Wednesday, January 18, 2012

தேனருந்தும் படலம்






பூக்களுக்கும் வண்டுகளுக்கும்
ஓயாத சண்டை

ஏன் வருகிறீர்கள்
எங்கள் நிம்மதியைக் கெடுக்க
என்றன பூக்கள்

தேன்பருகத்தானே
தேடி வருகிறோம்
என்றன வண்டுகள்

தேன்கொடுக்க விருப்பமில்லை
இனி வராதீர்கள்

ஆமென் என்றன
வண்டுகள்

காலங்கள் கடந்தன
கடிகாரங்கள் உடைந்தன

மகரந்தசேர்க்கை நின்றுபோய்
பூக்களினம் அழியத்தொடங்கியபொழுது….

தொடங்கியது அந்த
பூக்களின் மாநாடு

ஆர்ப்பாட்ட போர்டுகள்
அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன

வண்டினத்தை வரவேற்று
பாடலொன்று இயற்றப்பட்டது

வசந்தகீதம் கேட்டு
தேடிவந்தன வண்டுகள்

மறுபடியும்
தொடங்கியது
அங்கே...
தேனருந்தும் படலம்……..!













டிஸ்கி: வேலைப்பளுவால் அடிக்கடி வலைப்பூக்கள் பக்கம் அடிக்கடி வரமுடியவில்லை சொந்தங்களே!.




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

17 comments:

  1. நல்ல கற்பனையோடு புனையப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. நல்ல கவிதை....திரட்டிகளில் இணைத்துவிட்டேன் நண்பரே

    ReplyDelete
  3. @ Rajapattai Raja

    Varugaikkum Pakirvukkum Nanri Sir!

    ReplyDelete
  4. @ Rahim Gazzali

    Romba Thanks Nanbare! Thirattigalil inaikka kooda enakku time illai. Once again i say a lot of thanks to you sir!

    ReplyDelete
  5. ரசிக்க வைத்த கவிதை. நன்று!

    ReplyDelete
  6. இதுதான் சொல்றது யாரையும் வெறுக்கக்கூடாதுன்னு !

    ReplyDelete
  7. மறுபடியும்
    தொடங்கியது
    அங்கே...
    தேனருந்தும் படலம்……..!

    அருமையான கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. பூக்களுக்கும் அறியாமையோ விரட்டி பின் அழைக்கிறதே அருமை

    ReplyDelete
  9. புதிய சிந்தனை;கவிதை அருமை.

    ReplyDelete
  10. கடைசியில் வேறு வழியில்லையே! மகரந்தச்சேர்க்கை நடைபெற்றே ஆக வேண்டும்.

    ReplyDelete
  11. ரசிக்க வைத்த கவிதை...மிக நன்று...
    வாழ்த்துக்கள் நண்பரே ...

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.