Thursday, January 26, 2012

வதந்தி என்றால் என்ன? அதன் விளைவுகள் என்னென்ன?

வதந்திகள் எவ்வளவு வேகமாக காட்டுத்தீயைப் போல பரவுகின்றன, என்னென்ன விளைவுகளை உண்டுபண்ணுகின்றன என்பதை விளக்கும் மிகவும் சுவாரஸ்யமான எளிய கதை ஒன்று கீழே: படிக்கத் தவறாதீர்கள்:-

ஆசிரியர் ஒருவர் வயல் வழியாக வந்து கொண்டிருந்தார். லொக் லொக் என்று இருமிக்கொண்டே இருந்தார். அவர் தொண்டையில் இருந்து வந்த சளியைத் துப்பினார். மொத்தமாக விழுந்த சளியைப் பார்ததார். அதில் பறவையின் இறகு ஒன்று கிடப்பதைக் கண்டு திகைத்தார்.

"ஐயோ! எனக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லையே? சளியில் பறவையின் இறகு எப்படி வர முடியும்?" என்று நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே தள்ளாடியபடியே தன் வீட்டை அடைந்தார்.

" உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள் அவருடைய மனைவி.

"நீ யாரிடமும் சொல்லமாட்டேன் என்று வாக்குறுதி தந்தால் நான் சொல்கிறேன்" என்றார் அவர்.

"நான் யாரிடமும் சொல்லமாட்டேன். எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்" என்று வற்புறுத்தினாள் அவள்.

தான் துப்பிய சளியில் வெண்மையான சிறு இறகு ஒன்று கிடந்தது பற்றி கூறினார் அவர்.

அவளால் இந்த ரகசியத்தை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரியிடம் போய் " நீ யாரிடமும் சொல்லமாட்டேன் என்றால் என் கணவரைப் பற்றிய ஒரு செய்தியை சொல்கிறேன் " என்றாள்.

" நான் யாரிடமும் சொல்லமாட்டேன். தயங்காமல் சொல்லு " என்றாள் பக்கத்து வீட்டுக்காரி.

" நீ யாரிடமும் சொல்லமாட்டாய் அல்லவா?" என்று மீண்டும் கேட்டாள் அவள்.

" என் மீது நம்பிக்கை இல்லையென்றால் சொல்ல வேண்டாம். இது வரை எப்பொழுதாவது உன்னை ஏமாற்றி இருக்கிறேனா?" என்று கோபத்துடன் கேட்டாள் பக்கத்து வீட்டுக்காரி.

" கோபப்படாதே. நீ மிகவும் நல்லவள்தான். அதனால்தான் உன்னிடம் சொல்ல வந்தேன். இன்று காலை வயலுக்குச் சென்றிருந்தபோது என் கணவர் கடுமையாக இருமிவிட்டு எச்சில் துப்பினாராம். அதில் கொக்கின் இறகு ஒன்று முழுமையாக வந்ததாம். அவருக்கு என்ன நோய் என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது " என்றாள்.

" கவலைப்படாதே. இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்ச்சி சில சமயம் எல்லாருக்குமே நடக்கும். இதைப்பற்றி வேறு யாரிடமும் சொல்லாதே. அவர்கள் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள் " என்று நல்லவளைப் போல பேசினாள் அந்த பக்கத்து வீட்டுக்காரி.

குளத்திற்குத் தண்ணீர் எடுக்கச் சென்ற அவள் தன் தோழி ஒருத்தியைப் பார்த்தாள். "நான் சொல்லும் செய்தியை நீ யாரிடமும் சொல்லக்கூடாது. மிகவும் இரகசியம். அந்த ஆசிரியரின் மனைவியே என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னாள். அவள் கணவர் வயலுக்குச் சென்றிருந்தபோது இருமிவிட்டு எச்சில் துப்பினாராம். அவர் வாயிலிருந்து கொக்கு ஒன்று வெளியே வந்து பறந்து சென்றதாம் " என்றான்.

" என்ன முழுக் கொக்கா? அவ்வளவு பெரிய பறவை வாயிலிருந்து வந்து பறப்பது அதிசயமாக அல்லவா உள்ளது? சரி... சரி. இந்தச் செய்தியை யாரிடமும் சொல்லமாட்டேன் " என்று சொன்னாள் அந்தத் தோழி.

அடுத்தவளிடம் சென்று அந்தத் தோழி " ஆசிரியரின் வாயிலிருந்து வெளிவந்த கொக்கு இறக்கை அடித்துப் பறந்து சென்றது ' என்றாள்.

சிறிது நேரத்தில் அந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது.

"உங்களுக்குச் செய்தி தெரியுமா? ஆசிரியரின் வாயிலிருந்து கொக்கு கூட்டமே வெளியே வந்து பறந்து சென்றதாமே?" என்று கேட்டார் ஒருவர்.

"கொக்கு கூட்டம் மட்டுமல்ல. காக்கை, பருந்து போன்ற பறவைகளும் அவர் வாயிலிருந்து வந்தன. அந்தப் பறவைகளின் கூட்டத்தால் சூரியனே மறைக்கப்பட்டு எங்கும் இருள் சூழ்ந்தது" என்றார் மற்றொருவர்.

இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்ட ஆசிரியருக்குப் பைத்தியமே பிடிக்கும் போல இருந்தது. வதந்திகளிடமிருந்து தப்ப அவருக்கு வேறு வழி தெரியமால் இரவோடு இரவாக அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு ஒரு தொலைதூர ஊருக்கு சென்றுவிட்டார் அவர்.

பார்த்தீர்களா? இந்த வதந்திகளின் மோசமான விளைவுகளை. ஆகவே எந்த வடிவில் வந்தாலும் சரி. இந்த வதந்திகளை மட்டும் நம்பவே நம்பாதீர்கள்.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

19 comments:

  1. ஒரு விசயம் அப்படியே வேறு ஒன்றாக மாற்றப்படுகின்றது. வடிவேலுவின் மாப்பிள்ளை சொம்பு கேட்டாராம் கதை ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான கதை
    சமுத்திரம் என்பது மூன்று பேர் வாய் தாண்டிப்போனால்....
    முதல் நபர் சமுத்தரம் என்பாராம்
    இரண்டாம் நபர் சமூத்ரம் என்பாராம்
    மீன்றாம் நபர் "ச "வை விட்டுவிடுவாராம்
    அவ்வளவு பெரிய சமுத்தரம் மூன்றுபேர்
    கடக்கையிலேயே இப்படியானால்
    வதந்தி காட்டுத் தீ தானே
    நீங்கள் சொல்லியபடித்தான் ஆகும்

    ReplyDelete
  3. @ நண்டு @ நொரண்டு

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  4. @ விச்சு

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  5. @ ரமணி

    தங்களின் தொடர் வருகைக்கும் அருமையான விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  6. வதந்தி பற்றிய அருமையான கதை

    ReplyDelete
  7. மனித உறவுகள் என்ற ஒரு
    விரிவுரைப் பாடத்தில் இந்த
    அஞ்சல் பேச்சுக்கள் ஒரு பாடமாகவே இருக்கிறது
    நண்பரே.
    வதந்திகள் மிக மோசமான ஒரு களை..
    அதை முளையிலேயே சரிப்படுத்திவிட வேண்டும்..
    இல்லையேல் நம்மை வேரோடு சாய்த்துவிடும்.

    அழகானதொரு கதை மூலம் விளக்கியமை நன்று நண்பரே.

    ReplyDelete
  8. உண்மை உண்மை உண்மை
    அழகாகச் சொன்னீர்கள் அன்பரே

    ReplyDelete
  9. அன்பு நண்பரே..
    இந்தக் கதையில் வதந்தி பரப்பும் பெண்களை நிழற்படமாக எடுத்து இந்தப் பதிவில் வெளியிட்டிருக்கிறேன்..

    வாங்க பார்க்கலாம்..

    http://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_28.html

    ReplyDelete
  10. அது வதந்தீ போல நண்பரே...

    ReplyDelete
  11. கதை ஒன்று…

    மாலை 6 மணியாகிறது.
    வழக்கமாக வேலைக்குச் சென்ற தன் மகள் 5மணிக்கே வந்துவிடுவாள்.
    7 மணி ஆனபின்னும் இன்னும் வந்து சேரவில்லையே என்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகிறார்கள். தன் மகளின் அலைபேசியைத் தொடர்புகொள்ள முடியததால்,அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்துக் கேட்கிறார்கள். அவர்களோ தங்கள் மகள் 4 மணிக்கே கிளம்பிவிட்டாளே என்கிறார்கள்.

    ஒன்றும் புரியாத குடும்பத்தார், அவளின் தோழி வீட்டுக்கெல்லாம் அழைத்துப்பார்த்து ஏமாற்றத்தை மட்டுமே பதிலாகப் பெறுகிறார்கள்.

    இந்த சூழலில் இந்தக் குடும்பத்தின் குழப்பத்தைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ளோர் கதை திரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    ஒருவர் சொல்கிறார்..


    http://gunathamizh.blogspot.com/2010/01/blog-post_29.html

    ReplyDelete
  12. @ முனைவர் இரா.குணசீலன்

    என்னவென்று தெரியவில்லை. உங்கள் தளத்தை மட்டும் என்னால் அணுக முடியவில்லை. சற்றுப் பொறுங்கள். நிச்சயமாக வருகிறேன். வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  13. வதந்...தீ பறக்குது !

    ReplyDelete
  14. நயமான கதையில் நல்லதொரு செய்தி .. பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  15. வாழ்வையே புரட்டிப் போடும் வததிக்கு விரிவான கதையோடு விளக்கம் அருமை

    ReplyDelete
  16. @ சென்னைப்பித்தன்
    @ மகேந்திரன்
    @ முனைவர் இரா. குணசீலன்
    @ ஹேமா
    @ நூர்முகம்மது
    @ அரசன்
    @ சசிகலா

    வருகை தந்து வாக்களித்து அருமையான பின்னூட்டமிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.