Thursday, December 8, 2011

மானுடம் பாடும் கவிதை

இது மானுடம் பாடும் கவிதை
காதல் காமம் தாண்டிய
கவிப்பயணம்

இது என் தவவேள்வி
வேகாதவைகளும் வெந்து விடும்
ஆகாதவைகளும் அவிந்து விடும்
அக்கினிக் குண்டம் இது

நான்
கோமாளிக் கூத்துக்கு
கவிபாட வரவில்லை
அடைபட்டிருக்கும் குயில்களின்
தொண்டைதிறக்க
கூவுகிறேன் உரக்க

என் பூபாளம்
பூமிவரை மட்டுமல்ல
அதற்கும் கீழே

என் வாணவேடிக்கை
வானம் வரை மட்டுமல்ல
அதற்கும் மேலே

வாசல்வரை வந்து
கூவிவிட்டு ஓடிவிடும்
சேவலல்ல நான்

உங்கள் வீட்டிற்குள்ளே வந்து
எக்காள சத்தமிடும்
ஏகாந்தப்பறவை
நான்

என் சிறகுகளில்
ஏறிக்கொள்ளுங்கள்

ஏனென்றால்
இது உலகப் பயணமல்ல
பிரபஞ்சப் பயணம்.
.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

26 comments:

  1. அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாசல்வரை வந்து
    கூவிவிட்டு ஓடிவிடும்
    சேவலல்ல நான்

    உங்கள் வீட்டிற்குள்ளே வந்து
    எக்காள சத்தமிடும்
    ஏகாந்தப்பறவை
    நான் //
    அருமையான வார்த்தை பிரயோகம்.. அசத்தல்+பாராட்டுகள்+வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பா tm4

    ReplyDelete
  4. ஏனென்றால்
    இது உலகப் பயணமல்ல
    பிரபஞ்சப் பயணம் //.

    மனம் கவர்ந்த அழகிய பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு நண்பரே... வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. @ Nandu @ Norandu. Varugaikkum pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  7. @ Vedanthangal Karun. Thangal varugaikkum arumaiyana pinnoottathirkum mikka Nanri Sago.

    ReplyDelete
  8. @ MyKitchen Flavors BonAppetit. (spelling correct thana Sago.?!..). Thangalin muthal varugaikkum pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  9. @ Venkat Nagaraj. Varugaikkum pakirvukkum thodarum atharavukkum mikka Nanri Sago.

    ReplyDelete
  10. வீட்டிற்குள் வரும் ஏகாந்தப் பறவையின் பிரபஞ்ச பயணம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. @ SIBI Senthilkumar. Varugaikkum pakirvukkum Nanri.

    ReplyDelete
  12. @ Munaivar R. Gunaseelan. Varugaikkum pakirvukkum Nanri Nanbare.

    ReplyDelete
  13. பரந்த நோக்குடன் தங்கள் பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  14. @ Shanmugavel.

    Varugaikkum
    Pakirvukkum
    thodarum
    aatharavukkum
    mikka Nanri
    Nanbare!

    ReplyDelete
  15. //ஏனென்றால்
    இது உலகப் பயணமல்ல
    பிரபஞ்சப் பயணம்.//
    அசத்தலான கவிதை துரை டேனியல்
    நன்று

    ReplyDelete
  16. மானிடம் தேடும் பயணம்.அருமை.தேடிப்பாருங்கள்.கிடைத்தால் சந்தோஷம் !

    ReplyDelete
  17. @ Chennai pithan.

    Varugaikkum Pakirvukku Nanri Sir.

    ReplyDelete
  18. //நான்
    கோமாளிக் கூத்துக்கு
    கவிபாட வரவில்லை
    அடைபட்டிருக்கும் குயில்களின்
    தொண்டைதிறக்க
    கூவுகிறேன் உரக்க//

    அருமையான வரிகள்..

    ReplyDelete
  19. விடியலுக்கு கூவும் சேவல் அல்ல உங்கள் கவிதை;
    விடியலுக்கு வெளிச்சம் போடும் சூரியன் உங்கள் கவிதை.
    http://jayarajanpr.blogspot.com/

    ReplyDelete
  20. @ Advocate A.R. Jeyarajan.

    Thangal muthal varugaikkum arumaiyana pakirvukkum mikka Nanri Sir. Aatharavai thodaravum. Thangalin thalam nichayam varukiren.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.