வானம் ஜெயிக்க
பூமி ஜெயிக்க
சந்திரனும் செவ்வாயும் ஜெயிக்க படித்த
இன்றைய தலைமுறைக்கு
சுயம் ஜெயிக்க
கற்றுக்கொடுக்காததால்
இமயத்தையே வெல்லும் இத்தலைமுறை
ஒரு சிறு ஏமாற்றத்துக்குக் கூட
ஈடுகொடுக்க முடியாமல்
தன் உயிரை
எமனுக்கு மொய் எழுதிவிடுகின்றது
உலகை ஜெயிக்கும் கல்வி மட்டுமல்ல
உள்ளத்தை ஜெயிக்கும் கல்வியும் அவசியமே.
(குறிப்பு: இது கவிதையா வசன கவிதையா
புதுக்கவிதையா நவீனக் கவிதையா என்ற ஆராய்ச்சியை விட உள்ளம் கிழிக்கும் உண்மைகளைச் சொல்லத்
துடிக்கும் ஒரு உள்ளத்தின் ஆதங்கம் வெளிப்படுத்தும் புது வடிவம்தான் இது என்பதே சரியாகும்)
.
Tweet | |||||
வருத்தப்பட வேண்டிய உண்மை...
ReplyDeleteசுயம் ஜெயிக்க தெரியாதவர்கள்.....
ReplyDeleteநல்ல கவிதை.
த.ம. +1