Saturday, January 7, 2012

மனிதனைப் பாடும் நிலா




நிலாவைப் பாடு
நிலாவைப் பாடு
என்றனர்
என் நண்பாகள்

நிலாவைப் பார்த்தேன்
முதலில் மானுடம் பாடு
மனிதனின் வறுமையைப் பாடு
பின்பு நீ என்னைப்பற்றியல்ல
நான் உன்னைப் பற்றி எழுதுகிறேன்
ஒரு காவிய கவிதை

நிலவை
மானிடர்கள் போற்றிய
காலங்கள் மாறும்
மானிடனை நிலவு போற்றிய
காவியம் அரங்கேறும்
என்றது நிலவு

என் நண்பர்களைப் பார்த்தேன்
அவாகள் முகங்களை
மூடியிருந்தன
வெட்கத் திரைகள்.






.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

17 comments:

  1. அருமை அருமை
    அமுதைப் பொழியும் நிலவுக்கு
    கவிதை பொழிவதா கஷ்டம்
    மனிதர்களின் மோசமான கவதைகள் கண்டு
    எத்தனை நாள்தான் அதுவும் பொறுமைகாக்கும்
    அழகான வித்தியாசமான அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. அழகாகச் சொன்னீர்கள் நண்பரே..

    ReplyDelete
  3. அன்பு நண்ரே..

    நெடுவெண்ணிலவினார் என்ற பெயர் கொண்ட புலவர் ஒருவர் சங்க இலக்கியத்தில் பாடல் ஒன்று பாடல் பாடியிருக்கிறார்க அறிவீர்களா..?

    http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_06.html

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை. மானிடம் வளர்‌க்கும் கவிஞர்களை நிலவும் வாழ்த்திப் பாடும் என்று சொல்லியிருக்கும் கோணம் பிரமாதம் துரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. @ ரமணி

    உடனுக்குடன் வந்து அருமையாய் பின்னூட்டமிடும் தங்கள் அன்புக்கு முதலில் நன்றி. உண்மைதான் சார். அமுதைப் பொழியும் நிலவுக்கு கவிதை பொழிவது சுலபம்தான்.

    ReplyDelete
  6. @ முனைவா இரா.குணசீலன்

    தங்களின் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி முனைவரே. தாங்கள் குறிப்பிட்ட தங்களின் பதிவையும் சுவாசித்தேன். நன்றி.

    ReplyDelete
  7. @ கணேஷ்

    உடனுக்குடன் வந்த பிரதிபலன் பாராது பின்னூட்டமிடும் தங்களின் மனது யாருக்கு வரும்.இளம் பதிவாகளை ஊக்குவிக்கும் தங்களின் பண்பாடு போற்றத்தக்கது. தங்களின் அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  8. வருகைக்கும் வாசி்த்தலுக்கும் நன்றிகள் நண்பரே..

    பழந்தமிழ் இலக்கியங்களைக்கூட விரும்பிப் படிக்கும் தங்கள் பண்பு வியப்பிற்குரியதாக உள்ளது அன்பரே...

    ReplyDelete
  9. கற்பனையும் கருத்தாழமும் கவிதையில்
    கண்டேன் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. மனிதனை பாடுபவனே மக்கள் கலைஞன்,நன்று அய்யா!

    ReplyDelete
  11. அருமை அருமை

    த.ம-7

    ReplyDelete
  12. நல்ல சிந்தனை நண்பரே....

    நல்ல கவிதை படைப்பிற்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete
  13. தற்புகழ்ச்சி இல்லா நிலவு..
    என்னைப்பாடியோர் கோடியுண்டு
    நீ உன் இனம் பற்றி பாடு எனக் கூறியது..
    சிந்தனையின் உச்சம்..
    அருமை நண்பரே.
    த.ம-8

    ReplyDelete
  14. ம்...ஆழ யோசித்தால் உண்மைதான்.அருமையான சிந்தனை !

    ReplyDelete
  15. நல்லா இருக்கு சார்.....

    ReplyDelete
  16. படுக்க இடமின்றி தெருவோரம் துயிலும் வறுமையையும் இரவில் அரங்கேறும் சமூக அவலங்களையும் பார்த்துப் பார்த்து மனம் நொந்திருக்கும் நிலவின் வார்த்தைகளில் இருக்கிறது உண்மை. அருமையான கவிக்கரு. பாராட்டுகள்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.