Wednesday, January 11, 2012

சிட்டுக்குருவி மனம்

புரிந்துகொள்ளுங்கள்
புரிந்துகொள்ளுங்கள் என்று
கூவுகிறது இந்த உலகம்
யாரும் புரிந்துகொள்ள முடியாத
பாஷையில்.

*****

தனக்கு மட்டுமே
தலைபாரம் என்று
புலம்புகிறது
இந்த
சிட்டுக்குருவி மனம்

*****

சில பொழுதுகள் சிறகுகளோடு
சில பொழுதுகள் சிலுவைகளோடு
சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது
இந்த
யுத்தக்களம்

*****

எதிர்த்திசையில் நடந்தே
பழக்கப்பட்டுப் போன
கால்களோடும்
தனக்கே உதவி செய்யாத
கைகளோடும்
என்னாலேயே
வசப்படுத்த முடியாத
என் மனதோடும்
வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.

*****

முடிந்துவிடுவது போலும்
முடிவே இல்லாதது போலும்
தோற்றம் தரும்
ஒரு விளையாட்டைப் போல
கழிகிறது
இந்தப் பொல்லாத வாழ்க்கை.

**********.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

20 comments:

 1. அனைத்தும் அருமை தோழர்..வாழ்த்துகள்..

  த.ம-1

  திராவிட தீபம் தோன்றியது

  ReplyDelete
 2. சித்தனைத் துளிகள்! சிந்தாத தேன்!
  இனிமை!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 3. என்னாலேயே
  வசப்படுத்த முடியாத
  என் மனதோடும்
  வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது////
  அருமையான வரிகள் நண்பரே

  ReplyDelete
 4. @ Madhumathi

  Thangal Varugaikkum Pakirvukkum Nanri Sir!

  ReplyDelete
 5. அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. ஆரம்ப வரிகளிலேயே அருமையான வார்த்தகளோடு துவங்கி நல்ல கவிதை.வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

  ReplyDelete
 7. ஒவ்வொரு வரிகளும் அசத்தல்..

  ReplyDelete
 8. சிட்டுக்குருவி மனம் - வார்த்தையே அசத்தல்! எல்லாமே படிக்க அழகு!

  ReplyDelete
 9. தனக்கே உதவி செய்யாத
  கைகளோடும்
  என்னாலேயே
  வசப்படுத்த முடியாத
  என் மனதோடும்
  வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.//

  அருமையான படைப்பு
  தாங்கள் இன்று சென்னைப் பித்தன் அவர்களால்
  வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள்ளதற்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்
  தங்கள் கவிப்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 10. வெற்றியோ தோல்வியோ நிர்ணயிக்கப்படாதவரை விளையாட்டில் சுவாரசியம் குறைவதில்லை. சுவாரசியம் குறையாதவரை வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையுமில்லை. அர்த்தமுள்ள வரிகள். வெகு அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
 11. கவிதை அருமை சார்....

  ReplyDelete
 12. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

  ReplyDelete
 13. என்னாலேயே
  வசப்படுத்த முடியாத
  என் மனதோடும்
  >>>
  மனம் மட்டும் நம் வசப்பட்டுவிட்டால்..., நினைச்சு பார்க்கவே ஆனந்தமா இருக்கு சகோ

  ReplyDelete
 14. வாழ்க்கை பற்றிய சலிப்பும்,சிட்டுக்குருவியாய் புலம்பலும் அருமை சிறப்பு !

  ReplyDelete
 15. தேன் துளிப்பாக்கள் அத்தனையும்
  அருமையாக உள்ளது நண்பரே.

  t.m 13

  ReplyDelete
 16. @ மதுமதி
  @ புலவர் சா இராமநுசம்
  @ நண்டு @ நொரண்டு
  @ ரஹீம் கஸாலி
  @ ரத்னவேல்
  @ சண்முகவேல்
  @ இடிமுழக்கம்
  @ கணேஷ்
  @ ரமணி
  @ கீதா
  @ சசிகுமார்
  @ சென்னைப்பித்தன்
  @ ராஜி
  @ ஹேமா
  @ மகேந்திரன்

  - வருகை தந்து வாக்களித்து அருமையான கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள் பல. தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!.....

  ReplyDelete
 17. சென்னைபித்தன் சொன்னது :-
  //இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.//

  - சார் பெரிய வார்த்தை நீங்கள் சொன்னது. அந்த அளவிற்கு நான் தகுதியானவன் இல்லை. உங்கள் வாயில் இந்த வார்த்தை வருகிற அளவிற்கு என்னுடைய பதிவு இருந்ததற்காக நான்தான் பாக்கியம் செய்து இருக்கவேண்டும். பதிவுலகில் இருக்கும் தரமான பதிவர்களில் நீங்களும் ஒருவர் சார். ஆபாசக் குப்பைகளுக்கிடையே கிடைக்கும் மாணிக்கம் தான் தாங்கள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 18. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.