அந்த ஊரில் இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய கணவன் இராணுவத்தில் பணிபுரிந்தான். எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்கும் பணிக்காக போர்க்களம் சென்றிருந்தான் அவன்.
கைக்குழந்தையுடன் இருந்த அவள் தன் கணவனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள். போர்க்களத்தில் கொல்லப்பட்ட அவனுடைய உடல்தான் வந்து சேர்ந்தது.
தன் கணவனின் உடலைக் கண்ட அவள் அதிர்ச்சி அடைந்து பித்துப்பிடித்தவள் போல் ஆனாள். யாரிடமும் ஏதும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.
உறவினர்கள் எல்லோரும் வந்து சேர்ந்தனர். கணவனின் பூத உடல் கடைசி மரியாதைக்காக நடுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் கதறி கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால் அவளோ அழாமல் சூனியம் கொண்டவள்போல் வெறித்துப் பார்த்துக்கொண்டே அமைதியாக இருந்தாள்.
அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி " வாய்விட்டு அழுதால்தான் இவள் மனப் பாரம் குறையும். இப்படியே பித்துப் பிடித்தவள் போல் இருந்தால் இவளும் கூட இறந்துவிடுவாள். இவளின் கைக்குழந்தையின் நிலையும் பரிதாபமாகிவிடுமே. யாராவது ஏதாவது செய்து அவளை அழ வையுங்கள். அழ வையுங்கள் " என்று கூப்பாடு போட்டாள்.
சிலர் முன்வந்து அவளை அழவைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தனர். அவளோ அழவில்லை. நேரமும் கடந்து சென்றுகொண்டே இருந்தது. வெகுநேரமாயிற்று. எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கடைசியாக, அங்கிருந்த ஒரு சிறு பெண் விளையாடிக்கொண்டிருந்த அவளின் கைக்குழந்தையை எடுத்து வந்து அவள் மடியில் வைத்தாள். அவ்வளவுதான். தன் குழந்தையைப் பார்த்த அவளின் சோகம் எல்லை மீறியது. " மகனே! நம்மைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாரே உங்கப்பா! நான் என்ன செய்வேன்" என்று குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினாள்.
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!'
.
Tweet | |||||
அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கிற ஒன்றுதான்.மனபாரத்தை குறைக்கிறவைகளில் அழுகையும் ஒன்றாய்,அழுவது கோழைத்தனம் அல்ல/
ReplyDeleteகுழந்தையைப் பார்த்ததும் அடக்கி வைத்திருந்த துக்கம் பொங்கிக் கிளம்ப, அந்த வெண்ணெய்ப் பதுமை உருகி அழலாயிற்று. அருமையாக கதை போல் ஒரு கருத்தை எங்களுக்குள் விதைத்திருக்கிறீர்கள் துரை. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
ReplyDeleteஅழுவதால் கண் சுத்தமாகுதுன்னு எங்க வீட்டுக்காரர்கூட சொல்வாங்க அண்ணா. அந்த அழுகை பெண்களுக்கு மட்டுமே சொந்தமா இருக்கே நம்ம ஊருல. ஆண்கள் துக்கம் தாங்காமல் வாய்விட்டு அழுதால்????!!!!!
ReplyDeleteஉங்க த ம ஓட்டை நீங்களே போடலைன்னா எப்படி? ஓ கரண்ட் கட்டா?
ReplyDelete@ விமலன்
ReplyDelete- ஆம் சார். அழுவது கோழைத்தனமல்ல. இதயம் சேமித்து வைத்திருக்கும் பாச நீர்தான் அது. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்.
@ கூகிற் சிரி.காம்
ReplyDelete- நிச்சயமாக நீங்கள் சொன்னபடி செய்கிறேன். வருகைக்கு நன்றி!
@ கணேஷ்
ReplyDelete- தங்கள் வருகைக்கு அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.
@ ராஜி
ReplyDelete- ஆம் சகோ. ஆண்கள் வாய்விட்டு அழுவதில்லைதான். ஆனால் துக்கம் இருக்கத்தான் செய்பும். வெளிக்காட்டுவதில்லை. அவ்வளவுதான். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி. இப்போ என் ஓட்டைப் போட்டுட்டேன் சகோ. ஓ.கே.வா?
உண்மை நண்பரே..
ReplyDeleteஅழுகையும் சிரிப்பும் அடக்கிவைக்கக்கூடாது
அது
மன அழுத்தத்துக்கும் மனப்பிறழ்வுக்கும் அடிப்படையாகிவிடும்.
அன்பு நண்பரே..
ReplyDeleteஇங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத்தரப்படும்!
என்னும் தங்கள் இடுகையோடு தொடர்புடைய இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_22.html
@ guna thamizh
ReplyDelete- முனைவரே தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தங்கள் சுட்டியைப் பார்த்து தங்கள் பழைய பதிவொன்றையும் கண்டேன். பரவசம் கொண்டேன். நன்றி.
தன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் உண்மையான ஜீவனை மனம் தேடிக்கொண்டிருக்கிறது. அது தன் குழந்தைதான் என்பது கண்முன் காட்டப்பட்டபோதுதான் மூளை உணர்ந்திருக்கிறது. மிகச் சரியானபொழுதில் துக்கம் மடை உடைத்துக் கண்ணீராகப் பிரவாகிக்கிறது. மனம் தொட்டப் பதிவு.
ReplyDeleteஅழுகையில் ....பலருக்கும் தெரிந்த விடயம்...ஆனால் அழுவது ஒரு சில சந்தர்ப்பத்தில் தான்... சில பேர் தனக்காக அழுவர்.இன்னும் சிலர் ..பிறருக்காக அழுவர்..அந்த வகையில் குழந்தைக்காக அழும் இவள் ....?? அருமையான பதிவு...
ReplyDeleteநமக்கு கிடைத்த அற்புதமான
ReplyDeleteமெய்ப்பாடுகளில் முக்கியமானது அழுகை...
முட்ட முட்ட கண்ணீர் வந்திடினும் அடக்கி
வைத்து நெஞ்சுக்குள் மனம் புழுன்காது
வாய்விட்டு அழுதுவிட்டால்
பாரம் குறையுமே...
நிஜம் தான்.
ReplyDeleteஉண்மை தான் சார் ! சகோதரி ராஜி சொல்வது போல் "அந்த அழுகை பெண்களுக்கு மட்டுமே சொந்தமா இருக்கே" அதனால் தான் பெண்களுக்கு அதிகம் மாரடைப்பு வருவதில்லையோ ?
ReplyDelete@ கீதமஞ்சரி
ReplyDelete- ஆம் சகோ. உங்கள் கருத்துரையும் அழகாக இருக்கிறது. வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.
@ சிட்டுக்குருவி
ReplyDelete- தங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.
@ மகேந்திரன்
ReplyDelete- வாங்க மகேந்திரன் சார்! தங்கள் வருகைக்கும் அழகான விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!
@ Rathnavel Natarajan
ReplyDelete- தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete- தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.
இது உண்மை என் அனுபவத்தில்.அழுகை,இசை,எழுத்து இல்லாவிட்டால் நானில்லை !
ReplyDelete