Tuesday, January 31, 2012

காகிதங்களாகிப்போன கதாநாயகிகள்



கனவுகளோடு வந்த
இந்தக் கதாநாயகிகள்
காகிதங்களாகிப் போனார்கள்

மலர்க்கரங்களின் கும்பிடுகை
மறுதலிக்கப்பட்ட கணங்களில்
சீதைகள் துகிலுரியப்பட்டார்கள்

வர்ணனைகளை வாங்கிய இதழ்கள்
சிகரெட் தொடுதல்களில்
கருகிப் போயின

கல்லூரிக் கலையரங்கங்கள்
களியாட்டக் கடைகளின்
புழக்கடையாகிப் போயின

பூவுக்குள் பூகம்பங்களல்ல
பூகம்பங்களுக்குள் பூக்கள்
சிறைப்பிடிக்கப்பட்டன

கடைசியாக…
சிதைகள் எரிந்தன
சீதைகளும்தான்.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

16 comments:

  1. பூவுக்குள் பூகம்பங்களல்ல
    பூகம்பங்களுக்குள் பூக்கள்
    சிறைப்பிடிக்கப்பட்டன

    கடைசியாக…
    சிதைகள் எரிந்தன
    சீதைகளும்தான்.//


    மிக மிக அருமை
    வார்த்தைகளை மீறி உணர்வுகள்
    நெஞ்சடைக்கச் செய்து போகிறது
    மன்ம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பூவுக்குள் பூகம்பங்களல்ல
    பூகம்பங்களுக்குள் பூக்கள்
    சிறைப்பிடிக்கப்பட்டன

    வார்த்தை ஜாலங்கள் அருமை
    கருத்துக்களும் அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  3. கல்லூரிக் கலையரங்கங்கள்
    களியாட்டக் கடைகளின்
    புழக்கடையாகிப் போயின

    இன்றைய கலாச்சாரம் அப்படி என்ன செய்வது தோழர்?
    சிறப்பு..

    ReplyDelete
  4. /கடைசியாக…
    சிதைகள் எரிந்தன
    சீதைகளும்தான்.
    //
    கொடுமை

    ReplyDelete
  5. நிஜத்தில் நடபவைகளை அருமையாக சொல்லியுள்ளிர்கள்

    ReplyDelete
  6. மிக சிறப்பான கவிதை பாஸ்

    ReplyDelete
  7. நிதர்சனங்கள் கொப்பளிக்கிறது வார்த்தைகளில்
    அருமையான கவிதை நண்பரே.

    ReplyDelete
  8. நாகரீக உலகில் பெண்களின் நிலையா கவிதை ?

    ReplyDelete
  9. ஹேமா சொன்னது //நாகரீக உலகில் பெண்களின் நிலையா கவிதை ?//

    இல்லை சகோ. சினிமா ஆசையில் சிக்கி சீரழியும் சில பெண்களின் நிலைதான் இக்கவிதை. வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  10. //கடைசியாக…
    சிதைகள் எரிந்தன
    சீதைகளும்தான்//

    நல்ல வரிகள்.... சினிமா ஆசையில் இப்படி நிறைய பேர் சீரழிந்து விடுவது நிதர்சனம்....

    ReplyDelete
  11. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. nalla kavithai. Thamil manathil inaithu vitten nanbare

    ReplyDelete
  13. @ ரஹீம் கசாலி

    நன்றி சார்.

    ReplyDelete
  14. @ ரமணி
    @ தனசேகரன்
    @ மதுமதி
    @ என் ராஜபாட்டை ராஜா
    @ k.s.s. Rajh
    @ மகேந்திரன்
    @ ஹேமா
    @ வெங்கட் நாகராஜ்
    @ ரத்னவேல்
    @ ரஹீம் கசாலி

    வருகை தந்து கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. கடைசியாக…
    சிதைகள் எரிந்தன
    சீதைகளும்தான்.

    அழகாகச சொன்னீர்கள்..

    ReplyDelete
  16. கனவுகளோடு வந்த
    இந்தக் கதாநாயகிகள்
    காகிதங்களாகிப் போனார்கள்
    மூன்று வரிகளிலே கவிதை மிளிர்கிறது அருமை

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.