பம்பர விளையாட்டுத்தான்
இந்த
வாழ்க்கை
பம்பரமாய்
நாம்
கயிறாய்
நம் ஆசை.
டிஸ்கி:
அன்பு பதிவுலக நண்பர்களுக்கு.
என்னிடம் தற்போது கணினியோ அல்லது மடிக்கணினியோ இல்லை. ஆகவே நான் பதிவுகளை இடுவதற்கு எனது அலுவலகக் கணினியையே பயன்படுத்துகிறேன். வீட்டிற்கு சென்ற பிறகே பின்னூட்டம் மற்றும் வாக்குகளை எனது நோக்கியா மொபைலை பயன்படுத்தியே இட்டு வருகிறேன். அதில் தமிழில் டைப் செய்ய இயலாததால்தான் என்னுடைய பின்னூட்டங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் சிலர் என் மீது மிகுந்த வருத்தத்துடன் இருக்கலாம். தமிழில் பின்னூட்டமிட இயலவி;ல்லையே என்று வருத்தப்படாத நாளில்லை. என்ன செய்வது? சூழ்நிலைக் கைதியாய் இருக்கிறேன். கூடிய சீக்கிரம் மடிக்கணினியோ அல்லது மேஜைக்கணினியோ வாங்கி விடுகிறேன். அப்புறம் எல்லாம் தமிழ் தமிழ்தான். ஒரே தமிழ்மயமாக்கி விடுகிறேன். அதுவரைக்கும் பொறுத்தருள்க.
.
Tweet | |||||
ஆசைகளே நம்மை ஆட்டுவிக்கிறது. அருமை....
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
பம்பரமாய் சுழன்று நிற்கையில் முடிந்து விடுகிறது நம் வாழ்க்கை....
ReplyDeleteஅழகிய படைப்பு...
அற்ப்புதமான வரிகள்...
ReplyDeleteஎனக்கு இது விளையாட தெரியாது.
ReplyDeleteஆசைக் கயிற்றால் சுழலும் வாழ்க்கை.அருமை டேனியல்!
ReplyDeleteஅருமை..
ReplyDeleteத.ம.8
த.ம.7
ReplyDeleteபெரும் பொருளை உரைத்த சிறிய அழகிய கவிதை துரை. மிக ரசித்தேன். மொபைலில் எப்படி உங்களால் டைப்பி பின்னூட்டமிட முடிகிறது என உள்ளூர வியந்திருக்கிறேன். அதனால் வருத்தம் ஏதுமில்லை. நனறி!
ReplyDeleteஆமாம்,நீங்கள் சொல்கிறமாதிரி பம்பரவிளையாட்டே வாழ்க்கை.
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteவாழ்க்கையின் தத்துவம் சொல்லும் சின்னப் பம்பரத்தை சின்னதாவே அழகாச் சொல்லிட்டீங்க டேனியல் !
ReplyDeleteஆசைதான் சுத்தி விட்டுகிட்டே இருக்கு...!!! அழகா சொல்லிருக்கீங்க..டேனியல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல பம்பரமும், அதற்கேற்ற தேர்ந்த சாட்டைக் கயிறும் இருந்து சுண்டிவிடப்படும் இடமும் சீராக இருந்தால் அந்த பம்பரம் சுற்றிச்சுழலும் அழகே அழகு. இவற்றில் எதுவொன்றில் குறையிருந்தாலும் சிக்கல்தான்.. அற்புதமானக் கருத்தை அநாயாசமாகச் சொல்லிவிட்டீர்கள்.. பாராட்டுகள்.
ReplyDeleteமிகச் சரி
ReplyDeleteஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ஆசை
நம்மை சுற்ற விடுவதைப் போல
பமபரம் சுற்றி ஓய மீண்டும் சாட்டை சுற்றத் துவங்கிவிடுகிறோமே
சிறிய படைப்புதான் ஆயினும்
சிந்தைய கிளறிவிட்டுப் போகும் சீரிய பதிவு
பகிர்வுக்கு நன்ரி
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 13
ReplyDeleteதிருக்குறள் போல சுருக்கி சில வரிகளில் வாழ்கையின் உண்மை தன்மையை சொல்லி விட்டீர்கள். எல்லோருக்கும் வாழ்கை இருக்கிறது எனவே வாழத்தான் வேண்டும்(சுற்றத்தான் வேண்டும்) ஆசையின் தன்மையை பொறுத்து அதன் விளைவும் பயனும் அமைகிறது. மற்றவர்களை மகிழ்விக்க சுற்றும் பம்பரமே உண்மையான சந்தோசம் அது புரிய பல காலம் எடுக்கிறது.
ReplyDeleteஅருமையான கவிதை நண்பா
ReplyDelete//என்னிடம் தற்போது கணினியோ அல்லது மடிக்கணினியோ இல்லை. ஆகவே நான் பதிவுகளை இடுவதற்கு எனது அலுவலகக் கணினியையே பயன்படுத்துகிறேன். வீட்டிற்கு சென்ற பிறகே பின்னூட்டம் மற்றும் வாக்குகளை எனது நோக்கியா மொபைலை பயன்படுத்தியே இட்டு வருகிறேன். அதில் தமிழில் டைப் செய்ய இயலாததால்தான் என்னுடைய பின்னூட்டங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது
ReplyDelete///
எனக்கும் அப்படிதான் ...
இலவசமாக இணைய இணைப்பு வேண்டுமா (ஒன்லி airtel ) ? மெயில் to rrajja.mlr@gmail.com
ReplyDeleteநண்பர்களே உங்களுக்காக :
ReplyDeleteரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)