Saturday, November 26, 2011

என் மனக்குதிரை

என் மனக்குதிரைக்கு
கடிவாளம் போட முயன்று
தோற்றுப்போனேன்
மாம்ச இச்சை கொண்டு
சீறி எழுந்தது
புல் கொடுத்தேன்
உண்ணாமல்
புலால் வேண்டும் என்றது
உலகோர் சிரிக்க மாட்டார்களாவென்றேன்
அதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்றது
காதல் கேட்டது
கொடுத்தபோது மறுத்து
காமம் கேட்டது
சரி என்று கொடுத்தபோது
இரண்டும் வேண்டும் என்றது
எப்படியோ போவென்று
கயிறறுத்து கிளம்பியபோது
காலடியில் குழைந்தது
நாடகம் புரியாது
திகைத்தது
என் கவிமனது.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

11 comments:

  1. மனக்குதிரையின் வடிவத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  2. மனம் ஒரு குரங்கு என்று சொல்லிவிட்டார்களே! எல்லோருக்கும் அப்படித்தான்! நன்று

    ReplyDelete
  3. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago. Hema.

    ReplyDelete
  4. Thangalin varugaikkum karuthuraikkum nanri Sago.Shanmugavel.

    ReplyDelete
  5. அடக்கவே முடியாத ஒன்று மனம் என்பதை உணர்த்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  6. மனக் குதிரையினை விளையாட்டை
    அருமையான பதிவாக்கித் தந்தமைக்கு
    வாழ்த்துக்கள் த.ம 5

    ReplyDelete
  7. என் மனக்குதிரைக்கு
    கடிவாளம் போட முயன்று
    தோற்றுப்போனேன்
    மாம்ச இச்சை கொண்டு
    >>>
    மனக்குதிரைக்கு கடிவாளம் போடுறது ரொம்ப கஷ்டம்ங்க சகோ

    ReplyDelete
  8. Varugaikkum karuthuraikkum nanri Sago.Puthiyathenral.

    ReplyDelete
  9. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago.Raji.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.