Wednesday, November 2, 2011

வியப்பூட்டும் உண்மைகள் - பகுதி 2

1. ஆங்கிலம் பேசுபவர்கள் அமெரிக்காவை விட
சீனாவில்தான் அதிகம் பேர் உள்ளனர்.

2. இங்கிலாந்தின் எலிசபெத் ராணி இறக்கும்பொது அவரிடம்
அணிந்துகொள்ள 3000 கவுன்களுக்கு மேல் இருந்ததாம்.

3. பிரபஞ்சத்தில் சுற்றும் கோள்களில் வீனஸ் மட்டுமே
இடமிருந்து வலமாக சூரியனை சுற்றி வருகிறது.

4. கடலில் வாழும் சில ஆக்டோபஸ் வகைகள் சிலநேரங்களில்
பசிக்கொடுமை காரணமாக தங்கள் கைகளையே பிய்த்து
தின்று விடுமாம்.

5. உங்கள் பிறந்தநாளை நீங்கள் கொண்டாடும் அதே
வேளையில் உலகம் முழுவதும் சுமார் 9 மில்லியன்
நபர்களும் பிறந்தநாள் கொண்டாடுவார்கள்.

6. ராமசேஸ் II என்ற எகிப்திய மன்னன் கி.மு. 1225-ஆம்
ஆண்டில் இறக்கும் போது அவனுக்கு 96 மகன்களும் 60
மகள்களும் இருந்தனராம்.

7. அமெரிக்காவில் 50 சதவிகித திருமணங்கள் மாலையிலேயே
நடக்கின்றனவாம்.

8. உலகத்திலேயே வியாதிகளைப் பரப்புவதில் நம்பர் ஒன் ஆக
இருப்பது நம் வீடுகளில் சாதாரணமாக காணப்படும்
ஈக்கள்தான்.

9. சிவப்புநிற தலைமுடியை உடைய வெளிநாட்டவர்களுக்கு
சராசரியாக 90000 முடிகள் இருக்குமாம். அதே வேளையில்
நம்மைப் போன்ற கருப்புநிற தலைமுடியை
உடையவர்களுக்கு 110000 முடிகள் இருக்குமாம்.

10. ஆடுகளுக்கு மேல் வரிசை முன்பற்கள் இருப்பதில்லை.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

3 comments:

  1. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே .........உங்களுக்கு கருத்து போடும்போது word verification ..ஆங்கில எழுத்தை பதிக்க்கவுமென,சொல்கிறது அதை நீக்கி விடுங்கள்.
    அது இன்னோருபதிவு போடுவது போல.

    சகோதரி நிலாமதி

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிலாமதி. தங்களின் அறிவுரையின்படி Word Verification ஆப்சனை என்னுடைய கமென்ட் பகுதியில் நீக்கிவிட்டேன். நன்றி.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.