Tuesday, October 4, 2011

திருந்துவார்களா சில ஜென்மங்கள்?

சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் சொன்ன நிஜ சம்பவம் இது. அவருடைய வாய்மொழியாகவே இதை தருகிறேன்.

“தூத்துக்குடி ரோட்டோரங்களில் சமீப காலமாக ஒரு பிச்சைக்காhp தனது நான்கு குழந்தைகளுடன் பிச்சையெடுப்பதைக் காணமுடிந்தது. அவளுக்கு நான்கு பிள்ளைகள். ஒரு வயதிலிருந்து 7 வயது வரை அடுக்கடுக்காய் நான்கு பிள்ளைகள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் புருஷன் இவளை காதலித்து கல்யாணம் செய்து இருக்கிறான். குழந்தை உண்டாகும் வரைக்கும் குடும்பம் நடத்துவானாம். பிறகு எங்காவது ஓடிப்போய்விடுவானாம். பிறகு குழந்தை பிறந்ததும் மறுபடியும் வந்து விடுவானாம். இப்படியே நான்கு குழந்தைகள் பிறந்ததும் பிறகு ஓடிப்போனவன் மறுபடியும் வரவே இல்லையாம். இப்படிப்பட்ட நிலையில் சில மனித மிருகங்கள் இவளை வேட்டையாடியதில் இவள் மனநிலை பாதிக்கப்பட்டவளாய் மாறிவிட்டாளாம்”

இவை என் நண்பர் சுயமாய் முயன்று திரட்டிய தகவல்கள். கேட்டவுடன் என் கண்கள் பனித்;தது. தன் உடல்பசிக்காக ஒரு பெண்ணை பயன்படுத்தும் இவனைப் போன்ற கயவர்கள் என்று திருந்துவார்களோ? தொpயவில்லை.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

4 comments:

  1. ஆரம்பமே ஒரு அழத்தமான விடயத்தோடு தொடகிறீர்கள்...

    நன்றி சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    திரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை

    ReplyDelete
  2. வெளியில் தெரியாமல் எவ்வளவோ கொடுரங்கள் மனநிலை பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட அபலைகளுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது சகோ.பாவம் அவர்கள்.

    ReplyDelete
  3. சகோதரர்கள் மதிசுதாவுக்கும் செழியனுக்கும் நன்றி. என் கன்னி முயற்சிக்கு முதல் பின்னுட்டங்களை இட்ட உங்கள் கரங்களை முத்தமிடுகிறேன்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.