Tuesday, January 3, 2012

அவிழ்க்க முடியாத முடிச்சுகள்




நான் போடவில்லை
ஆனாலும்
விழுந்துகொண்டேதான் இருக்கின்றன
முடிச்சுகள்

ஒருபக்கம்
ஒவ்வொன்றாய்
அவிழ்த்துக்கொண்டே இருக்கிறேன்
நான்

மறுபக்கம்
கொத்துக் கொத்தாய்
போட்டுக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கை.






.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

17 comments:

  1. முடிச்சை அவிழ்ப்பதற்குள் வாழ்க்கை தீர்ந்து விடுகிறது..என்ன செய்ய?

    அருமை..

    த.ம-1

    ReplyDelete
  2. வாழ்க்கையின் அதிசயமே அதுதானே சகோ
    முடிச்சுகள் விழவில்லை என்றால்
    வாழ்க்கை ருசிக்காது
    வாழ்வும் சகிக்காது

    கவிதை பிரமாதம்

    ReplyDelete
  3. முடிச்சுகள் விழுவதும் அதை அவிழ்ப்பதுமான வாழ்க்கையில் நமக்கு மட்டும் ஏன் இத்தனை முடிச்சுகள் என சிலநேரம் சலிப்பு எழுகிறது துரை. ஆனாலும் முடிச்சுகள் சுவாரஸ்யம்தான் என்று நினைக்கிறேன். மிக சிந்திக்க வைத்தது உங்கள் கவிதை. எக்ஸலண்ட்.

    ReplyDelete
  4. வில்லன்கள் இல்லாத கதையும்
    சிக்கல் சம்பவங்கள் இல்லாத எபிசோடும்
    முடிச்சு இல்லாத வாழ்வும்
    ஊரற்ற வளைவுகளற்ற நாற்கரச் சாலையும் மெத்தப் போர்
    தெளிவான முடுச்சுகளற்ற தங்கள் கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  5. கவிதையின் கரு உண்மை நிலையை உரக்க சொல்கிறது ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஆமாம்.முடிச்சு விழாமல் இருப்பதில்லை.வாழ்க்கையும் இதுதான் என்று ஆகிவிட்டது.

    ReplyDelete
  7. அது தான் மனித வாழ்க்கை....

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்
    முடிச்சிகள் இல்லாத வாழ்க்கை முழுமையில்லை...

    அழகிய கவிதை

    ReplyDelete
  8. அவிழா முடிச்சு ..
    அவிழ்க்கதுடிக்கும் மனது....

    ReplyDelete
  9. அழகாகச் சொன்னீர்கள் நண்பரே...

    ReplyDelete
  10. அவிழ்ப்பதும் முடிச்சாவதும்தான் வாழ்க்கை.எரிச்சலாக இருந்தாலும் இப்படித்தான் என ஓய்ந்துகொள்கிறோம்.அழகான கவிதை !

    ReplyDelete
  11. அன்பு நண்பரே தங்கள் இடுகையோடு தொடர்புடைய “முடிச்சவிக்கி!“ என்னும் எனது இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

    http://gunathamizh.blogspot.com/2011_08_08_archive.html

    ReplyDelete
  12. முடிச்சுகளுக்குள் சிக்காமல் வாழமுடிகிறதே... அதை எண்ணி மனம் தேற்றிக் கொள்ளவேண்டியதுதான். கவிதை ஒரு மனோபாவத்தை வெளிப்படுத்துகிறதென்றால் பின்னூட்டங்கள் வெவ்வேறு மனோபாவங்களை வெளிப்படுத்தி ரசிக்கச் செய்கின்றன. அதிலும் ரமணி சார் சொன்னது ரொம்ப அழகு. சிந்திக்கவைக்கும் கவிதைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  13. சார் தலைப்புக்கு ஏற்ற போட்டோ சூப்பர்....

    ReplyDelete
  14. @ மதுமதி
    @ நிவாஸ்
    @ கணேஷ்
    @ ரமணி
    @ அரசன்
    @ சண்முகவேல்
    @ கவிதைவீதி சௌந்தர்
    @ கோகுல்
    @ ரத்னவேல்
    @ ரஹீம ஹசாலி
    @ முனைவர் குணா
    @ கீதா
    @ சசிகுமார்

    - அனைத்து உள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  15. அவிழ்ப்பதும் போடுவதும் இதுதானே வாழ்க்கை அருமை அருமை

    ReplyDelete
  16. முடிச்சுக்கள் இல்லை என்றால் வலியும் இல்லை.. அதை அவிழ்த்துவிட்டதும் வரும் பேரானந்தமும் இல்லை. வெயில் இருந்தால் தான் நிழலின் கொடையை அனுபவிக்க முடியும்,அறிய முடியும். போராட்டமான வாழ்க்கைதான் சந்தோசம், முகம் கொடுக்க பழகி கொள்வதுதான் வாழ்கையை வாழ விரும்பியவன் செய்யவேண்டியது.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.