Thursday, January 5, 2012

பம்பர விளையாட்டு


பம்பர விளையாட்டுத்தான்
இந்த
வாழ்க்கை

பம்பரமாய்
நாம்

கயிறாய்
நம் ஆசை.


















டிஸ்கி:

அன்பு பதிவுலக நண்பர்களுக்கு.

என்னிடம் தற்போது கணினியோ அல்லது மடிக்கணினியோ இல்லை. ஆகவே நான் பதிவுகளை இடுவதற்கு எனது அலுவலகக் கணினியையே பயன்படுத்துகிறேன். வீட்டிற்கு சென்ற பிறகே பின்னூட்டம் மற்றும் வாக்குகளை எனது நோக்கியா மொபைலை பயன்படுத்தியே இட்டு வருகிறேன். அதில் தமிழில் டைப் செய்ய இயலாததால்தான் என்னுடைய பின்னூட்டங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் சிலர் என் மீது மிகுந்த வருத்தத்துடன் இருக்கலாம். தமிழில் பின்னூட்டமிட இயலவி;ல்லையே என்று வருத்தப்படாத நாளில்லை. என்ன செய்வது? சூழ்நிலைக் கைதியாய் இருக்கிறேன். கூடிய சீக்கிரம் மடிக்கணினியோ அல்லது மேஜைக்கணினியோ வாங்கி விடுகிறேன். அப்புறம் எல்லாம் தமிழ் தமிழ்தான். ஒரே தமிழ்மயமாக்கி விடுகிறேன். அதுவரைக்கும் பொறுத்தருள்க.










.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

22 comments:

  1. ஆசைகளே நம்மை ஆட்டுவிக்கிறது. அருமை....

    ReplyDelete
  2. அருமையான கவிதை

    ReplyDelete
  3. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. பம்பரமாய் சுழன்று நிற்கையில் முடிந்து விடுகிறது நம் வாழ்க்கை....


    அழகிய படைப்பு...

    ReplyDelete
  5. அற்ப்புதமான வரிகள்...

    ReplyDelete
  6. எனக்கு இது விளையாட தெரியாது.

    ReplyDelete
  7. ஆசைக் கயிற்றால் சுழலும் வாழ்க்கை.அருமை டேனியல்!

    ReplyDelete
  8. பெரும் பொருளை உரைத்த சிறிய அழகிய கவிதை துரை. மிக ரசித்தேன். மொபைலில் எப்படி உங்களால் டைப்பி பின்னூட்டமிட முடிகிறது என உள்ளூர வியந்திருக்கிறேன். அதனால் வருத்தம் ஏதுமில்லை. நனறி!

    ReplyDelete
  9. ஆமாம்,நீங்கள் சொல்கிறமாதிரி பம்பரவிளையாட்டே வாழ்க்கை.

    ReplyDelete
  10. வாழ்க்கையின் தத்துவம் சொல்லும் சின்னப் பம்பரத்தை சின்னதாவே அழகாச் சொல்லிட்டீங்க டேனியல் !

    ReplyDelete
  11. ஆசைதான் சுத்தி விட்டுகிட்டே இருக்கு...!!! அழகா சொல்லிருக்கீங்க..டேனியல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நல்ல பம்பரமும், அதற்கேற்ற தேர்ந்த சாட்டைக் கயிறும் இருந்து சுண்டிவிடப்படும் இடமும் சீராக இருந்தால் அந்த பம்பரம் சுற்றிச்சுழலும் அழகே அழகு. இவற்றில் எதுவொன்றில் குறையிருந்தாலும் சிக்கல்தான்.. அற்புதமானக் கருத்தை அநாயாசமாகச் சொல்லிவிட்டீர்கள்.. பாராட்டுகள்.

    ReplyDelete
  13. மிகச் சரி
    ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ஆசை
    நம்மை சுற்ற விடுவதைப் போல
    பமபரம் சுற்றி ஓய மீண்டும் சாட்டை சுற்றத் துவங்கிவிடுகிறோமே
    சிறிய படைப்புதான் ஆயினும்
    சிந்தைய கிளறிவிட்டுப் போகும் சீரிய பதிவு
    பகிர்வுக்கு நன்ரி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. திருக்குறள் போல சுருக்கி சில வரிகளில் வாழ்கையின் உண்மை தன்மையை சொல்லி விட்டீர்கள். எல்லோருக்கும் வாழ்கை இருக்கிறது எனவே வாழத்தான் வேண்டும்(சுற்றத்தான் வேண்டும்) ஆசையின் தன்மையை பொறுத்து அதன் விளைவும் பயனும் அமைகிறது. மற்றவர்களை மகிழ்விக்க சுற்றும் பம்பரமே உண்மையான சந்தோசம் அது புரிய பல காலம் எடுக்கிறது.

    ReplyDelete
  15. அருமையான கவிதை நண்பா

    ReplyDelete
  16. //என்னிடம் தற்போது கணினியோ அல்லது மடிக்கணினியோ இல்லை. ஆகவே நான் பதிவுகளை இடுவதற்கு எனது அலுவலகக் கணினியையே பயன்படுத்துகிறேன். வீட்டிற்கு சென்ற பிறகே பின்னூட்டம் மற்றும் வாக்குகளை எனது நோக்கியா மொபைலை பயன்படுத்தியே இட்டு வருகிறேன். அதில் தமிழில் டைப் செய்ய இயலாததால்தான் என்னுடைய பின்னூட்டங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது
    ///

    எனக்கும் அப்படிதான் ...

    ReplyDelete
  17. இலவசமாக இணைய இணைப்பு வேண்டுமா (ஒன்லி airtel ) ? மெயில் to rrajja.mlr@gmail.com

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.