Sunday, March 25, 2012

வயிற்றுவலியை சாதாரணமா நினைக்காதீங்க!




உங்கள் உள்ளுறுப்புகள் உருகும் நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு. என்ன உள்ளுறுப்புகள் உருகுமா? அதென்ன மெழுகா? என்னய்யா கதை விடுறீங்க? அப்படிங்கறீங்களா? இக்கட்டுரையை முதல்ல படியுங்க ப்ளீஸ்.

உள்ளுறுப்புகள் உருகுமா? ஆம். உருகும். நமது உள்ளுறுப்புகள் உருகும் என்பதை யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அது உண்மை. லட்சக்கணக்கான மக்கள் இந்நோயினால் உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

சாதாரணமாக நமக்கு வயிற்று வலி வருகிறது. சில வயிற்றுவலிகள் சாதாரணமானவைதான். பிரச்சினை இல்லை என்று விட்டுவிடலாம். ஆனால் எளிய பரிசோதனைகளுக்கு அகப்படாத வயிற்று வலிகள் மிகவும் ஆபத்தானவைகள். மருந்து சாப்பிட்டும் சரியாகாமல் வெகு நாட்களாக வயிறு வலித்துக் கொண்டே இருந்தால் இந்த உள்ளுறுப்பு உருகும் நோய்க்கு நீங்கள் ஆட்பட்டிருக்கலாம்.

நம் வயிற்றின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கணையம்தான் (Pancreas) இந்நோய்க்கு முக்கிய காரணமாகிறது. இந்த கணையத்தில் ஏற்படுகிற கோளாறு அல்லது வீக்கம் கணைய அழற்சி எனப்படுகிறது (Pancreatitis). கணைய சுரப்பியின் தாறுமாறாக சுரத்தலே இந்த கோளாறுக்கு காரணம். அதன் மூலம் உணவு செரிக்க கணையம் சுரக்கும் என்சைம்களின் அளவு எல்லையைத் தாண்டுவதால் இப்படி கோளாறுகள் ஏற்படுகிறது.

சாதாரணமாக தொடர்ந்து ஏற்படும் வயிற்றுவலியானது சில நேரம் இந்த கணைய அழற்சிக்கு அறிகுறியாக இருக்கலாம். இது மிகவும் மோசமான ஒரு நோயாகும். ஆனால் நம்மில் சிலர் தொடர்ச்சியான வயிற்றுவலிக்கு மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட்டு சரியாகிவிடும் என்று கருதிவிடுகிறோம். ஆனால் விளைவுகள் மேலும் மோசமாகிவிடுகின்றன.

நம்மில் நிறைய பேருக்கு கணையம் என்றால் என்ன? அதன் வேலைகள் என்னென்ன? என்று கூடத் தெரியாமல் இருக்கிறார்கள். இதயம், நுரையீரல் ஆகியவை என்னவென்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்தக் கணையம் என்றால் என்ன என்று கேட்டால் ‘ஙே’ என்று விழிப்பார்கள்.




கணையம் என்றால் என்ன என்று இரத்தினச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். மேலே உள்ள படத்தைப் பாருங்கள். வயிற்றின் மத்திய பாகத்தில் அவரைக்காய் போல குறுக்காக இருக்கிறதே அதுதான் கணையம் (Pancreas).

கணையம் சிறிய உறுப்பாக இருந்தாலும் நம்முடைய உடலில் மிகப் பெரிய வேலையைச் செய்கிறது. மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு. இது நாம் உண்ணும் உணவைச் செரிக்க உதவும் நொதிப்பொருளை (என்சைம்னாதான் புரியும். இல்லே) சுரக்கிறது.

உணவுப்பொருட்களை மாவு போல ஆக்கி சத்துக்களை பிரித்தெடுக்க பெரும் உதவி செய்கிறது. திட உணவு இதனால்தான் திரவ உணவாகி, சத்துக்களாக பிரிக்கப்படுகிறது. கொழுப்பு, புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ் ஆகியவை பிரித்து உடலெங்கும் சக்தியூட்டுவதற்காக அனுப்பப்படுகின்றன. வயிற்றில் சுரக்கும் இந்த அமிலத்தை கட்டுப்படுத்தும் மற்றுமொரு திரவத்தையும் இது சுரக்கிறது.

இந்த என்சைம்கள் சரியாக சுரக்கப்படவில்லை எனில் உண்ணும் உணவு செரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு மலச்சிக்கல் உட்பட பல முக்கிய கோளாறுகள் உண்டாகி விடுகின்றன. மலம் மிகவும் கெட்டியாகப் போகும். அல்லது தண்ணீரைப் போல கழியும். இந்நிலை தொடர்ந்தால் பிரச்சினை பெரிதாகும். இச்சுரப்பிகளின் கோளாறுகளினால் உணவானது சரியாக கிரகிக்க முடியாமல் போய்விடும். எடை குறைதல் உண்டாகும்.

கணையத்தில் ஏற்படும் கட்டி அல்லது வீக்கம் அல்லது இந்த சுரப்புக் கோளாறுகள் காரணமாக வயிற்று வலி உண்டாகிறது. நாள்பட்ட வயிற்றுவலியை தொடர்ந்து அலட்சியம் செய்வோமானால் ஒரு கட்டத்தில் கணையமானது உருகத் தொடங்குகிறது. அதாவது உடையத் தொடங்குகிறது. அல்லது அழியத் தொடங்குகிறது.

பழுதடைந்த கணையம் சுரக்கும் அதிக அளவிலான திரவமானது உடலிலுள்ள மற்ற உறுப்புகளையும் சென்று கரைக்கத் துவங்குகிறது. அதாவது உருக்கத் தொடங்கி விடுகிறது. இறுதியில் மரணம் உண்டாகிறது.




மது அருந்துபவர்களுக்கு இந்த வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே அதிக அளவில் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் போன்ற பெரிய சோதனைகளை உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து இந்நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக மது அருந்தும் பழக்கத்தை உடனடியாக விட்டு விடுங்கள். எதுக்குங்க பொல்லாப்பு?!

வாழ்க நலமுடன்!







டிஸ்கி:

கடுமையான பணிப்பளு காரணமாக பல நாட்கள் (இரண்டு வாரங்களுக்கும் மேலாக) வலைப் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. கருத்துரை எதுவும் இட முடியாமலும் போய்விட்டது. நண்பர்கள் மன்னிக்க. இனி தொடர்ந்து வரலாம் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். எல்லாம் காலத்தின் கையில்.

ஒரு வேண்டுகோள்:

புதிய வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் இணைய இதழான வலைச்சரத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு நான் ஆசிரியராக பொறுப்பேற்று உள்ளேன. ஆகையால் நீங்கள் அனைவரும் வலைச்சரத்திற்கு வருகை தந்து கருத்துரைகள் இட்டு எனக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி!






.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

26 comments:

  1. கணையத்தின் பணி பற்றி எளிமையாகவும் அதன் பாதிப்பினால் ஏற்படும் விளைவுகளையும் அழகாகக் கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. அவசியமான பகிர்வு.பகிர்தலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. நன்றாகச் சொன்னீர்கள் நண்பரே..
    தேவையான பகிர்வு.

    ReplyDelete
  5. அவசர உலகிற்கு அவசியமான பதிவு.

    ReplyDelete
  6. படிச்சாலே பயமாயிருக்குப்பா... ஆரோக்கியம் மிக முக்கியம் அமைச்சரே! நான் எப்பவுமே குடிக்க மாட்டேன்ப்பா!

    ReplyDelete
  7. ellarum arindhu kollavendiya saidhi padhivu nandru
    surendran

    ReplyDelete
  8. Valuable article. If you lose control of pancreas it will end in serious diabetes problems. Thanks for the awareness.

    ReplyDelete
  9. @ விச்சு

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  10. @ ஸாதிகா

    - தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சகோதரம்.

    ReplyDelete
  11. @ Guna Thamizh

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி முனைவரே!

    ReplyDelete
  12. @ Koodal Bala

    - வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் தொடரும் ஆதரவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  13. @ கணேஷ்

    - வாங்க கணேஷ் சார். குடிக்க மாட்டீங்களா? ஓ.கே. அப்படித்தான் இருக்கணும். நல்ல பிள்ளைதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  14. @ Seeni

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  15. @ Anonymous

    - வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி அனானிமஸ் சார்.

    ReplyDelete
  16. @ Peaceful Life

    - தங்கள் முதல் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  17. @ சசிகலா

    - வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  18. தேவையான செய்தியை நல்லாச்சொன்னீங்க.

    ReplyDelete
  19. மிகவும் பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள் நண்பா.தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. இவ்வளவு விஷயம் இருக்கா...பயனுள்ள தகவல்கள்...tm 7 ...ஹி ஹி

    ReplyDelete
  21. @ Kuttan

    - தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  22. @ முஹம்மது சபி அப்துல அஜீஸ்

    - தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  23. @ ஹாஜா மைதீன்

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  24. நல்ல பதிவு. எப்போதும் பயனுள்ள பதிவு எழுதும் நீங்கள் முடியும் போது எழுதுங்கள். ப்ளாகின் சௌகரியமே அது தான்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.