Wednesday, November 5, 2014

செருக்கில்லாத வண்டி





மகுடம் சூடும் ஒவ்வொரு முறையும்
ஆணவப் பூ பூக்கும்
அந்தப் பூவுக்குள்தான்
அழிவு நாகம் குடியிருக்கும்

மகுடம் சூடும்போதெல்லாம்ி
தாழ்மைத் தொப்பி அணிந்துகொள்
அதுதான் நீ விழும்போதெல்லாம்
உன்னைக் காக்கும்
கொடிக் கொம்பு

செருக்கில்லாத வண்டிதான்
சீக்கிரம் ஊர் போய்ச் சேரும்
இதை மறவாத வரை
வெற்றி உன்னைத் தொடரும்.


..

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

3 comments:

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.