Monday, January 2, 2012

உடல் அழுக்கா? மன அழுக்கா?

கோதாவரி ஆற்றங்கரையில் ஞானி ஒருவர் வசித்து வந்தார். நாள்தோறும் அதிகாலையில் அவர் அந்த ஆற்றில் நீராடி வந்து கடமைகளை ஆற்றி வந்தார். ஒருநாள் வழக்கம் போல் ஆற்றில் அவர் நீராடிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவரைப் பிடிக்காத தீயவன் ஒருவன் மரத்தின்மேல் இருந்தபடியே அவர்மீது எச்சிலைத் துப்பினான். அவர் ஒன்றும் பேசாமல் பொறுமையாகச் சென்று விட்டார். மறுநாளும் இப்படியே நடந்தது. அன்றும் அவர் அப்படியே பொறுமையாகச் சென்று விட்டார். இப்படியே பலநாட்கள் தொடர்ந்தது.

ஒவ்வொரு முறையும் ஏதும் பேசாமல் ஆற்றிற்கு திரும்பவும் சென்று நீராடிவிட்டு வந்துகொண்டிருந்தார் அவர். அந்த துஷ்டனுக்கு இது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.

ஒரு நாள் தன் செயலுக்கு வருந்திய அவன் அவர் கால்களில் விழுந்தான். “ ஐயா என் தீய செயலை மன்னியுங்கள். இத்தனை முறை நான் தங்கள் மீது எச்சில் துப்பியும் எப்படி உங்களால் கோபப்படாமல் இருக்க முடிந்தது? “

அதற்கு அவர் “ அன்பனே! நான் கோபப்பட்டு இருந்தால் என் உள்ளம் அழுக்காகி இருக்கும். உடல் அழுக்கானால் நீராடி தூய்மை செய்து கொள்ளலாம். உள்ளம் அழுக்கானால் எந்த வழியில் தூய்மை செய்வது? அதனால்தான் நான் அமைதியாக இருந்தேன் “ என்று விளக்கம் தந்தார்.



டிஸ்கி:

நான் பதிவெழுத ஆரம்பித்து 3 மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், தமிழ்மணம் சிறந்த பதிவுகள் பட்டியலில் எனக்கு 59-வது இடத்தை தந்துள்ளது எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நான் பதிவர் திரு. மோகன்குமார் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய பிறகுதான் எனக்கு விசயமே தெரிய வந்தது (என் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை). அவருக்கும் தமிழ்மணத்திற்கும் பதிவர்களாகிய உங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.







.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

23 comments:

  1. கருத்துக் கதை அருமை..59 வது இடத்திற்கு வாழ்த்துகளல்ல..முதல் இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள்..

    த.ம 1

    அன்போடு அழைக்கிறேன்..

    உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

    ReplyDelete
  2. நல்லதொரு விஷயத்தைச் சொன்ன குட்டிக்‌கதை நன்று. நீங்கள் மிகவிரைவில் முன்னேறி 59வது இடம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி நண்பா. மேலும் மேலும் முன்னேறி பல வெற்றிகளைக் குவிக்க இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்ல கதை

    மேலும் முன்னேற
    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  4. இருக்கும். உடல் அழுக்கானால் நீராடி தூய்மை செய்து கொள்ளலாம். உள்ளம் அழுக்கானால்....

    உண்மைதான் நண்பரே அழகான கருத்து கொண்ட பதிவு

    tamilmanam 3 rd vote

    ReplyDelete
  5. 3 மாதங்களில் 59 இடம் என்பது
    பெரும் சாதனைதான் வாழ்த்துக்கள்
    அருமையான கதையை பதிவாக்கித்
    தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  6. நல்லதொரு நீதிக்கதை... முதல் 100 பதிவுகளின் பட்டியலில் 59-ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  7. உங்கள் எழுத்தாற்றலுக்கு என் வாழ்த்துகள்.
    நல்லதொரு நீதிக்கதை !

    ReplyDelete
  8. ஹி... ஹி... தமிழ்மணம் ஒரு புரியாத புதிர்... அதையெல்லாம் லூஸ்ல விட்டுட்டு நீங்க தொடருங்க தல...

    ReplyDelete
  9. கருத்து நிறைந்த கதை நண்பரே.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. @ Madhumathi

    Thangal varugaikkum pakirvukkum Vaalthukkum mikka Nanri Sir.

    ReplyDelete
  11. @ Ganesh

    Varugaikkum pakirvukkum vaalthukkum Nanri Nanbare.

    ReplyDelete
  12. @ M.R.

    Varugaikkum pakirvukkum Nanri Sago. Ramesh!

    ReplyDelete
  13. @ Ramani

    Thangal Varugaikkum Pakirvukkum Vaalthukkum mikka Nanri Sir. Thodarum thangal aatharavukku enna pathil seyya pokiren? Mikka Nanri Sir. Thaangalum Thangal Kudumpaththaarum Nalamudan vaazha iraivanai manraadukiren.

    ReplyDelete
  14. @ Venkat Nagaraj

    Thangal Varugaikkum Pakirvukkum Vaalthukkum mikka Nanri Sir!

    ReplyDelete
  15. @ Hema

    Thangal thodar Varugahkkum Pakirvukkum Vaalthukkum Aatharavukkum en ithaya poorva Nanrigal Sagotharam.

    ReplyDelete
  16. @ Philosophy Prabhakaran

    Vaanga Thala. Varugaikkum mathippu vaayntha advice-kum mikka Nanri Sago.

    ReplyDelete
  17. @ Mahendran

    Thangal thodar varugaikkum pakirvukkum vaalthukkum mikka Nanri Sir!

    ReplyDelete
  18. காலம் குறுகியது என்றாலும் எழுத்தின் தாக்கம் பெரியது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. Congrats. Hope you will do well in the new year.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் சார்...திறமையை வெகுகாலம் மறைக்க முடியாது...

    ReplyDelete
  21. அருமையான பதிவு

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.