கனவுகளோடு வந்த
இந்தக் கதாநாயகிகள்
காகிதங்களாகிப் போனார்கள்
மலர்க்கரங்களின் கும்பிடுகை
மறுதலிக்கப்பட்ட கணங்களில்
சீதைகள் துகிலுரியப்பட்டார்கள்
வர்ணனைகளை வாங்கிய இதழ்கள்
சிகரெட் தொடுதல்களில்
கருகிப் போயின
கல்லூரிக் கலையரங்கங்கள்
களியாட்டக் கடைகளின்
புழக்கடையாகிப் போயின
பூவுக்குள் பூகம்பங்களல்ல
பூகம்பங்களுக்குள் பூக்கள்
சிறைப்பிடிக்கப்பட்டன
கடைசியாக…
சிதைகள் எரிந்தன
சீதைகளும்தான்.
.
Tweet | |||||
பூவுக்குள் பூகம்பங்களல்ல
ReplyDeleteபூகம்பங்களுக்குள் பூக்கள்
சிறைப்பிடிக்கப்பட்டன
கடைசியாக…
சிதைகள் எரிந்தன
சீதைகளும்தான்.//
மிக மிக அருமை
வார்த்தைகளை மீறி உணர்வுகள்
நெஞ்சடைக்கச் செய்து போகிறது
மன்ம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பூவுக்குள் பூகம்பங்களல்ல
ReplyDeleteபூகம்பங்களுக்குள் பூக்கள்
சிறைப்பிடிக்கப்பட்டன
வார்த்தை ஜாலங்கள் அருமை
கருத்துக்களும் அருமை வாழ்த்துகள்
கல்லூரிக் கலையரங்கங்கள்
ReplyDeleteகளியாட்டக் கடைகளின்
புழக்கடையாகிப் போயின
இன்றைய கலாச்சாரம் அப்படி என்ன செய்வது தோழர்?
சிறப்பு..
/கடைசியாக…
ReplyDeleteசிதைகள் எரிந்தன
சீதைகளும்தான்.
//
கொடுமை
நிஜத்தில் நடபவைகளை அருமையாக சொல்லியுள்ளிர்கள்
ReplyDeleteமிக சிறப்பான கவிதை பாஸ்
ReplyDeleteநிதர்சனங்கள் கொப்பளிக்கிறது வார்த்தைகளில்
ReplyDeleteஅருமையான கவிதை நண்பரே.
நாகரீக உலகில் பெண்களின் நிலையா கவிதை ?
ReplyDeleteஹேமா சொன்னது //நாகரீக உலகில் பெண்களின் நிலையா கவிதை ?//
ReplyDeleteஇல்லை சகோ. சினிமா ஆசையில் சிக்கி சீரழியும் சில பெண்களின் நிலைதான் இக்கவிதை. வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.
//கடைசியாக…
ReplyDeleteசிதைகள் எரிந்தன
சீதைகளும்தான்//
நல்ல வரிகள்.... சினிமா ஆசையில் இப்படி நிறைய பேர் சீரழிந்து விடுவது நிதர்சனம்....
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
nalla kavithai. Thamil manathil inaithu vitten nanbare
ReplyDelete@ ரஹீம் கசாலி
ReplyDeleteநன்றி சார்.
@ ரமணி
ReplyDelete@ தனசேகரன்
@ மதுமதி
@ என் ராஜபாட்டை ராஜா
@ k.s.s. Rajh
@ மகேந்திரன்
@ ஹேமா
@ வெங்கட் நாகராஜ்
@ ரத்னவேல்
@ ரஹீம் கசாலி
வருகை தந்து கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
கடைசியாக…
ReplyDeleteசிதைகள் எரிந்தன
சீதைகளும்தான்.
அழகாகச சொன்னீர்கள்..
கனவுகளோடு வந்த
ReplyDeleteஇந்தக் கதாநாயகிகள்
காகிதங்களாகிப் போனார்கள்
மூன்று வரிகளிலே கவிதை மிளிர்கிறது அருமை