Tuesday, October 25, 2011

செல்லம்மாவுக்கு ஒரு கவிதை!

என் செல்லக்கிளியே செல்லம்மா!

இன்று தீபாவளியாம்
நாடே குதூகலமாய் இருக்கிறது

நாமும் இருக்க வேண்டுமாம்
நாமெங்கே இருக்க

நல்ல துணி உடுத்தி எத்தன நாளாச்சி
நல்ல சோறு துன்னு எத்தன நாளாச்சி

எங்க ராசய்யா முதலாளி
போனசுன்னு கொடுத்த 500 ரூபா

நம்ம சின்னக்குட்டி மைனாவுக்கு
கவுன் எடுக்க சரியாப் போச்சி

நம்ம ராமுப் பயலுக்கு
பிளாட்பாரத்துல
எதையெடுத்தாலும் அம்பது ரூபான்னு சொன்னவன்கிட்ட
துணி எடுத்தாச்சு

ஆனாலும் ராமு பார்வையில
திராவகம் கொட்டுச்சு

நம்ம நெஞ்சுலயும் இரத்தம்தான் கொட்டுச்சு

துணியில்ல
வெடியில்ல

தீபாவளியாம்
கொண்டாட்டமாம்

தீபாவளி வருஷாவருஷம்தான் வருது
நமக்கு விடிவெப்போ?
நம்ம கஷ்டத்துக்கு முடிவெப்போ?

கண்ணீருடன் சின்னய்யா!

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

4 comments:

  1. கவிதை அருமை...

    ReplyDelete
  2. நன்றி சகோ. ரெவெரி. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  3. உங்கள் எழுத்துகளில் சமுதாய ஏக்கங்களை பார்கிறேன், உங்களை போன்றவர்கள் என்னை போல வளரும் பதிவர்களுக்கு நல்ல முன்மாதிரி..... உங்கள் வலைபூவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. @ Idimuzhakkam

    Inruthaan Naan Pathivu elutha vantha Nokkam niraiveriya unarvu enakku. Vaarungal Sago. Oru Arockiyamaana Pathivulagam Padaippom. Puthu Sarithiram padaippom. Thangal varugaikkum arumaiyana karuthuraikkum mikka Nanri Sago.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.