என் இனிய தோழி
இன்று
மகளிர் தினமாம்
போதும்
இந்த
யுக உறக்கம்
இன்றாவது
கண்விழி...!
உன்னைச் சுற்றியுள்ள
ஆண்களுக்காக
நீயாய் உருவாக்கிக்கொண்ட
அந்த
உலகத்தை விட்டு
இன்றாவது
வெளியே வா!
உனக்காக
இங்கு
ஓர் புதிய உலகம்
காத்திருக்கிறது
இடம் கொடுக்கவேண்டும்தான்
ஆனால்
இடத்தையே கொடுத்துவிடக் கூடாது
சமையலறையிலேயே கூடுகட்டி
குடியிருப்பவளே!
வானம் தாண்டி
வியாபித்திருக்கும்
பிரபஞ்சம் அழைக்கிறது
வா! விரைந்தோடி வா!
வந்தெழுது
வானக் கவிதைகள்
உன் தூரிகைகள்
மானுட ஓவியங்கள்
வரையட்டும்
நீ
நிமிரு
திசைகள்
குனியும்...!
.
Tweet | |||||
அருமை////
ReplyDeleteசர்வதேச மகளிர் தினம் அன்று நல்லதோர் கருத்துள்ள கவிதை.... பாராட்டுகள் நண்பரே....
ReplyDeleteஎழுச்சி ஊட்டும் அழகான கவிதை.
ReplyDeleteஇலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html
நீ
ReplyDeleteநிமிரு
திசைகள்
குனியும்...!
அழகாய் முடித்தீர்கள்.வாசித்தேன்.வாக்கிட்டேன்
நல்ல கற்பனைக் கவிதை அருமை வாழ்த்துகள்
ReplyDeleteசிறப்பான கவிதை பாஸ்
ReplyDeleteஅசத்தலான மகளிர் தினக் கவிதை நண்பரே....
ReplyDeleteஒவ்வொரு வார்த்தையினும் அக்கினிப் பிழம்புகள்...
@ ஹாஜாமைதீன்
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.
@ வெங்கட் நாகராஜ்
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.
@ ஸ்ரவாணி
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ. பார்த்து ரொம்ப நாளாச்சே உங்களை.
@ அருள்
ReplyDelete- வருகைக்கு நன்றி. தங்கள் இணைப்பை பார்க்கிறேன்.
@ மதுமதி
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார். ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா. ஓ.கே.
@ ரத்னவேல் நடராஜன்
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.
@ Dhanasekaran
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.
@ K.s.s. Rajh
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.
@ மகேந்திரன்
ReplyDelete- வாங்க மகேந்திரன் சார். வணக்கம். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
முடிவு மிகவும் அருமை!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
நல்ல மகளிர் தினக்கவிதை நண்பரே...வாழ்த்துகள்
ReplyDeleteநீ
ReplyDeleteநிமிரு
திசைகள்
குனியும்...
அருமையானக் கவிதை!
//நீ
ReplyDeleteநிமிரு
திசைகள்
குனியும்...!//
நிச்சயமாக!
அருமை
பெண்களை மதிக்கிறீர்கள் என்பது சந்தோஷமே.பெண்கள் முன்னேற்றம் உங்களின் இதே அன்பிலும் வழிநடத்தலிலும்தான் !
ReplyDeleteபெண்கள் அடிமைப்பட்டு கிடப்பதே பெண்களிடம் தான் என்பது என் கருத்து
ReplyDeleteஅறியாமை சார் !
ReplyDeleteவணக்கம்!
ReplyDelete// உன்னைச் சுற்றியுள்ள ஆண்களுக்காக நீயாய் உருவாக்கிக் கொண்ட அந்த உலகத்தை விட்டு இன்றாவது வெளியே வா! //
மகளிரின் விடுதலை ஆண்களுக்காக எங்கே நிற்கிறது என்பதனைச் சுட்டிக் காட்டும் வரிகள்.
அழகான கவிதை
ReplyDeleteவந்தெழுது
ReplyDeleteவானக் கவிதைகள்.
அழகு அருமை .