மூன்றாம் கையால் சொறிந்தபோது
இரத்தம் பீறிட கதறியது
பிதுக்கத் தெரிந்த உனக்கு
போஷிக்கத் தெரியாதா
மூளையின் கேள்விக்கு
புன்னகைத்தேன்
காவலுக்கு வைத்தால்
காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாய்
ஏவலுக்கு வைத்தால்
ஏமாற்றுகிறாய்
திமிரடங்கத்தான்
இந்த கட்டாய உபவாசம்
என் போதனைக் கையை
புறம்பே தள்ளி
விசுக்கென கதவடைத்துக்கொண்டது
இந்த...
வீணாய்ப்போன மூளை.
.
Tweet | |||||
மீண்டும் உங்கள் பக்கத்தில் கவிதை.... நல்வரவு!
ReplyDeleteவயிற்றின் அஜீரணத் திமிரடங்க உபவாசம். மனத்தின் அஜீரணத் திமிருக்கும் அதுவே பரிகாரம். அழகான சொல்லாளுமையுடன் ரசனையான கவிதை. நல்வரவு மற்றும் பாராட்டுகள் துரை டேனியல்.
ReplyDeleteவருக,வருக...
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் துரைக்கு நல்வரவு. நல்ல கவிதை. தொடரட்டும். (உங்கள் ஓட்டுப் பட்டைகளில் உலவு தூக்கி விடுங்கள் துரை. தளம் திறக்க வெகுநேரமாகிறது).
ReplyDeleteகாவலுக்கு வைத்தால்
ReplyDeleteகாதலிக்க ஆரம்பித்துவிடுகிறாய்
ஏவலுக்கு வைத்தால்
ஏமாற்றுகிறாய் ...
தங்கள் வரிகளைக் காணாமல் நாங்கள் அல்லவா ஏமார்ந்திருக்கிறோம் தொடருங்கள் பயணமதை.
நல்ல கவிதை சார் !
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் !
நன்றி ! (TM 4)
சின்ன வேண்டுகோள் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !
@ வெங்கட் நாகராஜ்
ReplyDelete- வாங்க வெங்கட் சார். நல்வரவு. தங்கள் வாழ்த்துக்கும் வரவேற்பிக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
@ கீதமஞ்சரி
ReplyDelete- வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோ.
@ நண்டு @ நொரண்டு
ReplyDelete- தங்களின் அன்புக்கு நன்றி.
@ பாலகணேஷ்
ReplyDelete- கணேஷ் சார். பாலகணேஷ்னு பேரு மாத்திட்டீங்களா? ஓ.கே. தங்களின் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சார். தங்களின் ஆலோசனைப்படி உலவு பட்டையை தூக்கி விட்டேன். அற்புதமான பலனளிக்கும் யோசனைக்கு நன்றி சார்.
@ சசிகலா
ReplyDelete- தங்களின் வருகைக்கும் அழகான அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete- வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி. தங்களது யோசனைப்படியே உலவுப் பட்டையைத் தூக்கி விட்டேன். அற்புதமான யோசனைக்கு நன்றி. இதே யோசனையை சகோ. கணேஷ் அவர்களும் சொல்லியிருந்தார். இருவருக்குமே மனமார்ந்த நன்றிகள் பல.
கவிதை நன்று. வயிற்றுக்கு பட்டினி போட்டால் மூளைக்கும் பட்டினி போட்ட மாதிரிதான்.
ReplyDeleteத.ம. 6