கேட்க ஆச்சரியமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.
சரி. தியரியை விட்டு விட்டு நேரடியாக செய்முறைக்கே போய் விடலாம். எப்படி? கீழே உள்ள வழிமுறைகளைப் படியுங்கள்.
1.
கீழே
உள்ள படத்தைப் பாருங்கள். இதைப் போல ஒரு தேங்காய்ப்பூ டவலை எடுத்துக் கொள்ளுங்கள்.
2.
அதன்
பிறகு படத்தில் காட்டியவாறு பெரு விரல் மற்ற விரல்கள் மேல் படாதவாறு துண்டை இறுகப்
பற்றிப் பிடியுங்கள். உங்கள் 100 சதவீத முழு பலத்தையும் உபயோகப்படுத்தி துண்டை
இறுகப் பிடியுங்கள்.
3.
பிறகு
மெதுவாக ஒரே சீரான முறையில் மெல்ல மெல்ல உங்கள் கையை (அதாவது விரல்களை) தளர
விடுங்கள். அதாவது 30 சதவீதம் வரைக்கும். அதாவது இரண்டு நிமிடங்களுக்கு வருமாறு
தளர விடுங்கள்.
4.
பிறகு
ஒரு நிமிடம் அப்படியே அசைவில்லாமல் கையை ஓய்வில் வைத்திருங்கள்.
5.
பிறகு
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பியுங்கள். அதாவது இறுகப் பிடித்தல் மற்றும் தளர
விடுதல் ஆகியவற்றை. திரும்பத் திரும்ப நான்கைந்து முறை செய்யுங்கள். இரண்டு கைகளிலும் அதாவது இடது மற்றும் வலது கை
இரண்டிலும் மாறி மாறி இதனைச் செய்யுங்கள்.
6.
வாரத்திற்கு
மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து முறையாவது இப்படி செய்து பாருங்கள்.
இந்த
பயிற்சியை ஒழுங்காக செய்து வந்தால் இயற்கையான முறையில் இரத்த அழுத்தம் சீரடைவதை
சீக்கிரமே நீங்கள் உணர முடியும். சிறப்பான முன்னேற்றத்துக்கு நடை அல்லது இலேசான
உடற்பயிற்சியும் மிக உதவும். இரண்டு காரியங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒன்று இறுகப் பிடிக்க இரண்டு நிமிடம். தளர விட இரண்டு நிமிடம். ஓய்வு ஒரு நிமிடம்.
இன்னொன்று இரண்டு கைகளிலும் மாறி மாறி செய்ய வேண்டும். நான்கைந்து முறை.
அவ்வளவுதான்.
எப்படி
இது சாத்தியமாகிறது?
நாம்
நமது கையை இப்படி இறுகப்பற்றுவது மற்றும் தளர விடுவதன் மூலம் அந்த சமயத்தில்
நைட்ரிக் ஆக்சைடு என்ற விரிவூக்கியை (dilator) நமது தமனிகள் உற்பத்தி செய்து அதனை முன்னங்கைக்கு அனுப்புவதாகவும்
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த நைட்ரிக் ஆக்சைடு நமது இரத்த அழுத்தத்தை
கட்டுப்படுத்த பெரிதும் உதவி செய்கிறது. ஒரு மாதம் தொடர்ந்து இந்த பயிற்சியை
செய்து வந்தாலே இதனை நன்கு உணர முடியும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கூட
இதனைச் செய்தாலே ஓரளவுக்கு இதனைக் கட்டுப்படுத்தலாம்.
(குறிப்பு:
மிக மிக உயர் இரத்த அழுத்தத்தால் (180/110 mm Hg or more) பாதிக்கப்பட்டவர்கள்
இந்த பயிற்சியை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு தொடரலாம்.)
.
Tweet | |||||
good...
ReplyDeleteThank you.
Vetha.Langathilakam.
Thanks Sago.
Deleteபயனுள்ள பகிர்வு
ReplyDeleteபகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
Thanks Sir.
Deleteநன்றி....
ReplyDeleteThanks Sir
DeleteV good info
ReplyDeleteJuergen
வணக்கம் .ஐயா நலமா?நான் வலைப்பக்கம் வருவதே குறைந்து விட்டது.இன்று உங்கள் பதிவைப் பார்த்ததும் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
ReplyDeleteபகிஎவுக்கு நன்றி
Mikka Nandri Sir. Same feeling to me.
DeleteThanks Sir
ReplyDeleteபயனுள்ள குறிப்பு. நன்றி.
ReplyDeleteஅன்பு தமிழ் உறவே!
ReplyDeleteவணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!
வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)