கங்கை நதியின் கரையோரங்களில் வழக்கமாய் நடைபெறும் ஒரு காரியம் என்னவென்றால் நதிக்கரையோர கிராமங்களில் வசிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் பிணங்களை சடங்குகளெல்லாம் செய்து முடித்தபின் மலர்மாலை அலங்காரங்களோடு ஒரு கட்டையில் வைத்துக் கட்டி கங்கை நதியில் விட்டுவிடுவார்கள். அடக்கம் செய்ய மாட்டார்கள். இது அவர்களின் பழக்கமாகும்.
அந்த நதிக்கரையோர கிராமம் ஒன்றில் வசிப்பவன் பெயர் ராம்சிங். இவனுடைய வேலை என்ன தெரியுமா? ஆற்றில் மிதந்து வருகிற பிணங்களை எடுத்து அவற்றின் தலையை மட்டும் துண்டித்து எடுத்துவிட்டு உடல்களை ஆற்றில் வீசி எறிந்து விடுவானாம். தலையை பல நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்து விடுவானாம். தலை அழுகி சதைகள் கழிந்த பிறகு மண்டையோடாய் மாறி இருக்கும். அதைத் தோண்டி எடுத்து ரூ.3000 முதல் ரூ.5000 வரை விலை வைத்து விற்று விடுவானாம். மண்டையோட்டை வைத்து மந்திரவாதம் செய்பவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தனி நபர்கள் என்று பலருக்கும் இவ்விதமாக நல்ல லாபத்திற்கு விற்று விடுவானாம். இவ்விதமாய் இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட மண்டையோடுகளை விற்பனை செய்து இருக்கிறானாம். சிறப்பு காவல்துறை புலனாய்வுக் குழுவினர் இரகசியமாக, நுணுக்கமாக கண்காணித்து இவனை கையும் களவுமாக பிடித்து இருக்கிறார்களாம்.
இன்னும் இதுபோல் எத்தனை பேர் இருக்கிறார்களோ தெரியவில்லை.
இந்த மண்டையோட்டு வியாபாராம் வடநாட்டில் மிகவும் பரபரப்பாய் பேசப்படுகிறதாம்.
நன்றி: தினத்தந்தி
Tweet | |||||
இதெல்லாம் கூடவா பிஸினெஸ்? அவ்வ்வ்வ்
ReplyDeleteவடநாட்டில் மட்டுமல்ல சென்னையில் கூட விற்கிறார்கள்... என்ஜினியரிங் மாணவ மாணவிகள் Drafter வாங்கி வச்சிருக்குற மாதிரி மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகள் சிலர் இப்படி எலும்புக்கூடுகளை வாங்கி வைப்பதுண்டு...
ReplyDeleteமண்டையோட்டுக்கும் ஆபத்தா..
ReplyDeleteகுப்பையே காசாகும்போது மண்டையோடு காசாகாதா?
ReplyDeleteஉயிரோடு இருப்பவர்களை கொனறு மண்டயை எடுக்காதாவரை பயமில்லை.
நல்லாதான் பண்றாங்க வியாபாரத்தை .
ReplyDeleteத.ம 3
வெளங்கிடும்....,
ReplyDeleteத ம4
ReplyDelete//இதெல்லாம் கூடவா பிஸினெஸ்? அவ்வ்வ்வ் //
ReplyDeleteநன்றி சகோ.சி.பி.செந்தில்குமார். தங்கள் வருகைக்கு.
//வடநாட்டில் மட்டுமல்ல சென்னையில் கூட விற்கிறார்கள்... என்ஜினியரிங் மாணவ மாணவிகள் Drafter வாங்கி வச்சிருக்குற மாதிரி மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகள் சிலர் இப்படி எலும்புக்கூடுகளை வாங்கி வைப்பதுண்டு... //
ReplyDeleteஅப்படியா தலைவா. நன்றி சகோ. Philosophy Prabhakaran.
//மண்டையோட்டுக்கும் ஆபத்தா..//
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ. தேனம்மை லக்ஷ்மணன்.
// குப்பையே காசாகும்போது மண்டையோடு காசாகாதா?
ReplyDeleteஉயிரோடு இருப்பவர்களை கொனறு மண்டயை எடுக்காதாவரை பயமில்லை. //
நன்றி சகோ. வலிபோக்கன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
// நல்லாதான் பண்றாங்க வியாபாரத்தை //
ReplyDeleteநன்றி சகோ. M.R.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
// வெளங்கிடும்...//
ReplyDeleteநன்றி சகோ. ராஜி. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
படிக்கும்போதே திடுக்!
ReplyDeleteஎன்னவெல்லாம் பிசினஸ் ஆகிவிடுகிறது..