எழுதப்படும்
வரலாற்றின் வண்ணங்களும்
மாற்றப்படும்

புதிய இந்தியாவிற்காக
எதையும் செய்யும்
எங்கள் கூட்டம்.
.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

30 comments:

 1. சோறு போடாவிட்டாலும்பரவாயில்லை
  எங்களை கூறுபோடாதீர்கள் //

  ஆதங்கத்தை கோபமாக வெளிப்படுத்தும் தங்கள் பதிவுஅருமையிலும் அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 2. @ Nandu @ Norandu

  Varugaikkum pakirvukkum Nanri Sago.

  ReplyDelete
 3. @ Ramani

  Varugahkkum arumaiyana pakirvukkum thodarum atharavukkum mikka Nanri Ramani Sir.

  ReplyDelete
 4. யோசிக்க வைக்கும் அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. இதுதான் நாற்றுப்பற்று !

  ReplyDelete
 6. சோறு போடாவிட்டாலும்
  பரவாயில்லை
  எங்களை
  கூறுபோடாதீர்கள்

  நம் அரசியல்வாதிகளிடமிருந்து மக்களையும் நாட்டையும் யார் காப்பாற்ற போகிறார்கள்..

  ReplyDelete
 7. அருமையான கவிதை. சூழ்நிலையின் வீரியத்தை விவரிக்கும் கவிதை

  ReplyDelete
 8. அருமையான கவிதை!
  வரிகளில் துயரம் வடிகிறது

  // எங்கள் கேள்விகளை
  நீங்கள்
  அலட்சியப்படுத்தலாம்

  எங்கள் வேள்விகளை
  நீங்கள்
  அலட்சியப்படுத்த முடியாது//

  சரியான சாட்டை அடி!
  இது பற்றி திங்களன்று கன் கவிதை ஒன்றும் வருகிறது!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. உணர்ச்சிகரமான கவிதை.

  ReplyDelete
 10. அனைவருக்குமான உணர்வை கவிதையாக்கியிருக்கிறீர்கள்,நன்று

  ReplyDelete
 11. சோறு போடாவிட்டாலும்
  பரவாயில்லை
  எங்களை
  கூறுபோடாதீர்கள்
  >>>
  சிந்திக்க வேண்டிய வரிகள்

  ReplyDelete
 12. @ SIBI Senthilkumar

  Varugaikkum pakirvukkum nanri Sago.

  ReplyDelete
 13. @ Pulavar Ramanujam.

  Varugaikkum pakirvukkum mikka Nanri Ayya.

  ReplyDelete
 14. @ Chennai pithan

  Varugaikkum pakirvukkum Nanri Sir.

  ReplyDelete
 15. @ Shanmugavel.

  Varugaikkum pakirvukkum Nanri Sago.

  ReplyDelete
 16. நறுக்குத் தெறிக்கும் சொல்லாடல் நண்பரே...

  எங்க ஊர்க்காரர் கவிதையல்லவா...

  ReplyDelete
 17. சிந்திக்கும் விதமாகச் சொன்னீர்கள் அன்பரே

  ReplyDelete
 18. இப்படியே போனால்
  இந்திய வரலாறு
  திரும்பவும் எழுதப்படும்
  வரலாற்றின் வண்ணங்களும்
  மாற்றப்படும்///

  அருமையான வரிகள்.. இன்றைய சூழ்நிலையின் கொடுமையை விளக்குகிறது. சிந்தனையையும் தொண்டுகிறது.. நன்றி..

  ReplyDelete
 19. @ Mahendran.

  Vaanga enga (Namma) oorkarare!
  Varugaikkum pakirvukkum Nanri.

  ReplyDelete
 20. @ Munaivar R. Gunaseelan.

  Varugaikkum pakirvukkum Nanri Anbare.

  ReplyDelete
 21. @ Vedanthangal Karun.

  Varugaikkum arumaiyana pakirvukkum Nanri Sago.

  ReplyDelete
 22. அருமையான சிந்தனை நண்பரே

  த.ம 12

  ReplyDelete
 23. @ M.R.

  Varugaikkum pakirvukkum Nanri Sago.Ramesh.

  ReplyDelete
 24. இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:
  நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

  http://www.change.org/petitions/central-government-of-india

  நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.