Saturday, August 11, 2012

ஏக்க கனவு


ஒரு எண்ணச் சுழல்
சுழன்று சுழன்று அடித்த வலியில்

சுருண்டு கொண்டது
மூளைப் பாம்பு

விதி வலியதென்று
தேற்ற முயன்ற கைகளுக்கு

வராதேயென கட்டளையிட்டது
கண்கள்

பீறிட்டெழும் வெள்ளச்சிதறலில்
கரைந்தது
அந்த
ஏக்கக் கனவு.




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

23 comments:

  1. நல்ல வரிகள்...

    (ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவு படித்ததில் மகிழ்ச்சி) நன்றி சார்... (TM 1)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி சார்.

      Delete
  2. கனவின் அழிவைச் சொல்லிப்போனவித்ம்
    அற்புதம்
    வெகு நாட்கள் பதிவு தராததால் இருந்த வருத்தத்தை
    இந்தப் பதிவின் மூலம் அழித்தமைக்கும்
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாங்க தல .. ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் அதே கலக்கல் கவிதையுடன் வந்து இருகிங்க

    ReplyDelete
  4. @ திண்டுக்கல் தனபாலன்
    @ ரமணி
    @ ராஜபாட்டை ராஜா

    வெகுநாட்கள் கழித்து பதிவிட்டாலும் மறக்காமல் வந்து தங்கள் அன்பை வெளிப்படுத்திய தங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல. இன்னும் என் டார்கெட் முடியவில்லை. வழக்கமாக பழையபடி நான் பிளாக் பக்கம் வர இன்னும் ஒரு சில மாதங்கள் செல்லும். அதன் பிறகு வழக்கப்படியே நான் முன்பு போல வந்து அன்பு நண்பர்களின் கூட்டணியில் இணைந்து கொள்வேன். பிறகென்னங்க? வழக்கம் போல கலக்குவோம். இப்போது வேலைப்பளு அதிகம். ஆனாலும் அவ்வப்போது நண்பர்களின் தளத்திற்கு வரலாம் என தீர்மானித்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. @ கோவி

    - தங்கள் முதல் வருகைகக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  6. நீண்ட இடைவெளிக்கு பின் வருகை தந்த சகோவிற்கு பதிவர் சந்திப்பிற்கான அழைப்பு காத்திருக்கு வந்துடுங்க கனவின் வரிகள் எனை கனவுக்கு அழைத்து செல்கின்றன.

    ReplyDelete
  7. @ Sasikala

    -தங்கள் அன்பிற்று நன்றி சகோ. முக்கியமான தவிர்க்க இயலாத என் வேலைப்பளு காரணமாக பதிவர் திருவிழாவிற்கு வர இயலாது என்றுதான் கருதுகிறேன். வர முடியவில்லையே என்ற வருத்தம் மிக உண்டு. ஆனாலும் விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. @ நண்டு @ நொரண்டு

    - வாங்க சார். நல்லாருக்கீங்களா? வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  9. பதிவர் சந்திப்பில் உங்களைச் சந்திக்க முடியவில்லை என்ற கவலை இருக்கிறது. அதை இந்தக் கவிதை போக்கி விட்டது. இந்தத் தளத்திலாவது அடிக்கடி உங்களைச் சந்தித்து மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கணேஷ் சார்! கடவுளுக்குச் சித்தமானால் அடுத்த தடவை இப்படி ஒரு சந்திப்பு நிகழுமானால் நிச்சயம் வருவேன். சந்தேகமில்லை.

      Delete
  10. welcome back sir !

    பீறிட்டெழும் வெள்ளச்சிதறலில்
    கரைந்தது
    அந்த
    ஏக்கம் ....
    பலித்தது அந்த கனவு - உங்கள் வரவு !

    ReplyDelete
  11. வாங்க சகோ.ஸ்ரவாணி! நல்லாருக்கீங்களா? வெகு நாட்களாயிற்று பதிவில் சந்தித்து. தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  12. ஏக்கத்துடன் கனவு கண்டுகொண்டே இருந்தால்
    அது கண்ணீரில் தான் ஆறுதல் அடையமுடியும் - என்ற அருமையான கருத்துக் கவிதை. நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  13. எண்ண சூழல்களை அதிகம் சுழல வைப்பது கண்கள் தான் கடைசியில் தண்டனையில் நனைவதுவும் .........

    அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. நல்லாருக்கீங்களா சகோ.இடிமுழக்கம்! வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  14. நல்ல கவிதை நண்பரே (TM 8)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

      Delete
  15. நலம் சகோ. நீங்களும் நலம் என நம்புகிறேன்... நன்றி..

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.