ஆங்கில மருத்துவத்தை நம்புவது நல்லதுதான். ஆனால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த தமிழ் மருத்துவமும் குறைந்தது அல்ல. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சில நல்ல விஷயங்களில் இந்த வெள்ளைப் பூண்டு மருத்துவமும் ஒன்று. ஆகவே இவற்றை நாமும் கடைப்பிடித்துத்தான் பார்ப்போமே!
வெள்ளைப்பூண்டை உள்ளிப்பூண்டு என்றும் சொல்வார்கள். நம்மில் அநேகர் இதனை அதிகமாக விரும்புவதில்லை. இதன் நெடி தாங்காவிட்டாலும் மிகுந்த ஆரோக்கியம் தரும் உணவுதான் இது.
" நீங்கள் இத்தனை ஆரோக்கியமாக இவ்வளவு காலம் வாழ்ந்திருப்பதின் இரகசியம் என்ன?" என்று வயது முதிர்ந்த அவரைக் கேட்டார் ஒருவர்.
"அதற்குக் காரணம் வெள்ளைப் பூண்டுதான்" என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் பதில் சொன்னார் அந்தப் பெரியவர்.
அவருடைய ஒளிமிக்க கண்கள்; உறுதியாக பளபளக்கும் பற்கள்; எங்கோ ஒரு நரை காணும் முடி மொழுமொழுவென்று திடமாகத் தோன்றிய உடடல் எல்லாவற்றையும் பார்த்து மற்றவர் வியந்தார்.
அந்த வயது முதிர்தோருடைய பதிலைக் கேடடு வியப்படைய வேண்டியதில்லை. நம் உடல் நோயின்றி இருக்கவும் நோயை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ளவும் வெள்ளைப் பூண்டு பெரும் அளவில் துணை புரிகிறது.
இதில் ஏ மற்றும் சி வைட்டமின்கள் ஏராளமாக இருக்கின்றன. முக்கியமாக உப்புச் சத்துக்களும் கந்தகமுங்கூட இதில் உள்ளன.
அதன் நெடிக்குப் பயந்தே பலர் அதை உண்பதில்லை. வீட்டு வைத்தியத்தில் பல மருந்துகளுக்கு வெள்ளைப் பூண்டு பயன்படுகிறது.
இரைப்பை, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெகுகாலமாகவே வெள்ளைப் பூண்டை மருந்தாக உபயோகிக்கிறார்கள்.
வெள்ளைப்பூண்டின் பருப்புகளைத் தோலை உரித்துவிட்டு. இலேசாக நசுக்கிப் துவரம் மற்றும் இதர பருப்புகளில் போட்டு சமைத்து சுடச்சுட சாதத்தில் கலந்து நெய் போட்டுச் சாப்பிட்டால் சுவையாகவே இருக்கும். இரண்டொரு மிளகையும் இடையில் கலந்து கொள்ளவேண்டும். மற்றும் சாம்பார், குழம்பு, பொரியல் இவைகளிலும் கலந்து சமைத்துச் சாப்பிடலாம்.
அஜீரணத்ததால் நேரும் வயிற்றுக்கோளாறையும், புளிப்பு சேருவதால் உண்டாகும் எரிச்சலையும் வெள்ளைப்பூண்டைத் தின்றே போக்கிவிடலாம்.
காது வலிக்கிறதா? பூண்டு போட்டுக் காய்ச்சிய தேங்காய் எண்ணெயை இரண்டொரு சொட்டுகள் விட்டால் சரியாகிவிடும. நகச் சுற்றுக்கும் இது கைகண்ட மருந்தாகும். சுண்ணாம்பு தண்ணீருடன் பூண்டு பருப்புகளை வைத்து இழைத்து கட்டினால் நகச்சுற்று அப்படியே அமுங்கிவிடும்.
நகச்சுற்று, பழுத்தும் உடையாமல் சுருக் சுருக்கென்று வலித்துக் கொண்டேயிருந்தால் இளஞ்சூடான சாதத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் ஒரு பருப்புப் பூண்டும் சேர்த்து நசுக்கி வைத்துக் கொண்டால் சீக்கிரம் உடைந்துவிடும்.
வெள்ளைப் பூண்டு பருப்புகளை நசுக்கி சமமாகத் தண்ணீரைக் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் காலரா கிருமிகள் அழிந்துவிடும்.
இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெள்ளைப் பூண்டு சேர்ந்த மருந்து மிகவும் நன்மை தரும். அவர்கள் காலை மாலை இருவேளைகளிலும் வெள்ளைப்பூண்டு பருப்புகளைச் சாப்பிட்டு வந்தால் நல்லது. பச்சையாகவும் தின்னலாம். அவித்தும் தின்னலாம். இதனால் நோய் நீங்குவதோடு உடலுக்கு பலமும் உற்சாகமும் உண்டாகும்.
சளியால் துன்புறுபவர்களுக்கு பூண்டுப் பருப்புகள் சீலவற்றை நெருப்பில் சுட்டுக் கொடுக்கலாம். அல்லது இரண்டொன்றாக நசுக்கி, ஒரு தக்காளி, சிறிது உப்பு இவை மூன்றையும் தாரளமாகத் தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து அந்த சூப்பைக் கொடுக்கலாம். இதைக் குடிப்பதால் வயிற்றில் உள்ளள புழுக்கள் கூட வெளியே வந்துவிடும்.
குழந்தைகளுக்கு வரும் மாந்த வலிப்புக்கு முதுகெலும்பில் வெள்ளைப்பூண்டை நசுக்கி பற்றுப் போட்டால் அது குறைந்துவிடும்.
இளங்குழந்தைகளுக்கு பூண்டு தட்டிப் போட்டு காய்ச்சிய விளக்கெண்ணெயை கையிருப்பாக வைத்துக் கொண்டு வெயில் வேளைகளில் உச்சியிலிடுவது நல்லது. இதை உள்ளுக்கும் புகட்டலாம்.
வயிற்றுக் கோளாறுகள் நீங்க இந்த விளக்கெண்ணெயில் பூண்டுடன் ஓமம், வசம்பு இவற்றையும் சேர்த்துக் கொள்வது நலம். இதனால் வளரும் குழந்தைதகள் எப்பொழுதும் ஆராக்கியமாக இருப்பார்கள்.
ஆலிவ் எண்ணெயோடு சேர்த்து அரைத்து விழுதாக்கிய பூண்டு பல சரும நோய்களுக்கு மருந்தாகும்.
நிமோனியா வந்தவர்கள் நாள்தோறும் சிறிது பூண்டை உண்டுவந்தால் ஆச்சரியப்படத்தக்க பலன் தெரியும். விரைவில் காய்ச்சல் நிற்பதோடு நுரையீரல்களும் சுத்தமாகும்.
தொண்டைச் சளிக்கு பாலில் பூண்டை போட்டுக் காய்ச்சி கொடுத்தால் குணமாகும். நுரையீரலில் சேர்ந்து விட்ட சளிக்கு பூண்டை நசுக்கி நெஞ்சில் பற்று போட்டால் கரைந்துவிடும்.
குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டியதும் நம் முன்னோர்கள் மஞ்சள் பொடியோடு ஒரு பூண்டையும் நசுக்கி உச்சந் தலையில் தேய்ப்பார்கள். அந்தப் பூண்டுத் தோலையும் சாம்பிராணியுடன் கலந்து புகைபோட்டு காட்டுவார்கள்.
உள்ளிப் பூண்டுக்கு சீதளத்தை இழுக்கும் குணமும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது.
பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை ஒழுக்கிற்கு வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி நூறு கிராம் அளவு எடுத்து சாறு பிழிந்து பாதிப்பக்கு உள்ளான பெண்களுக்கு கொடுக்க நல்ல குணம் தெரியும்.
அரைக்கீரையுடன் பூண்டும் மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட, உடலில் தோன்றும் அயர்வும் வலியும் நீங்கி உடல இலேசாகவும், சுகமாகவும் ஆகிவிடும்.
அடேங்கப்பா! இந்த வெள்ளைப்பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்தான் எத்தனை எத்தனை!...
ஆகவே இந்தத வெள்ளைப்பூண்டை அதன் வாசனை பிடிக்காவிட்டாலும் உணவில் அவ்வப்போது பயன்படுத்தி நலம் பெறலாம் இல்லையா?!
இப்பொழுது இதன் குணத்தை நன்கு தெரிந்து கொண்டதால் இனிமேலாவது இதை பயன்படுத்தி பலன் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
.
Tweet | |||||
வெள்ளைப் பூண்டைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்கள் பதிவு உதவியது..நன்றி..
ReplyDeleteத.ம-1
உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-3)
நல்ல தகவல்களுடன் அருமையான பகிர்வு நண்பரே.... பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபயனுள்ள குறிப்புகள் சார்... நன்றி....
ReplyDeleteஉணவே மருந்து,பூண்டின் மகத்துவம் அறிய வைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் பாஸ் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் இருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனி தொடர்ந்து வருவேன்
பூண்டின் மகத்துவம் உணரவைத்த
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே.
பகிர்வுக்கு நன்றிகள் பல.
அனைவருக்கும் பயன்படும்
ReplyDeleteஅனைவரும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய
தகவல் அடங்கிய பகிர்வுக்கு நன்றி,
தொடரவாழ்த்துக்கள்
Tha.ma 7
ReplyDeleteஎன் பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க. ஆனால் இத்தனை மருத்துவ குணம் இருக்குன்னு எனக்கு தெரியாது. தெரிந்து கொண்டேன். நன்றி சகோ
ReplyDeleteபயனுள்ள விளக்கமான பகிர்வு நன்றி சகோ!
ReplyDelete@ மதுமதி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
@ வெங்கட் நாகராஜ்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்.
@ சசிகுமார்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
@ கோகுல்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.
@ K.s.s.Rajh
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ. நானும் தொடர்ந்து தங்கள் தளத்துக்கு வருகிறேன்.
@ மகேந்திரன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார். தங்களது சொந்த ஊர் அனுபவங்கள் இனிமையாய் இருந்திருக்கும் என்று கருதுகிறேன். வரப்போகிற தங்களது பயணமும் பாதுகாப்பாய் அமைய இறைவனை வேண்டுகிறேன்.
@ ரமணி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
@ ராஜி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
@ சண்முகவேல்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
எனக்கு நிறையவே பிடிக்கும் வெள்ளைப்பூண்டு.எந்தக் கறிக்குள்ளும் ஒரு பல்லாவது போட்டுவிடுவேன்.நன்றி அருமையான பதிவுக்கு.சிலருக்கு இந்த உள்ளிவாசனை பிடிப்பதில்லை !
ReplyDeleteதகவல்கள் அருமை. நன்றி.
ReplyDeleteநம்மூர் மார்கெட்டில் பூண்டுப்பொரி விக்கறாங்க. சுட்ட பூண்டுப்பற்களை பொடியா நறுக்கி கரகரப்பாக்கி வச்சுருக்காங்க. டைம்பாஸ் சமாச்சாரம்தான்:-)
நம்மூட்டுலே பூண்டு கொஞ்சம் அதிகமாவே பயன்படுத்துவோம்.
நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
டேனியல் சார், சளி வந்தால் நானும் குழந்தைகளும் படாத பாடுபடுவோம். ஆண்டிபயாடிக் மருந்துகள் வயிற்றில் புண்ணை உருவாக்கி விடும். அதற்கொரு மருந்தினை பாட்டி ஒருவர் சொல்லி, அதன் பிறகு எத்தனை சளி வந்தால் தான் என்ன ? போயே போச்சு.... ஆண்டிபயாட்டிக் எல்லாம் பிச்சை வாங்கனும் இந்த மருந்தின் முன்னே.
ReplyDeleteகடுகு, திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து நன்கு பொடித்த பொடியை சிறு துளி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் மூக்கில் நீர் வடிந்தால் கூட நின்று விடும்.
வெள்ளைப்பூண்டைப் பற்றி நிறைய தகவல்கள். எனக்குப்பிடித்தது வெள்ளைப்பூண்டு குழம்புதான், கிராமங்களில் அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள்.
ReplyDeleteபயனுள்ள பதிவு தோழரே.............
ReplyDeleteபயன் தரும் பதிவு!
ReplyDeleteநான் வெங்காயமும் வெள்ளைப் பூண்டும்
அதிகம் பயன்படுத்துவேன்!
சா இராமாநுசம்
தெரிந்து கொள்ளவேண்டிய அருமைபதிவு நண்பரே வாழ்த்துகள்.
ReplyDeleteஇதுல எவ்வளவு விஷயம் இருக்கா ? ரொம்ப நன்றி
ReplyDeleteஇவ்வளவு தகவல்கள் உள்ளதா இந்த பூண்டில் ..
ReplyDeleteநான் அறிந்தது கொஞ்சம் தான் ... இப்போ நிறைய அறிய வழங்கிய உங்களுக்கு நன்றிகள்
தேவையான பதிவு நண்பரே
ReplyDeleteபூண்டின் மகத்துவம் உணரவைத்த
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே...
நல்ல பதிவு.ஆனால் எனக்கு அந்த மணம் பிடிக்காதே.பூண்டு முத்துக்கள் வாங்கி விழுங்க வேண்டியதுதான்.
ReplyDeleteநல்லதொரு பகிர்வு.
ReplyDeleteஅப்படியே சாப்பிடப் பிடிக்காதவங்க பூண்டைத் தணல்ல சுட்டோ இல்லைன்னா பால்ல வேக வெச்சோ கூட சாப்பிடலாமே.
பூண்டுக் குழம்பின் மகிமையை நாலு முழ நாக்கிருப்பவரே அறிவார் :-))
@ ஹேமா
ReplyDelete@ துளசி கோபால்
@ ரத்னவேல்
@ கோவை எம். தங்கவேல்
@ விச்சு
@ இடிமுழக்கம்
@ புலவர் சா இராமாநுசம்
@ தனசேகரன்
@ ராஜபாட்டை ராஜா
@ அரசன்
@ முனைவர் குணசேகரன்
@ ரெவரி
@ சென்னைப்பித்தன்
@ அமைதிச்சாரல்
வருகை தந்து வாக்களித்து அருமையாக பின்னூட்டமிட்ட அனைத்த உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபூண்டை பற்றிய மருத்துவ குறிப்புகள் அருமை
ReplyDelete//வெள்ளைப்பூண்டின் பருப்புகளைத் தோலை உரித்துவிட்டு. இலேசாக நசுக்கிப் துவரம் மற்றும் இதர பருப்புகளில் போட்டு சமைத்து சுடச்சுட சாதத்தில் கலந்து நெய் போட்டுச் சாப்பிட்டால் சுவையாகவே இருக்கும். இரண்டொரு மிளகையும் இடையில் கலந்து கொள்ளவேண்டும். மற்றும் சாம்பார், குழம்பு, பொரியல் இவைகளிலும் கலந்து சமைத்துச் சாப்பிடலாம்.//
படிக்கும் போதே உடனே செய்யனும் போல் உள்ளது