Wednesday, November 16, 2011

ஆன்மாவின் கண்ணீர்

அழுவது பலவீனமல்ல
அது என் ஆன்மாவின் கண்ணீர்

வலிதாங்கா இதயங்களின் வலிகளை
உள்வாங்கிய
என் மனப்பனி உருகிய
உதிர ஊற்று

கண்ணீரை அற்பமாய் எண்ணாதீர்கள்
ஏழை இதயங்களின் கண்ணீர்
தேசங்களை கரைக்கும்
எரிதிராவகங்களாகும்

எல்லா இதயமும் அழுவதில்லை
ஏனென்றால்
எல்லா இதயமும் இதயமல்ல

என் இனிய எதிரிகளே
என் ஆன்மாவின் கண்ணீரை
புரிந்துகொள்ளுங்கள்
அது பிரளயமாய் மாறும்போது
உங்கள் வஞ்சக அணைகள்
தாக்குப்பிடிக்காது.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

5 comments:

  1. அழுகை அது ஆன்மாவின் கண்ணீர்
    அருமையான சிந்தனை
    அருமையான சொற்பிரயோகம்
    வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. நன்றி ரமணி சார்! தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  3. என் இனிய எதிரிகளே
    என் ஆன்மாவின் கண்ணீரை
    புரிந்துகொள்ளுங்கள்
    அது பிரளயமாய் மாறும்போது
    உங்கள் வஞ்சக அணைகள்
    தாக்குப்பிடிக்காது.// அசத்தலான கவிதை..

    எதிரிகளுக்கான எச்சரிக்கை..

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் கருத்துரைக்கும் நன்றி வேடந்தாங்கல் கருன்.

    ReplyDelete
  5. "கண்ணீரை அற்பமாய் எண்ணாதீர்கள்-உண்மைதான் "ஏழைகளின் கண்ணீரும், பெண்விடும் கண்ணீரும் பாவமனது,பொல்லாதது- எரித்துவிடும்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.