ஒரு நிறுவனமோ அல்லது கடையோ செழிப்பாக இருக்க, செம்மையான முறையில் செயல்பட முதலாளியும், தொழிலாளியும் ஆரோக்கியமான மனோநிலையில் இருக்க வேண்டும். முதலாளிகள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் வேலையாட்கள் அற்புதமாக செயல்படுவார்கள். அதற்கான சில டிப்ஸ் பின்வருமாறு:
1. வெற்றிக்கான 80/20 சட்டத்தை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். அதாவது எண்பது சதவீத நேரங்களில் நான் சரியான தீர்மானங்களை எடுப்பேன். ஆனால் இருபது சதவீத நேரங்களில் நானும் தவறான தீர்மானங்கள் எடுக்கிறேன். தவறுகளைச் செய்கிறேன். அல்லது சிறப்பாக செய்திருக்க மாட்டேன். என்னுடைய பணியாளர்களுக்கும் இதே 80/20 சட்டத்தின்படியான சுதந்திரத்தை அளிக்கிறேன். அவர்கள் தவறு செய்யவும் வாய்ப்புண்டு என்பதை அறிகிறேன்.
2. நம் பணியாளர்களின் முன்னேற்றத்தை சோதிக்கலாம். தவறில்லை. ஆனால் எப்போதும் அவர்களையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமென கூறக் கூடாது. நம்முடைய ‘நிபுணத்துவ’ அணுகுமுறைக்குச் சாதகமாக அவர்களின் வேலையைத் தள்ளிவிடக் கூடாது. தலைவராக நீங்களிருப்பதால் மற்றவர்களுக்கு சாதகமாக இருக்கும் பொருட்டு அவர்களுடைய தீர்மானங்களை மாற்றக் கூடாது.
3. நீங்கள் அதிகாரம் அளிப்பவரிடம் (வேலையாளிடம்) நம்பிக்கையுடனிருக்க வேண்டும்.
4. உங்கள் முறைப்படிதான் அது செய்யப்பட வேண்டும் என்ற முறையிலிருந்து விடுபட்டு இளைப்பாறுங்கள்.
5. வேகமாகச் செய்யும் ஆசையிடமிருந்து பொறுமையுடனிருங்கள்.
6. அதிகாரத்தை அளிப்பதில் உள்ள உங்கள் சுதந்தரத்தின் மூலம் மற்றவர்களின் முன்னேற்றத்தைக் காணுங்கள்.
7. தகுதியுள்ள மக்களைத் தேர்ந்தெடுங்கள்.
8. அவர்கள் மீதுள்ள உறுதியை வெளிப்படுத்துங்கள்.
9.அவர்களுடைய கடமைகளைத் தெளிவாக்குங்கள்.
10. சரியான அதிகாரத்தை அவர்களுக்கு அளியுங்கள்.
11. எப்படி வேலை செய்ய வேண்டுமென அவர்களுக்கு அடிக்கடி கூறாதீர்கள்.
12. எதற்கெல்லாம் உங்களுக்கு கணக்கு கூறவேண்டுமென்பதை அவர்களுக்கு கூறுங்கள்.
13. அவர்கள் செயல்படும் முறையைக் கவனியுங்கள்.
14. எப்போதாவது தவறு செய்வதற்கு இடமளியுங்கள். சாத்தியமிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
15. சிறப்பாக செய்யப்பட்ட வேலைகளுக்கு புகழையும், பெருமைகளையும் அளியுங்கள்.
இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் வேலையாட்கள் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள்.
டிஸ்கி:
‘தலைவர்கள் செய்யும் பத்து தவறுகள்’ என்ற நூலிலிருந்து ஹான்ஸ் பின்ஸல் (Hans Finzel).
Tweet | |||||
Hans Finzel வழிமுறை பகிர்வுக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteஉங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
ReplyDeleteபயனுள்ள பதிவு. நன்றி...
பயனுள்ள பகிர்வு.... நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே....
ReplyDeleteஅருமை சார். புத்தகம் படிக்கும் ஆர்வத்தை பதிவு தந்தது
ReplyDeleteசிறந்த பகிர்வு.... நன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல்!
ReplyDeletevara vendiya -
ReplyDeletevantha tozhil munaivarkalukku-
nalla aalosanai!
nantri!
வலைச்சரப் பணிக்கிடையே
ReplyDeleteதங்கள் வலையையும் சிறப்புற
நடத்தும் தங்களுக்கு என்
பணிவான வணக்கங்கள்...
மனித வள உறவு மேம்பாடு
என்பதை முதலாளிகள் எவ்வாறு
உணர்ந்துகொள்ள வேண்டும் என்று
உணர்த்தும் அருமையான ஒரு
புத்தகத்திலிருந்து ....
எங்களுடன் பகிந்துகொண்ட செய்திகளுக்கு
நன்றிகள் பல...
வலைச்சரப் பணி... என் போன்றவர்களி்ன பதிவுக்கு கருத்துக்கள்... இதுக்கிடையில இப்படி ஒரு அழகான பகிர்வு! எக்ஸலண்ட் துரை! கருத்துக்கள் எல்லாம் அருமை! அதிலும் 4ம் 15ம் நிறைய முதலாளிகள் கடைப்பிடிப்பதில்லை.
ReplyDeleteசிறப்பாக செய்யப்பட்ட வேலைகளுக்கு புகழையும், பெருமைகளையும் அளியுங்கள்.
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
வலைச்சரப்பணிக்குள் இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.முதலாளியாய் இருப்பவர்கள் கவனிப்பார்களா இப்பதிவை !
ReplyDeleteநல்ல தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிகச்சிறந்த அறிவுரைகள்.பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதொழில் முனைவோருக்கு மட்டுமல்ல, குடும்பத்தையும் நன்முறையில் நிர்வாகிக்க விரும்புவோர் தெரிந்திருக்கவேண்டிய முக்கியத் தகவல்கள். வலைச்சரப் பணிகளினூடே இப்பணிகளும் செய்வது தங்களது நல்ல நிர்வாகத்திறனையே காட்டுகின்றன. பாராட்டுகள் துரைடேனியல்.
ReplyDelete3. நீங்கள் அதிகாரம் அளிப்பவரிடம் (வேலையாளிடம்) நம்பிக்கையுடனிருக்க வேண்டும். // இது மிகவும் முக்கியம் ஆமாங்க வலைச்சரப்பணிக்குள் இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.
ReplyDeleteமுதலாளிகளுக்கும்,வேலையாட்களுக்கும் அவசியம் தேவையான அறிவுரைகள்.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
சிறப்பான பதிவு ! நன்றி சார் !
ReplyDeleteதேவையான வாழ்வியல் சிந்தனை அன்பரே
ReplyDeleteநேற்று இதற்குப் பின்னூட்டமிட்டிருந்தேன். இன்று காணாமல் திகைக்கிறேன். நிறைய வலைகளில் என் பின்னூட்டங்கள் மறைந்துவிட்டதில் வருந்துகிறேன்.
ReplyDeleteஇந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் அனைத்தும் தொழில் முனைவோருக்கு மட்டுமல்ல, ஒரு குடும்பத்தை நன்முறையில் நிர்வகிக்க விரும்புவோரும் கடைப்பிடிக்கவேண்டியவை. வலைச்சரப்பணியினூடே இந்த வலையிலும் பதிவுகளைத் தொடர்ந்து இடுவதன் மூலம் தங்கள் நிர்வாகத்திறனை மெச்சுகிறேன். பாராட்டுகளும் நன்றியும் துரைடேனியல்.
@ ரெவரி
ReplyDelete@ ஆஷிக் அஹ்மது
@ வெங்கட்ராஜ்
@ மோகன்குமார்
@ தமிழ்வாசி பிரகாஷ்
@ தனிமரம்
@ Seeni
@ மகேந்திரன் கணேஷ்
@ இராஜராஜேஷ்வரி
@ ஹேமா
@ ஹாஜாமைதீன்
@ சென்னைப்பித்தன்
@ Koodal Bala
@ சசிகலா
@ கோகுல்
@ ரத்னவேல் நடராஜன்
@ முனைவர் குணசீலன்
@ திண்டுக்கல் தனபாலன்
- வருகை தந்து வாக்களித்து பின்னூட்டமிட்ட உங்கள் அனைவருக்கும் இதயம் கலந்த நன்றிகள். தொடரும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.
@ கீதமஞ்சரி
ReplyDelete- சகோ. கீதா! தங்களின் கருத்துரையை இந்த பிளாக் ஸ்பாம் போல்டரில் ஒதுக்கிவிட்டது. அதனால்தான் தங்களின் கருத்துரை மறைந்துவிட்டது. ஸ்பாம் போல்டரில் போய் அதை Unhide செய்த பிறகு இப்போது பாருங்கள். உங்கள் பழைய பின்னூட்டம் வந்து விட்டது. பயப்பட தேவையில்லை. இந்த கூகுள் இருக்கே இப்படித்தான் ஏதாவது எடக்குமுடக்கா செய்துவிடும் சிலநேரங்களில். முன்பு ஒருமுறை இப்படி சகோ.சசிகலா அவர்களது பின்னூட்டத்தையும் ஸ்பாம் என எடுத்துக்கொண்டது. அதையும் இப்படித்தான் Unhide செய்ய வேண்டியதாகிவிட்டது. அதன் பிறகு இந்த பிரச்சனை இல்லை. நடந்த கோளாறை பின்னூட்டத்தில் தெரிவித்த உங்கள் அன்பிற்கு நன்றி. தொடரும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.
நீங்க அவசியம் படிக்கனும்.........நடுநிலையான கருத்து கூறவும்
ReplyDeleteமகுடாதிபதிகள் ஆகும் மதவெறியர்கள்!