Monday, November 3, 2014

வலி தாங்கி





அப்பாவுக்கு பல்வலி
அண்ணனுக்கு கால்வலி
அக்காவுக்கு கைவலி
தம்பிக்கு முதுகுவலி
எனக்கு கண்வலி
அம்மாவுக்கு வலியே இல்லை
காரணம்
எந்த வலிக்கு அழுவதென்று
அவளுக்கு தெரியவில்லை
வலிகளே ஒன்றையொன்று
கொன்றுவிடுவதால்
அவளுக்கு வலியில்லை எப்போதும்
பிணத்துக்கு ஏது வலி?!


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

9 comments:

  1. அவளுக்கு வலியில்லை எப்போதும்
    பிணத்துக்கு ஏது வலி?!// அருமையான கவிதை. நீண்ட காலத்தின் பின் இணையத்தில் சந்திப்பது மகிழ்ச்சி ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்திப்பதும் மிக்க மகிழ்ச்சியே. நீண்ட காலமானாலும் என்னை மறக்காமல் இருப்பதற்கு நன்றி சகோ. கருத்துரைக்கு நன்றி சகோ.

      Delete
  2. கவிதை மிக மிக அற்புதம்
    மிகக் குறிப்பாக இறுதி வரி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார். ரொம்ப நாள் ஆச்சு. உங்க பதிவெல்லாம் நிறைய மிஸ் பண்ணிருக்கேன். இதுக்கு முன்னால பல கமெண்ட்ஸ்க்கு பதில் கொடுக்காமலும் இருந்திருக்கேன். ஸாரி சார். நல்லா இருக்கீங்களா? கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. Replies
    1. தங்களின் பொன்னான வாக்குக்கு மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  4. // வலிகளே ஒன்றையொன்று
    கொன்றுவிடுவதால்
    அவளுக்கு வலியில்லை எப்போதும்
    பிணத்துக்கு ஏது வலி?!
    //

    நல்ல கவிதை.

    த.ம. +1

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.