Wednesday, January 4, 2012

தன்னைப் போலவே உலகம்




நண்பகல் நேரம். வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. மரத்தின் அடியில் ஒருவன் படுத்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வெயில் அவன் மீது பட்டுக்கொண்டிருந்தது.

அந்த வழியாக வந்த விறகு வெட்டி ஒருவன் அவனைப் பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாகத்தான் இவன் இருக்கவேண்டும். உழைத்த களைப்பினால்தான் இந்த வெயிலிலும் நன்கு தூங்குகிறான்” என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

அடுத்ததாகத் திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். “இரவு முழுவதும் கண் விழித்துத் திருடியிருப்பான் போல இருக்கிறது. அதனால்தான் இந்த நண்பகல் நேரத்தில் கூட அடித்துப்போட்டது போல இப்படித் தூங்குகிறான்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அங்கே வந்தான். “காலையிலேயே இவன் நன்றாகக் குடித்துவிட்டான் போல இருக்கிறது. அதுதான் குடிமயக்கத்தில் விழுந்து கிடக்கிறான்” என்று சொல்லிச் சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் அந்த வழியாக வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இத்தகைய செயலைச் செய்ய முடியும்” என்று அவனை வணங்கிவிட்டுச் சென்றார்.








.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

18 comments:

  1. கதையும் கருத்தும் நன்று. தொடருங்கள்.
    http://www.idimulhakkam.blogspot.com/

    ReplyDelete
  2. இந்த உலகம் தன் பார்வையிலேயே மற்றவர்களையும் எடைபோடுகிறது என்று உணர்த்தும் அருமையான கதை. பகிர்விற்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  3. லோகோ பின்ன ருசி! அவரவர் பார்வையில் ஒரே விஷயம் எத்தனை விதமாகத் தெரிகிறது! அருமையான கதை துரை. நன்றி.

    ReplyDelete
  4. தன்னைப் போல்தான் எல்லோரும் இருப்பார்கள் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள் என்ற கருத்தை சொல்கிற கதை..சிறப்பு..
    த.ம-4
    ஈரோட்டு சூரியன்

    ReplyDelete
  5. மனித இயல்பை மிக இயல்பாகச்
    சொல்லிப் போகும் பதிவு மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  6. ஆமாம் சகோ! தான் திருடன் அசலானை நம்ப மாட்டான் என்று சொல்வார்கள்.எளிமையான நல்ல கதை மூலம் சிறப்பாக விளங்க வைத்துவிட்டீர்கள்.நன்று

    ReplyDelete
  7. ஒருவர் எண்ணத்திலிருந்து அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நல்லதொரு கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. அஹா நல்லா இருக்கு..இது அதுல்ல!

    ReplyDelete
  9. காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள்னு சொல்வாங்களே!!

    நல்லாருக்குக் கதை.

    ReplyDelete
  10. சிறப்பான கதை நம் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம்

    ReplyDelete
  11. ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பார்க்கிறார்கள் என்பதை சொல்லும் கதை. நம் உலகமும் இப்படித்தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் நண்பரே.

    ReplyDelete
  12. உலகில் அனைவரும் தர்மருக்கு நல்லவர்களாக தெரிய, துரியோதனனுக்கு கெட்டவர்களாய் தெரிந்தார்கலாம்

    அது இதுதான் போல

    ReplyDelete
  13. @ இடிமுழக்கம்
    @ ரஹீம கஸாலி
    @ கணேஷ்
    @ மதுமதி
    @ ரமணி
    @ சண்முகவேல்
    @ கீதா
    @ நண்டு நொரண்டு
    @ நிவாஸ்

    வருகை தந்து வாக்களித்து விரிவான பின்னுட்டம் இட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் என்றும் அன்புடன் உங்கள் சகோ.

    ReplyDelete
  14. @ விக்கிஉலகம்

    தங்களை இனிதே வரவேற்கிறேன். தங்களது முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  15. @ ஹுசைனம்மா

    தங்களை இனிதே வரவேற்கிறேன். தங்களது முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  16. @ சிராஜ்

    தங்களை இனிதே வரவேற்கிறேன். தங்களது முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  17. @ Sasikala

    தொடரும் வருகைக்கும் அருமையான கருத்துரைகளுக்கும் நன்றிகள் பல சகோ.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.