இடிக்காத இடிக்கு
பெய்யும் மழை
மின்னாத மின்னலுக்கு
பொழிகின்ற மேகம்
சொல்லாத சொல்லுக்கு
சுழல்கின்ற மனம்
விதிக்காத விதிக்கு
கதை கட்டும் மக்கள்
இப்படி
போலிகளால் நிரம்பிய
இந்த வாழ்க்கை நாடகத்தில்
மாறுவேடப் போட்டிக்கு மட்டும்
குவிகின்றன
கோடிக்கணக்கான விண்ணப்பங்கள்.
.
Tweet | |||||
அருமையான வரிகள் நண்பரே..
ReplyDeleteசிறந்த கவியாக்கம்...
கவிதை வித்தியாசமாக அழகாக இருக்கிறது.
ReplyDeleteதலைப்பை இன்னும் பொருத்தமாக வைக்கலாமோ?
எனினும் கவிதை அருமை வாழ்த்துகள். தொடருங்கள் தொடர்வேன்