நிலாவைப் பாடு
நிலாவைப் பாடு
என்றனர்
என் நண்பாகள்
நிலாவைப் பார்த்தேன்
முதலில் மானுடம் பாடு
மனிதனின் வறுமையைப் பாடு
பின்பு நீ என்னைப்பற்றியல்ல
நான் உன்னைப் பற்றி எழுதுகிறேன்
ஒரு காவிய கவிதை
நிலவை
மானிடர்கள் போற்றிய
காலங்கள் மாறும்
மானிடனை நிலவு போற்றிய
காவியம் அரங்கேறும்
என்றது நிலவு
என் நண்பர்களைப் பார்த்தேன்
அவாகள் முகங்களை
மூடியிருந்தன
வெட்கத் திரைகள்.
.
Tweet | |||||
அருமை அருமை
ReplyDeleteஅமுதைப் பொழியும் நிலவுக்கு
கவிதை பொழிவதா கஷ்டம்
மனிதர்களின் மோசமான கவதைகள் கண்டு
எத்தனை நாள்தான் அதுவும் பொறுமைகாக்கும்
அழகான வித்தியாசமான அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
அழகாகச் சொன்னீர்கள் நண்பரே..
ReplyDeleteஅன்பு நண்ரே..
ReplyDeleteநெடுவெண்ணிலவினார் என்ற பெயர் கொண்ட புலவர் ஒருவர் சங்க இலக்கியத்தில் பாடல் ஒன்று பாடல் பாடியிருக்கிறார்க அறிவீர்களா..?
http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_06.html
நல்ல சிந்தனை. மானிடம் வளர்க்கும் கவிஞர்களை நிலவும் வாழ்த்திப் பாடும் என்று சொல்லியிருக்கும் கோணம் பிரமாதம் துரை. வாழ்த்துக்கள்.
ReplyDelete@ ரமணி
ReplyDeleteஉடனுக்குடன் வந்து அருமையாய் பின்னூட்டமிடும் தங்கள் அன்புக்கு முதலில் நன்றி. உண்மைதான் சார். அமுதைப் பொழியும் நிலவுக்கு கவிதை பொழிவது சுலபம்தான்.
@ முனைவா இரா.குணசீலன்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி முனைவரே. தாங்கள் குறிப்பிட்ட தங்களின் பதிவையும் சுவாசித்தேன். நன்றி.
@ கணேஷ்
ReplyDeleteஉடனுக்குடன் வந்த பிரதிபலன் பாராது பின்னூட்டமிடும் தங்களின் மனது யாருக்கு வரும்.இளம் பதிவாகளை ஊக்குவிக்கும் தங்களின் பண்பாடு போற்றத்தக்கது. தங்களின் அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி சார்.
வருகைக்கும் வாசி்த்தலுக்கும் நன்றிகள் நண்பரே..
ReplyDeleteபழந்தமிழ் இலக்கியங்களைக்கூட விரும்பிப் படிக்கும் தங்கள் பண்பு வியப்பிற்குரியதாக உள்ளது அன்பரே...
கற்பனையும் கருத்தாழமும் கவிதையில்
ReplyDeleteகண்டேன் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மனிதனை பாடுபவனே மக்கள் கலைஞன்,நன்று அய்யா!
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteத.ம-7
நல்ல சிந்தனை நண்பரே....
ReplyDeleteநல்ல கவிதை படைப்பிற்கு வாழ்த்துகள்.....
தற்புகழ்ச்சி இல்லா நிலவு..
ReplyDeleteஎன்னைப்பாடியோர் கோடியுண்டு
நீ உன் இனம் பற்றி பாடு எனக் கூறியது..
சிந்தனையின் உச்சம்..
அருமை நண்பரே.
த.ம-8
ம்...ஆழ யோசித்தால் உண்மைதான்.அருமையான சிந்தனை !
ReplyDeleteநல்லா இருக்கு சார்.....
ReplyDeleteஅருமை...அருமை...
ReplyDeleteபடுக்க இடமின்றி தெருவோரம் துயிலும் வறுமையையும் இரவில் அரங்கேறும் சமூக அவலங்களையும் பார்த்துப் பார்த்து மனம் நொந்திருக்கும் நிலவின் வார்த்தைகளில் இருக்கிறது உண்மை. அருமையான கவிக்கரு. பாராட்டுகள்.
ReplyDelete