Wednesday, August 29, 2012

ஓ துறவிகளே!




ஓ துறவிகளே!
மீசையைத் துறக்கச் சொன்னீர்கள்
துறந்துவிட்டோம்
உள்ளே முளைத்திருக்கிற
இந்த
ஆசையை
என்ன செய்வது?

உடையை மாற்றச் சொன்னீர்கள்
மாற்றி விட்டோம்
உள்ளே மறைந்திருக்கிற
இந்த
படையை
என்ன செய்வது?

வெளியே மட்டுமல்ல
உள்ளேயும் போராடி போராடி
ஓய்ந்துவிட்டோம்

ஒன்று
போர் ஓயட்டும்
இல்லை
உங்கள் பிரசங்கம் ஓயட்டும்!



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

20 comments:

  1. //
    மீசையைத் துறக்கச் சொன்னீர்கள்
    துறந்துவிட்டோம்
    உள்ளே முளைத்திருக்கிற
    இந்த
    ஆசையை
    என்ன செய்வது?
    //

    நல்ல வரிகள்,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  2. யதார்த்தமான சாட்டையடி வரிகள்...

    ReplyDelete
  3. //ஒன்று
    போர் ஓயட்டும்
    இல்லை
    உங்கள் பிரசங்கம் ஓயட்டும்!
    ///

    இரண்டுமே ஓயாபோவதில்லை ...

    ReplyDelete
    Replies
    1. அது தெரிந்ததுதான். ஆனால் போராடிக் களைளத்த உள்ளத்தின் கதறல்தான் இது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  4. துரை சார்! உள்ளே மறைந்திருக்கிற படையோடு போராடினால் தோற்று விடுவீர்கள். அப்படையின் விளையாட்டுக்களை அகக்கண்ணில் விழித்திருந்து கவனித்திருங்கள். வெற்றிபெறுவீர்கள்.

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் வரிகள்... அருமை... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 6)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்.

      Delete
  6. சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் நண்பரே.

    ReplyDelete
  7. துரை ஸார், கலக்குறீங்க. கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

  8. வெளியே மட்டுமல்ல
    உள்ளேயும் போராடி போராடி
    ஓய்ந்துவிட்டோம்//


    மிகப் பெரிய விஷயத்தை
    மிக எளிமையாகச் சொல்லும் இந்தப் படைப்பு
    அருமையிலும் அருமை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  9. ஊருக்குதவாத பிரசங்கம் இவர்களது.விட்டுத்தள்ளுங்கள் டானியல் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஹேமா!

      உண்மைதான். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.