Friday, January 6, 2012

எதிலும் ஒரு நியாயம் வேண்டாமா ?




சூஃபி அறிஞரான சூனூன் என்பவர் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். புதிதாக மாணவனாகச் சேர வருபவர்களிடம் “ இதற்கு முன்பு நீ எந்த ஆசிரியரிடமாவது கல்வி கற்று இருக்கிறாயா? என்னிடம்தான் முதன் முதலாக கல்வி கற்க வருகிறாயா? “ என்று கேட்பது வழக்கம்.

“ இங்குதான் முதன் முறையாக கல்வி கற்க வருகிறேன் ” என்று மாணவன் பதில் சொன்னால் உரிய கட்டணம் வாங்குவார். ஏற்கனவே ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்று இருக்கிறேன் என்றால் இரட்டிப்பு கட்டணம் வாங்குவார்.

அவரின் இந்த விந்தையான நடவடிக்கையைப் பார்த்து எல்லோரும் வியப்படைந்தனர். நண்பர் ஒருவர் அவரிடம் “ஏற்கனவே கல்வி கற்றவருக்கு நீங்கள் கற்றுத்தர வேண்டியது அதிகம் இருக்காதே. அவரிடம் பாதிக் கட்டணம் வாங்குவதுதானே சரி. இதுதானே உலக வழக்கம். ஆனால் நீங்களோ புதிதாகக் கற்க வருபவர்களிடம் வாங்குவதைப்போல இரண்டு மடங்கு கட்டணம் வாங்குகிறீர்களே. இது ஏன்? ” என்று கேட்டார்.

அதற்கு அந்த அறிஞர் “ நண்பரே! நான் கற்றுத் தரும் கல்வி மாறுபாடானது. என் வழிமுறைகள் வேறுபாடு ஆனவை. ஏற்கனவே கல்வி கற்றவர் என்னிடம் வந்தால் அவர் கற்றிருப்பதை எல்லாம் மறக்க வைக்க நான் உழைத்தாக வேண்டும். புதிதாக வருபவர் நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார். அவருக்காக நான் அதிகம் உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதனால்தான் இப்படிப்பட்ட கட்டண முறை” என்று விளக்கினார்.







.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

22 comments:

  1. மிகச் சரி
    முதலில் குப்பையை அப்புறப்படுத்தி பின்னால்
    கோலம் போட்டால்தானே சரியாக இருக்கும்
    குப்பையை அப்புறப் படுத்துவதற்க்குத்தான்
    கொஞ்சம் அதிகப் பணம் வாங்குகிறார் என நினைக்கிறேன்
    அருமையான கருத்துள்ள கதை
    பகிர்வுக்கு நன்றி
    த,ம 1

    ReplyDelete
  2. @ ரமணி

    தங்களின் உடன் வருகைக்கும் விரிவான அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி. தொடரும் தங்களின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி சார்.

    ReplyDelete
  3. நல்லதொரு நீதிக்கதை...

    பகிர்வுக்கு நன்றி...

    உண்மைதான் தெரியாதவர்களுக்கு புரிய வைத்துவிடலாம்.. பாதி கற்று அல்லது முழுதாக தெரிந்தவருக்கு புரிய வைப்பது என்பது மிகவும் கடினமானது...

    ReplyDelete
  4. எளிமையாக புரிய வைக்கும் நல்ல கதை.நன்று.

    ReplyDelete
  5. கதை ,கவிதைகளென கருத்தை அருமையாக எடுத்து சொல்கிறிர்கள். வாழ்த்துக்கள் நண்பரே. த.ம. 6

    ReplyDelete
  6. சரியான கோணத்தில் சிந்தித்திருக்கிறார். அரைகுறை ஞானமுள்ளவன் என்றுமே ஆபத்தானவன். அருமையான குட்டிக் கதை துரை!

    ReplyDelete
  7. அவர் சொன்னதில் தவறேயில்லை.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. @ Rahim Kazzali

    Varugaikkum Pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  9. சிந்திக்கவைக்கும் அணுகுமுறை நண்பரே..

    அருமை..

    ReplyDelete
  10. @ Kavithaiveethi Soundar

    Varugaikkum Pakirvukkum Nanri Nanbare!

    ReplyDelete
  11. நல்லதொரு ஆசானாக அவர் யோசித்திருக்கிறார். பாதி கிணறு தாண்டுவதென்பது எப்போதுமே ஆபத்தானது சகோ

    ReplyDelete
  12. நான் கார் பழகப்போனபோது இதேமாதிரி நடந்திச்சு.கதையைப் படிச்சதும் சிரிப்புத்தான் வந்திச்சு !

    ReplyDelete
  13. தல நானும் பாடம் கத்துக்க விரும்புறேன் கட்டணம் சொல்லுங்க

    ReplyDelete
  14. அருமையான நீதிக் கதை....

    ReplyDelete
  15. எதுவுமே தெரியாம இருக்கிறவனுக்கு எளிமையா சொல்லி கொடுத்திடலாம். நெறைய தெரிஞ்சவனுக்கும் எளிமையா சொல்லிகொடுத்திடலாம். ஆனால் அரைகுறைகள் எப்போதும் எளிதில் உள்வாங்க மாட்டார்கள். பதிவுலகிலே அதுமாதிரி நெறைய பேர் இருக்காங்க.

    ReplyDelete
  16. வித்தியாசமான அணுகுமுறை...ஆனால் சரியானது.

    ReplyDelete
  17. கதைக்குள் இருக்கும் கருத்து அருமை. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  18. உண்மைதான் அரைகுறை என்றால் என்ன செய்வது
    ஆசிரியர் தெளிவாக இருக்கிறார் .
    அருமை

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.