Sunday, March 4, 2012

புதிய இதயம் வேண்டும்




ஓ மனிதர்களே!
என்னைப் புரிந்துகொள்ள
ஓர் புதிய இதயம்
வேண்டும் உங்களுக்கு
உங்க பழைய
இதயங்களை
கழற்றி வைத்துவிட்டு வாருங்கள்

எறும்பு கடித்தாலும்
வீக்கத்தை மறந்துவிட்டு
எறும்புக்காக அழும்
இதயங்களுக்குப் புரியும்
என் இதயம்

கையை வெட்டியவுடன்
இரத்தத்தை மழித்துவிட்டு
அவன் காயத்திற்கு
மருந்துபோடும்
இதயங்களுக்குப் புரியும்
என் இதயம்

இரும்பு இதயங்கள் பலருக்கு
தாமிர இதயங்கள் பலருக்கு
அலுமினிய இதயங்கள் பலருக்கு
பிளாட்டின இதயங்கள் பலருக்கு

மலரிதயங்களோ சிலருக்கு
என் இதயமோ அதிலிருக்கு

போகட்டும்
அறுவை சிகிச்சை
செய்துகொள்ளுங்கள்

ஏனென்றால்
இதயமாற்று சிகிச்சை
இடம்பெறாதவரை
சாத்தியமில்லை
இந்த புரிதல்கள்....!










.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

15 comments:

  1. மலரிதயம் கொண்டதனால்தானே
    தங்களிடமிருந்து மணமுள்ள
    தேன் அணைய பயனுள்ள பதிவுகளைத்
    பெற முடிகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உலோக இதயங்களுக்கு மத்தியில் மலரிதயம் கொண்டவர்களைப் பற்றிய புரிதல் எங்ஙனம் சாத்தியம்? மிகச் சத்தியமான வாக்கு. நானும் புரிந்துகொண்டேன் உணர்வுகளை என்பதால் மகிழ்கிறேன், கணநேரமேனும் மலரிதயம் மாற்றிக் கொண்டதற்கு. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. புரிதல்களுக்கும்,மலரிதயம் வாய்க்கப்பெறவும் அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி என்றால் இந்னேரம் ஆஸ்பத்திரி வாயில்கள் நிறந்து போயிருக்காதா?அறுவையும் வேணாம்,ஆஸ்பத்திரியும் வேணாம் தங்களது பிளாக் இருக்கிறதே,தாங்கஆள் இருக்கிறீர்களே,போதாதா?நல்ல பதிவு.வாழ்த்துக்கள்./

    ReplyDelete
  4. ''...இதயமாற்று சிகிச்சை
    இடம்பெறாதவரை
    சாத்தியமில்லை
    இந்த புரிதல்கள்....!..''
    நல்ல வரிகள் வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. மலரிதயங்களோ சிலருக்கு
    என் இதயமோ அதிலிருக்கு
    அருமையான வரிகள் .

    ReplyDelete
  6. கருத்திற்கு அப்பாற்பட்ட மிகச்சிறந்த படைப்பு வாழ்த்துகள் சகோ!!

    ReplyDelete
  7. மென்மையான இதயங்களை பூ என்று சொல்லிவிட்டு அதை அழுத்து அழிக்கவும் சுலபம் என்று முயற்சிக்கிறார்கள்.மாற்றும் இதயத்தைப் பொறுத்ததே மீண்டும்.நல்லதொரு சிந்தனை !

    ReplyDelete
  8. நல்ல கவிதை.... இப்போது பெரும்பாலான மனித இதயங்கள் இரும்பால்தான் இருக்கிறது....

    ReplyDelete
  9. சார் ! என்ன சொல்வதென்றே தெரியவில்லை ! simply சூப்பர் !

    ReplyDelete
  10. நல்லதொரு கவிதை. இரும்பாலன இதயம் அன்பால் மட்டுமே மலரிதயமா மாறும். வித்தியாசமான கவிதை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. இதயத்தை இத்தனை வகையில் பிரித்த தாங்கள்
    தங்களுக்கு மலரிதயம் என்றீர்கள்!அம் மலரில் கூட
    மோப்பக் குழையும் அனிச்ச மலர் ஆகும் என்றே நான்
    கருதுகிறேன்
    கவிதையும் கருத்தும் அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. அருமையான பதிவு..
    இதயம் எல்லோருக்கும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை................ மலரிதயத்தை அடைந்தவர்களின் வழியில் பல இதயங்களை கடந்திருப்பார்............ இப்போது இருக்கும் மலரிதயம் அனுபவ பக்குவத்தால் வந்ததாகும்...

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.