Tuesday, January 10, 2012

எல்லோருக்கும் மரியாதை

இங்கிலாந்தில் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஒருவர் இருந்தார்.தன் பேரனிடம் அவர் " நற்பண்புகள் உள்ளவனாக நடந்துகொள். யாராக இருந்தாலும் மரியாதை செய்." என்று அறிவுரை கூறினார்.
"அப்படியே நடப்பேன்" என்றான் பேரன்.

இருவரும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். எதிரில் ஒரு பிச்சைக்காரன் தட்டுத் தடுமாறியபடி வந்தான். அவன் மார்பில் தொங்கிய அட்டையில் " எனக்கு கண் தெரியாது. உதவி செய்யுங்கள்" என்று எழுதியிருந்தது.

வெள்ளி நாணயம் ஒன்றை எடுத்துத் தன் பேரனிடம் கொடுத்து " பிச்சைக்காரனின் தட்டில் போட்டுவிட்டு வா" என்றார். பேரனும் அப்படியே அந்தக் காசை தட்டில் போட்டான்.பிச்சைக்காரனும அங்கிருந்து சென்றான்.

"உனக்குச் சிறிதுகூட மரியாதை தெரியவில்லையே. பிச்சைக்காரனுக்கு உன் தொப்பியைத் தூக்கி முதலில் வணக்கம் செலுத்தி இருக்கவேண்டும். அதன் பிறகு காசைத் தட்டில் போட்டிருக்க வேண்டும். நீ அப்படியே செய்தாயா? " என்று கேட்டார் அவர்.

" தாத்தா! அந்த பிச்சைக்காரனுக்குக் கண் தெரியாது. நான் வணக்கம் செலுத்தி இருந்தால் அவன் பார்த்திருக்க முடியாது" என்று பதில் சொன்னான் பேரன்.

" அந்தப் பிச்சைக்காரன் கண் பார்வை தெரியதாதவனைப் போல் நடிப்பவனாக இருந்தால் நீ மரியாதை செய்யாததைப் பார்த்த அவனுக்கு வருத்தம் ஏற்படும் அல்லவா?" என்று கேட்டார் அவர்.

" என் செயலுக்கு வருந்துகிறேன். இனி எல்லோருக்கும் வணக்கம் செலுத்துவேன். மரியாதை தருவேன்" என்றான் அவன்.











.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

22 comments:

  1. நல்ல தகவல் .. மரியாதையை தருவது இப்போது குறைந்து வருகின்றது ..

    ReplyDelete
  2. மரியாதையான பதிவு..மரியாதையை நிறையபேர் மறந்துட்டாங்க என்ன பண்றது..

    த.ம.1

    சந்தேகம்

    ReplyDelete
  3. அதுக்குள்ள முடிஞ்சிருச்சி....

    ReplyDelete
  4. ஓகோ நாம் நம்மை சரிசெய்து கொள்ளத்தான்
    அவர் அப்படிச் சொல்கிறாரா
    மிகச் சரி நாம் எதற்கு அடுத்தவருக்காக நடிக்க வேண்டும்
    அருமையான கருத்தைச் சொல்லிப் போகும் பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. எல்லோரிடத்திலும் மரியாதை என்பது மறந்து போன ஒன்றாகத்தான் உள்ளது நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  6. மரியாதை செலுத்துவோம்.

    ReplyDelete
  7. அருமை.. இப்படியான கதைகளின் மூலம் சொல்லும் கருத்துக்கள் மனதில் நிக்கிறது.........
    சிறு திருத்தம் நண்பரே..
    ///நீ அவமரியாதை செய்யாததைப் பார்த்த அவனுக்கு வருத்தம் ஏற்படும் அல்லவா?" ///

    நீ மரியாதை செய்யாததைப் பார்த்த அவனுக்கு வருத்தம் ஏற்படும் அல்லவா?"

    த.ம 10

    ReplyDelete
  8. நல்ல மரியாதையான பதிவு!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  9. மரியாதையான பதிவு...

    ReplyDelete
  10. மனதில் மரியாதை பதிகிறது !

    ReplyDelete
  11. நாம் நம் வரையில் நேர்மையாக இருக்கத் தூண்டும் அருமையான பதிவு. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    இடிமுழக்கம் அவர்கள் குறிப்பிடும் வரிகளில் தென்படும் முரண் களையப்பட்டால் கதையில் குழப்பம் உருவாகாது. கவனிக்க வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
  12. ஏமாற்றுவது அவன் பழக்கமாக இருந்தாலும் நாம் நமக்கு நேர்மையாக நடந்து கொள்வோம் என்கிற கருத்து பிரமாதம் துரை.

    ReplyDelete
  13. @ ராஜபாட்டை ராஜா
    @ ரஹீம் கஸாலி
    @ மதுமதி
    @ சசிகுமார்
    @ நண்டு @ நொரண்டு
    @ ரமணி
    @ கோகுல்
    @ இடிமுழக்கம்
    @ புலவர் சா இராமானுசம்
    @ ரெவரி
    @ ஹேமா
    @ கீதா
    @ கணேஷ்

    வருகை தந்து வாக்களித்து அருமையான பின்னூட்டமிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  14. @ சசிகுமார் சொன்னது //அதுக்குள்ள முடிஞ்சிருச்சி...//

    எனக்கு பக்கம் பக்கமா பெரிய பதிவுகள் இட வேண்டும் என்பதுதான் ஆசை சகோ. ஆனால் உங்களுக்கு படிக்க நேரமிருக்குமா? ஹி...ஹி...
    சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே நம்ம பாலிஸி தல....!

    ReplyDelete
  15. @ Sasikala

    நன்றி சகோ. தொடரும் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.

    ReplyDelete
  16. @ Rathnavel

    தொடரும் தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  17. இடிமுழக்கம் சொன்னது -

    //அருமை.. இப்படியான கதைகளின் மூலம் சொல்லும் கருத்துக்கள் மனதில் நிக்கிறது.........
    சிறு திருத்தம் நண்பரே..
    நீ அவமரியாதை செய்யாததைப் பார்த்த அவனுக்கு வருத்தம் ஏற்படும் அல்லவா?"

    நீ மரியாதை செய்யாததைப் பார்த்த அவனுக்கு வருத்தம் ஏற்படும் அல்லவா?"


    - நன்றி சகோ. தவறைச் சுட்டிக் காண்பித்ததற்கு மிக்க நன்றி. பதிவில் திருத்தி விட்டேன்.

    ReplyDelete
  18. கீதா சொன்னது

    //இடிமுழக்கம் அவர்கள் குறிப்பிடும் வரிகளில் தென்படும் முரண் களையப்பட்டால் கதையில் குழப்பம் உருவாகாது. கவனிக்க வேண்டுகிறேன் //

    நன்றி சகோ. தவறைச் சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி. திருத்திவிட்டேன்.

    ReplyDelete
  19. நல்ல கருத்துச் சொல்லும் பகிர்வு... நன்றி நண்பரே....

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.