ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்ட் பல்கலைக் கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் சூமின் சீ என்பவர் தலைமையில் ஒரு குழுவாக தீவிர ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர். அதாவது மார்ச் 2008 முதல் ஜூன் 2010 வரை இரண்டு வருடங்களில் அதிக அளவில் குளிர்பானங்களை அருந்தியவர்களை ஆராய்ச்சி செய்தனர். கிட்டத்தட்ட 16,907 நபர்களை இவ்வித ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது முடிவுகள் திடுக்கிடச் செய்தன.
இவ்வித குளிர்பானங்களில் கோக், பெப்சி லெமன் ஜூஸ், மினரல் வாட்டர் முதலியவையும் அடங்கும்.
தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் உள்ள வயதுக்கு வந்த பையன்கள் மற்றும் பெண்களில் பத்தில் ஒருவர் தினமும் இவ்வித குளிர்பானங்களை அரை லிட்டருக்கும் அதிகமாக அருந்தி வந்தனர். இவ்வித நபர்களிடம் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் (மூச்சுத்திணறல்) வரும் வாய்ப்பு மிக அதிகமாக இருந்தது.
மொத்தத்தில் தினமும் அரை லிட்டருக்கும் அதிகமாக இவ்வித குளிர்பானங்களை அருந்தி வந்தவர்களில் 13.3 சதவீதம் மக்கள் ஆஸ்துமாவினாலும் 15.6 சதவீதம் மக்கள் மூச்சுக்கோளாறு பிரச்சினையினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். சிகரெட் புகைப்பவர்களுக்கு பாதிப்பு அதை விட அதிகமாக இருந்ததாம்.
ஆகையால் நம்ம ஊரு இளநீர், மோர், தயிர் போன்ற பானங்களே மிகச்சிறந்தவை ஆகும். ஓ.கே.வா மக்களே?!
.
Tweet | |||||
அந்த குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்திருப்பது நிரூபிக்க பட்டும் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை..மக்களும் அதை வாங்கி குடித்து கொண்டுதான் இருக்கின்றனர்..விழிப்புணர்வு பதிவு...
ReplyDeletecoke குடிச்சா cough வந்து தொல்லை படுத்துமா?
ReplyDeleteசரிதான்.
விழிப்புணர்வு பதிவு நண்பரே! எனக்கு அந்த டேஸ்டே பிடிக்காது. என்றுமே இயற்கை பானங்களில் தான் பயன் அதிகம்.
ReplyDeleteநல்லவேளை... நான் இந்த விஷயங்களைக் குடிப்பதை நிறுத்தி ஆறு வருஷத்துக்கு மேல ஆச்சு... தப்பிச்சேன்... நன்றி துரை.
ReplyDeleteகுளிர்பானங்கள் அருந்துவதை, இன்று நாகரீகத்தின்
ReplyDeleteஅடையாளம் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது!
சா இராமாநுசம்
குளிர்பானம் அது டாக்டரின் வாகனமாக மாறிய விதத்தை சுடிக்காட்டிய சுவாரசியமான பதிவு வாழ்த்துகள்
ReplyDeleteஎனக்குத் தொண்டைவலி வந்துவிடும் அதிகமான குளிர் குடிக்கும் நேரங்களில்.வெயில் காலங்களில்கூட நான் குளிர் நீரைக்கூடத் தவிர்த்துவிடுவேன் !
ReplyDeleteஅருமையான பதிவு உணருவார்களா...?
ReplyDeleteஉங்கள் கருத்துடன் வேறுபடுகிறேன்...
ReplyDeleteஇளநீர், நுங்கு, முதலிய இயற்கை குளிர்பானங்களை அருந்துங்கள்..
ஆஸ்துமா வராது!!