Thursday, March 8, 2012

சாதாரண மனிதன் (An Ordinary Guy)




சின்ன சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:-

எனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர் உண்டு. ஆள் பார்க்க சாதுவாய் இருப்பார். யாரிடமும் அதிகமாய் பேசுவதில்லை. எல்லாரும் அவரை சாதாரண மனிதனாகத்தான் பார்த்தனர். அவரும் அடிக்கடி நான் ஒரு சாதாரண மனிதனே என்றே சொல்லுவார். ஆனால் அவரை நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். அவர் எவ்வளவு பெரிய மனிதரென்று.

அரிமா சங்கத்தில் உறுப்பினர். அடிக்கடி தவறாமல் இரத்ததானம் செய்வார். ஒரு சிறிய குழு ஒன்று ஆரம்பித்து அவர்களெல்லாம் தங்களுக்கு நெருங்கியவர்கள், அலுவலகப் பணியாளர்களிடம் சிறு தொகைகளை வசூலித்து லட்சக்கணக்கில் அந்த நிதியை உயிருக்குப் போராடும் இதயநோயாளிகள் மற்றும் இதர நோயாளிகளுக்கு அளித்து அவர்கள் உயிரைக் காப்பாற்றி, இவ்வாறு அரிய பல செயல்களை சத்தமின்றி செய்வார். ஆனால் எதையும் வெளிக்காட்டுவதில்லை. வெற்றுத் தம்பட்டமும் அடித்துக்கொள்வதில்லை.

அதன் காரணமாக நிறைய பேருக்கு அவரது இன்னொரு முகம் தெரியாது. இப்படிப்பட்ட மனிதர்களை எங்கும் காணலாம். இன்னொரு கூட்டம் உண்டு. அவர்கள் செய்வது அற்ப காரியமாயிருக்கும். ஆனால் அதற்கு இவர்கள் அடிக்கிற தம்பட்டம் இருக்கிறதே. அப்பப்பா! போஸ்டர் அடித்து விளம்பரம் அடிக்காத குறையாக தங்களை வெளிக்காட்டுவார்கள்.

ஆனால் சூரியனுடைய கதிர்களை இருட்டு மறைக்க முடியாதோ அப்படி இந்த சாதாரண மனிதர்கள் ஒருநாள் நட்சத்திரம் போல் பிரகாசிப்பார்கள். அவர்களின் ஒளி என்றும் மறையாது. ஆனால் இந்த தம்பட்ட பார்ட்டிகளின் சரக்கும் ஒருநாள் வெளியே வந்து நாறியும் போகும். அன்று தங்கள் முகத்தை தொங்கப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?


“சாதாரண மனிதர்கள் ஒரு நாள் அசாதாரண மனிதர்களாய் மதிக்கப்படுவார்கள். அசாதாரண மனிதர்களைப் போல நடிப்பவர்களின் வேஷம் ஒருநாள் கண்டிப்பாக கலையும்”



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

11 comments:

  1. சாதாரண மனிதர்... -:)

    ReplyDelete
  2. சாதாரணமானவர்கள்தான் நிறையவே உதவிகள் செய்கிறார்கள் சத்தமில்லாமல் !

    ReplyDelete
  3. நான் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி ,எளிமையான மனிதராகவே இருந்துவருகிறேன் & வருவேன்

    ReplyDelete
  4. //“சாதாரண மனிதர்கள் ஒரு நாள் அசாதாரண மனிதர்களாய் மதிக்கப்படுவார்கள். அசாதாரண மனிதர்களைப் போல நடிப்பவர்களின் வேஷம் ஒருநாள் கண்டிப்பாக கலையும்”//

    100% True...

    ReplyDelete
  5. வணக்கம் பாஸ்
    சாதாரன மனிதர் இப்படி நிறைய பேர் அமைதியாக பிறருக்கு உதவி செய்கின்றார்கள்
    நல்ல ஒரு பகிர்வு பாஸ்

    ReplyDelete
  6. உதவிகள் செய்கிறவர்கள் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  7. நிறைகுடம் எப்போதும் தளும்புவதில்லை

    ReplyDelete
  8. புகழ் போதைக்கு அடிமையாகாத பலர்
    இப்படி இருப்பதனால்தான் இன்னமும் மனிதத் தன்மை
    இங்கே ஜீவித்திருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உயர்ந்த உள்ளங்கள் என்றுமே ஆர்பரிப்பதில்லை.

    ReplyDelete
  10. சாதாரண மனிதர்கள் ஒரு நாள் அசாதாரண மனிதர்களாய் மதிக்கப்படுவார்கள்.//
    உண்மைதான் சகோ .

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.