1. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது.
2. அதிகம் கற்றவனாயிரு. ஆனால் பிடிவாதக்காரனாயிருக்காதே.
3. அறியாமையைவிட இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது.
4. தன் துன்பத்தை வெளிக்காட்டாமல் இருப்பவனை விட
தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் இருப்பவனே அறிவாளி.
5. மனம் விட்டுப் பேசுவதை விட சிறந்த அறிவு வேறில்லை.
6. அழகுள்ள பெண் கண்களுக்கு விருந்து.
குணமுள்ள பெண் மனதுக்கு விருந்து.
முன்னது ஆபரணம். பின்னது பொக்கிஷம்.
7. பிறரைக் கெடுத்து தான் மட்டும் வாழ நினைத்தால் அது ஆசை.
தான் மட்டும் வாழ நினைத்தால் அது பற்று.
தானும் தன் இனமும் தன் நாடும் வாழ நினைத்தால் அது அன்பு.
சராசரமும் வாழ நினைத்தால் அது அருள் எனப்படும்.
8. இதயத்தோடு போராடுவதே உண்மையான போராட்டமாகும்.
9. பெண்கள் இதயத்தால் ஆளுகிறார்கள்.
ஆண்கள் மூளையால் அடிமையாகிறார்கள்.
10. ஆசிரியரும் பெற்றோரும் நமக்குப் பேசக் கற்றுத் தருகின்றனர்.
ஆனால் இந்த உலகமோ வாயை மூடிக்கொண்டிருக்க
கற்றுத் தருகிறது.
அடுத்த பொன்மொழிகள் 10 அடுத்த பதிவில்.
Tweet | |||||
சிந்தையோடு சிறிது சிரிப்பும் இருக்கட்டும் , எதிபார்ப்புடன்
ReplyDeleteரசித்தேன் அனைத்தையும்.
ReplyDeleteவருகை தந்து கருத்துரையிட்ட சகோ. அருள், சகோ. ஆவணி சிவா, சகோதரி. ஷைலஜா ஆகியோருக்கு நன்றிகள் பல.
ReplyDeleteசகோ. ஆவணி சிவா! சிரிப்பும் வேண்டும் என்றுதான் தனியாக ஜோக்ஸ் என்று தனியே பதிவுகளை இட்டிருக்கிறேன். படித்து மகிழவும். இருப்பினும் தங்களது மேலான கருத்துக்களை கவனத்தில் கொள்கிறேன். கருத்துரைக்கு நன்றி!
ReplyDelete